04-11-2006, 10:07 AM
நாம் குரோத அரசியல் இராணுவ தந்திரோபாயங்கள் மூலம் உட்பகையை அணுகும் கட்டத்தைக் கடந்துவிட்டோம். புூரண கட்டுப்பாடுள்ள பிரதேசத்தில் நின்று கொண்டு தமிழ்த்தேசியத்தை விரிவுபடுத்தி நாட்டை நிறுவக்கூடிய அனைத்துச் சாத்தியங்களையும் பெற்றுவிட்டதால் நட்புக்கரம் நீட்டி உட்பகையை இல்லாதொழிக்கவேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டுத் தொடர்ந்தும் குரோத மனப்பான்மையைப் பேணுவது நம்மை நாமே அழிக்கவே ஏதுவாகும். மேற்கு நாடுகள் எமக்குப் பயங்கரவாதப் பட்டம் சுூட்டுவதற்கான காரணம் நமது தேசிய விடுதலைக்கான முனைப்பன்று. நமக்குள் உள்ள பகைமையை நாமே வளர்த்தெடுப்பதும் வன்முறையின் மூலம் அதற்கான தீர்வைப் பெறமுனைவதுமேயாகும். மேற்கு நாடுகளின் பார்வையில் மாற்றுக்கருத்துக் கொண்ட நாம் கூறும் துரோகிகளும் பயங்கரவாதிகளே. தடைசெய்யப்படுமளவுக்கு அல்லது பட்டியலிலிடப்படுமளவுக்கு அவர்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. சிறீலங்கா அரசு தேர்தல்மூலம் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால் அதன் ஆயதப் படைகளைப் பயங்கரவாதிகளாகக்கூற எந்த நாட்டினாலும் முடியாது. அப்படிக் கூறினால் ராஜதந்திர உறவுகள் கெட்டுப்போகும். நமது செவி மட்டுமே முறுக்கப்படக் கூடியது. இதுவே யதார்த்த நிலையாகும். ஆயினும் எமது ஒருமித்த குரலை ஒடுக்க எவராலும் முடியாது. அதுவும் அங்கீகரிக்கப் படவேண்டிய ஒரு நாட்டின் குரலாகவே இருக்கும். ஆனால் துரதிஷ்ட வசமாக பிரிவுகளும் குரோதங்களும் எம்முள் வளர்கின்றனவேயொழியக் குறைவதாயில்லை. புூனைக்கு மணிகட்டுவது யார்? எமக்குள்ளே சமாதானத்தைக் கொண்டுவருவது யார்? இதுவே இன்றுள்ள கேள்வி. இன்றைய நிலையில் மாற்றுக் குழுக்களையும் நட்புக்கரம் நீட்டி அழைத்து எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கருத்துச் சொல்வதுகூடச் சிலவேளை அதிகப் பிரசங்கித்தனமென்று இகழப்படவும் கூடும். சேக்ஸ்பியர் மட்டும்தான் கவிதைபாடவேண்டும் என்பதுபோல அரசியலைக் குறித்த சிலர் மட்டுமே பேசவேண்டுமென்ற பாரம்பரியம் ஈழத் தமிழரிடையே வளர்ச்சி கண்டுள்ளது..
S. K. RAJAH

