04-11-2006, 03:24 AM
Sujeenthan Wrote:ஒரு நாளில்
நாலில் ஒரு பங்கை
நான் ஒவ்வொரு நாளும்
கணணிக்கு படையல் செய்கிறேன்
பதிலுக்கு கணணி பாடல்களையும்
பல்சுவைத்தகவல்களையும்
பரந்துபட்ட செய்திகளையும்
பரிசளிக்கின்றது.
என்னவென்று சொல்ல
ஜங்கரனின் அருளை!
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் அளித்த
ஒளவையாருக்கு ஆனை வடிவில்!
எனக்கு எலி உருவில்.!!
எனக்கும் இதே பிரச்சினை உண்டு. யாழ் களத்திற்று வந்தபின் இது அதிகமாகிவிட்டது.

