Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க
#3
<b>எமது கடற்கலத்தில் விரைவில் பயணம்: தயாமோகன் </b>

தென் தமிழீழத்திலிருந்து கிளிநொச்சி எமது கடற்கலத்தில் எமது கடற்பரப்பில் விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த தயாமோகன்இ ஜெனீவா பேச்சுகள் தொடங்கும் 19 ஆம் நாளுக்கு முன்னராக எமது கடற்பயணம் மேற்கொள்ளப்படும் என்றார்.

இருப்பினும் தங்களது கடற்பயண நாள் தொடர்பாக எமக்கு விடுதலைப் புலிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் கூறியுள்ளார்.

அத்தகைய பயணம் மேற்கொள்ளப்படும் நிலையில் கடற்பிரதேசங்களில் நாம் கண்காணிப்புப் பணியில் தீவிரம் செலுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தந்திற்கமைய நல்லெண்ண செயற்பாடாக தென் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் கிளிநொச்சிக்கு வருகை தர வான்வழிப் பயண ஏற்பாடுகள் முன்னர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அண்மைக்காலமாக இக்கோரிக்கை இழுத்தடிக்கப்பட்டுஇ உரிய பதிலளிக்கப்படாதுஇ கடைசி நேரத்தில் நிராகரிக்கப்படுவதாக சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்படுவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து தங்களது வலிமையான கடற்படையின் துணையுடன் தங்களது கடற்கலத்திலேயே பயணம் மேற்கொள்ளப்படும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த சிறிலங்கா அரசாங்கம்இ தமது கடற்கலத்தில் கண்காணிப்புக் குழுவினர் வழித்துணையுடன் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தது. இதை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்து தங்களது கடற்பயணத்தை உறுதி செய்துள்ளனர்


செய்தி: புதினம்
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by Sujeenthan - 04-12-2006, 11:38 PM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 04:01 AM
[No subject] - by Vaanampaadi - 04-13-2006, 08:56 AM
[No subject] - by uoorkkruvi - 04-13-2006, 10:18 AM
[No subject] - by uoorkkruvi - 04-13-2006, 10:21 AM
[No subject] - by uoorkkruvi - 04-13-2006, 10:27 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 01:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)