Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடிவு தோன்றுமா?
#1
[size=24] விடிவு தோன்றுமா?

சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து
சமத்துவம் என்றுவரும் - வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு
கேளா நாள்வருமா?

சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள்
சிரித்திட வழிவருமா - உடல்
தெருநடு வீதி தனில்விழும் அந்த
ஓருநிலை மாறிடுமா?

மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான்
மண்ணில் வந்திடுமா? - மொழிச்
சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச்
செகத்தில் நாள் வருமா?

அடக்கு முறையும் அசுரத் தனமும்
அடியோடு ஓடிடுமா? - இனி
நடக்கும் காலம் தனிலே தானும்
நன்மை கூடிடுமா?

அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து
அகிம்சை நிலை பெறுமா? - புவி
விடிவு என்று புலரும் பொழுதை
விரைவில் ஏற்றிடுமா?
>>>>******<<<<
Reply


Messages In This Thread
விடிவு தோன்றுமா? - by சந்தியா - 04-13-2006, 07:57 AM
[No subject] - by Thulasi_ca - 04-26-2006, 06:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)