04-11-2006, 06:48 AM
நேசன் உங்களுடைய கருத்துக்கு நன்றி.
இங்கே ஒரு பொது விடயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். நான் கூறுகின்ற தவறுகள் நிகழவில்லை என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?
பொதுவாக ஒருவர் ஒரு கருத்தைக் கூறினால் "நீ என்ன வெட்டிப்பிடுங்கினாய்" என்றுதான் கேட்கிறார்கள்.
மிகவும் ஆழமாக எமது விடுதலைப் போராட்டதை நான் நேசிப்பவன். இந்திய, சிறிலங்கா இராணுவத்தினால் தனிப்பட்ட ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில் தான் இங்கே கருத்துக்களை கூறிவருகின்றேன்.
எமது கடந்த கால தவறுகளை நாம் ஒருதடவை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். அத்தவறினை சரிசெய்ய வேண்டும்.
பலர் தவறுகளை சுட்டிக்காட்டாது முகஸ்துதிக்காவே உரையாடுகின்றார்கள். அதுவும் இல்லையெனில் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற அர்த்தத்தில் உரையாடுகின்றார்கள்.
வன்னிக்குச் செல்பவர்கள் கூட தமக்கு விரும்பாதவர்களை மாட்டி விடுவதும், சிறு விடயத்தைக் கூட பெரிதாக்கி காட்டி கதைக்கின்றார்களே தவிர, இப்படி செய்தால் என்ன அப்படி செய்தால் என்ன என்று அவர்களிடம் (விடுதலைப் புலிகளிடம்) ஆலோசனை கேட்பதில்லை.
பாரிய தவறுகளை விடுபவர்களையும் சுட்டிக்காட்டி அவர்களை திருத்துமாறோ அல்லது அகற்றுமாறோ கோருவதில்லை. மாறாக தமக்கு வேண்டத்தாகதவர்களை அப்புறப்படுத்துவதிலேயே பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையிலேயே பல புத்திஜீவிகள் எமது விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கின்றார்கள் அல்லது ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். இது நூறுவீதம் உண்மை.
அடுத்து, எமது ஊடகப்பரப்புரை குறித்து இங்கே, நான் விவாதிக்க விரும்புகின்றேன்.
புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எத்தனையோ பல வானொலிகள், தொலைக்காட்சிள் இயங்குகின்றன. இதில் எத்தனை வானொலிகள் எமது இளைய சந்ததியை நோக்கி கவனம் செலுத்துகின்றன?
அதாவது ஆங்கிலத்தில் அல்லது அந்த அந்த நாட்டு மொழிகளில் ஒலிபரப்புச் செய்கின்றன. (சிலவேளைகளில் சிலநாடுகளில் இவ்வாறு ஒலிபரப்புச் செய்தால் தயவுசெய்து இதனை வாசிப்பவர்கள் அறியத்தாருங்கள்)
முன்னர் ஐபிசியில் ஆங்கிலச் செய்திகள் வாசித்தார்கள். பின்னர் என்ன காரணத்தினாலேயோ நிறுத்திவிட்டார்கள். அதனை எத்தனையே இளைய சந்ததியினர் பெற்றோர்கள் கூறி கேட்டு வந்ததனை நான் அறிந்தேன்.
அடுத்து எமக்கான ஆங்கில பத்திரிகையான தமிழ்க்கார்டியன் ஏன் ஆங்கிலேயேரை நோக்கி கவரவில்லை? இன்று அந்தப்பத்திரிகை முன்னர் வந்தளவு வேகத்தில் வரவில்லை. இதற்கு என்ன காரணம்?
இதில் எனது கருத்தாக ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். சர்வதேசத்தை நோக்கி நாம் செய்யவுள்ள ஊடகங்களின் பெயர்கள் தமிழில் வைக்காது பொதுவாக வைத்தால் நல்லது என்பது எனது கருத்து.
