04-10-2006, 09:41 PM
சந்தியா உணர்வுபுூர்வமாண உங்கள் கவிதைகள் நன்றாகவே உள்ளன.
மீண்டும் எனது அறிவுரை எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதவும். இல்லையேல் நீங்கள் சொல்லவந்த கருத்துக்கள் படிப்பவர்களிடம் செல்லாமலே சென்றுவிடும்.
மீண்டும் எனது அறிவுரை எழுத்துப் பிழைகளைக் கவனித்து எழுதவும். இல்லையேல் நீங்கள் சொல்லவந்த கருத்துக்கள் படிப்பவர்களிடம் செல்லாமலே சென்றுவிடும்.
Quote:என் கனவே கலைந்திடாதே
நனவாகிவிடு
கண்டேன் என் கனவுதனில் - ஓர்
அழகான தமிழீழம் மலர - அங்கு
அழுகையொலி இன்றி
அன்பு மொழி கேட்டது
சண்டை சச்சரவும் இன்றி
சமதானமான மக்கள் - அவர்களிடம்
வேற்றுமைகள் இல்லை
ஒற்றுமையே நிலவியது
துள்ளித் திரியும் சிறுவர்கள்
துணிந்து உலாவும் பெரியோர்கள்
சுதந்திரமாய்த் திரிகின்ற பெண்கள்
வெடி குண்டுச் சத்தத்திற்கு பதிலாய்
சிறார்களின் வாண வேடிக்கை
பயந்து நடுங்கும் நிலையும் இல்லை
பொருளாதாரத் தடையும் இல்லை
பட்டினியாய் இருக்கும் நிலையும் இல்லை
ஏங்கித் தவித்திருந்த மனசுகள் கூட
ஏக்கமின்றி நிம்மதியாய் தூங்கின
மகிழ்ச்சியான வாழ்க்கைதனை
மகிழ்வுடனே வாழ்கின்ற மக்கள்தனை
நான் அங்கு கண்டேன்
என் கனவே கலைந்திடாதே
நனவாகிவிடு
_________________
>>>>***சந்தியா***<<<<

