04-12-2006, 01:56 PM
ஒரு நாட்டை அல்லது இயக்கத்தை அங.கீகரிக்கிறதப் போலதான் தடை செய்யிறதும். ஒண்டும் செய்யாம விடுறத்துக்கும் தடைசெய்யிறதுக்கும் கன வித்தியாசம் இருக்குது. தடைசெய்துபோட்டுக் கவனிக்காம விடுறாங்கள் எண்டத வச்சிக்கொண்டு நாங்கள் தவறான அபிப்பிராயத்துக்கு வர ஏலாது. மிச்சம் கவனமாயிரு நினைச்சா நான் உன்னை என்னவும் செய்வன் எண்ட ஒரு மிரட்டலோட கவனியாம விட்டிருக்கிறது இப்ப பிரித்தானிய அரசாங்கம். வெளிப்படையான நடவடிக்கைகள் எதிலயும் இயக்கம் ஈடுபட ஏலாது. தடைசெய்த அரசாங்கங்களெல்லாம் மக்கள் எழுச்சிக்குத் தடைபோடல்ல. அதனாலதான் மாவீரர் நாளை தேசிய ஏழுச்சி நாள் எண்ட பேரில கொண்டாட அனுமதிக்கிறாங்க. மக்களுடைய ஒருமித்த ஆதரவோட செய்யப்படுற எந்த நிகழ்ச்சியிலயும் ஒரு கொஞசமாவது பிரச்சனையள் வருமாயிருந்தால் உடனே தடை வரும். யுகே இல தமழர் உதைப்பந்தாட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை, மைதானத்தைத் தரமறுப்பு எல்லாம் ஏற்பட்டதுக்குக் காரணம் அங்கே நடந்த வன் முறைகள்தான். தடை செய்யப் படாத இயக்கமாக இருக்கிறதிலும் பார்க்க தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறதில ஒரு நன்மை மறைஞ்சிருக்குது. இனி அடுத்த கட்டம் தடையை நீக்கிறது அதாவது மறைமுகமா அங்கீகரிக்கிறது எண்ட செய்தி அதாவது எச்சரிக்கை சிறீலங்கா அரசாங்கத்துக்கு இதன்மூலம் சொல்லயப்படுது பாருங்கோ. எதிலயும் நல்லதையும் பார்க்கவேணும்.
S. K. RAJAH

