04-11-2006, 09:11 AM
நிர்மலன் அவர்களின் கருத்து நு}று வீதமும் சரியானதே. தேசியத்துக்கான பல ஆதரவாளர்கள் ஆர்வமுள்ளோர் புறந்தள்ளப்பட்டு ஒரு வட்டத்திற்குள் புலம்பெயர் நாடுகளில் தமிழீழத் தேசியம் சுழன்று வருவதை நானும் அவதானித்திருக்கிறேன். ஆர்வத்துடன் உதவிசெய்ய சுனாமியின்போது வன்னிக்குச் சென்றவர்களின்மீது பலர் தனிப்பட்ட குரோதம் காரணமாகப் பழிகளைச் சுமத்தி தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான தகவல்களைக் கொடுத்ததன்மூலம் தங்கள் வஞ்சங்களைத் தீர்த்துக்கொண்டது யாவரும் அறிந்ததே. புலத்தில் ஒருவகைச் செல்வாக்கின் அடிப்படையிலேயே விடயங்கள் நடைபெறுகின்றன. இங்கு தமிழ்த்தேசியத்தை நேசிப்போரை இனங்கண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று பிரச்சாரத்தை முன்னெடுக்ககூடிய முயற்சிகளை இடையில் நின்று தடுப்போர் பலருள்ளனர். துரோகி முத்திரை குத்தும் அதிகாரத்தை இங்குள்ளோர் சிலர் சுயமாகவே தம் வசம் வைத்திருப்பதாலும் அவர்களின் செலவாக்கு எடுபடுவதாலும் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாகிக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது. கனடிய அரசின் அண்மைய தடைக்கான முக்கிய காரணங்களில் ஹியுமன் றைட் வாச்சின் அறிக்கையும் ஒன்றாகும். இடைத்தரகர்களின் அடாவடித் தனங்களால் தேசியத்தின்மீது உண்மை ஆர்வம் கொண்டிருநத பலர் அதற்கு எதிராகத் திருப்பிவிடப் பட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பிரசார நடவடிக்கைகளே இந்த அறிக்கைக்கும், தடைக்கும் முக்கிய காரணங்களாகும். சர்வதேசத்தில் போராட்டத்திற்கான நியாயங்களை முன்வைத்துச் செய்யவேண்டிய பிரசாரத்தைவிட அதற்கு உடந்தையாக இருக்கும் நம்மவர்களின் தவறான நடவடிக்கைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களின் ஆதரவை எமக்குச் சார்பாகத் திருப்புவது மிக எளிதானது. ஆனால் நந்திகளாய் குந்தியிருந்து தடுப்பவர்கள் முதலில் அப்புறபபடுத்தப்;படவேண்டும்.
S. K. RAJAH