அதாவது தமிழ் நெட், தமிழ் கார்டியன் என்று வைக்கும் போது இது தமிழர்களின் ஊடகம் என்று பிறர் அடையாளம் கண்டுகொண்டு விடுவார்கள் அல்லவா?
விடயத்தை தொடர்கின்றேன்...
எமக்குள் பரப்புரைகளை நாம் செய்வதால் எவ்வித அர்த்தமுமில்லை. சர்வதேசத்தை நோக்கி எமது பரப்புரைகள் இருக்க வேண்டும். தமிழ்நெட் இணையத்தளம் ஒன்றுதான் இதில் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றது. தமிழ்நெட்டைப் போன்று எம்சார்ந்த பல ஆங்கில இணையத்தளங்கள் தனித்துவமாக இயங்க வேண்டும். ஆனால் சோகம் என்னவெனில் அப்படி இயங்குகின்ற தளங்களும் தமிழ்நெட்டையே பிரதிசெய்து போடுகின்றன.
அடுத்து, கொழும்பில் கூட தேசியத்துக்கு ஆதரவாக எம்மவர்களால் ஆங்கில ஊடகங்களை நடத்த முடியவில்லை. முன்னர் வீரகேசரி ஆங்கிலப்பத்திரிகை ஆரம்பித்தது என்ன காரணத்தினாலோ அவர்கள் அதனை நிறுத்திவிட்டார்கள். சிவராம் அவர்கள் இருந்த காலத்தில் "நோர்த் ஈஸ்டர்ன் வீக்லி" தற்போது இணையத்தில் மட்டும்தான் வெளிவதாக அறிந்தேன் (இத்தகவலையும் யாராவது உறுதிப்படுத்துங்கள்)
அதேபோன்று எம்மவர்களால் சிங்களப் பத்திரிகை கூட கொழும்பிலிருந்து நடத்த முடியவில்லை. விடுதலைப் புலிகள் "தேதுன்ன" என்ற பத்திரிகையினை நடத்திவருகின்றார்கள். அது விடுதலைப் புலிகள் சார் பத்திரிகை என்று கணிக்கப்படுவதால் அதன் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் நிலவிவருகின்றது.
சர்வதேசத்தையும், சிங்கள புத்திஜீவிகளையும் நோக்கி எம்மால் ஊடகத்தில் வீச்சாக ஆங்கில, சிங்களத்தில் செய்ய முடியவில்லை என்ற கவலையை கடந்த வருடம் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் "நிலவரம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் ஐயாவும் மிகவும் கவலைப்பட்டுக் கூறினார்.
முன்னர் கிட்டண்ணா லண்டனில் இருந்த காலப்பகுதியில் அவர் பல விடயங்களை தானும் அறிந்து மற்றவர்களையும் அதே போன்று ஊக்குவித்து சர்வதேச செயலகங்களில் பணிபுரிகின்ற செயற்பட்டாளர்கள் பன்முக ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்று விரும்பி அதற்கேற்றவர்களை நியமித்தார்.
அப்படி மீண்டும் ஒரு பொற்காலம் வரவேண்டும். இதுவே எனது ஆசை.
இதில் விவாதிக்கின்றவர்கள் நான் கூறுகின்ற கருத்தினை தயவுசெய்து கூர்ந்து அவதானித்து நிதானித்துப்பாருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை திணிக்காது எமது தவறுகளை நாமே சரிசெய்ய வேண்டும்.
எல்லோரையும் அனைத்து தனிநபர் குரோதங்களை மறந்து தமிழீழத் தேசியம் என்றே குறிக்கோளாக வரைந்து நாம் பணியாற்றினால் உலகின் வல்லரசுகள் எம்மை என்ன செய்யும்?
மீண்டும் கூறுகின்றேன். நாம் அறிவுசார் தளத்தில் புலத்தில் பணிபுரிய வேண்டும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுக்காது விடின், மேலம் பல நாடுகள் எம்மீது தடைகளை விதிக்கின்ற காலம் நெருங்கிவரும்.

S.Nirmalan