04-12-2006, 11:11 AM
சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த தடைசெய்வது என்ன நியாயம்? இவ்வாறான செயல் சிறுபான்மை மக்களை அடிமைகளாக்கி அடக்கி முடக்கி வைக்கும் சிங்களபேரினவாத அரசுக்கு கனடா ஆதரவு வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சட்டங்களை இயற்றி கட்டுப்படுத்தி இருக்கலாம். முற்றுமுழுதாக தடைசெய்வது அங்கு இத்தனை ஆண்டுகாலம் வாழும் தமிழ்மக்களைப் பிடரியில் பிடித்து வெளியே தள்ளுவதற்கு இணையான செயல். சமாதானத்திற்கு மட்டும் இடம் கொடுக்கிறோம் என்று சொல்வது "வீட்டைக்காலிசெய் பிச்சைக்கு வேண்டுமானால் வந்துபோ" என்று சொல்வது போன்று இருக்கிறது. எது எப்படி இருந்தாலுமு; இது சிங்கள பேரினவாதிகள் முன் கொஞ்சம் வெட்கிதலைகுனிய செய்யும் சம்பவமாகிவிட்டது.

