04-10-2006, 12:16 PM
கிட்டாண்ணா நல்ல திறமையுள்ள தலைவர். அவரிடம் பல்துறை மக்களையும் ஒருங்கிணைத்து செயற்திட்டங்களை ஏற்பாடு செய்ய கூடிய வசீகரம் இருந்தது. அவற்றிற்கு மேலாக தலைவரின் நம்பிக்கைக்குரியவர். இவை கிட்டண்ணா காலத்தில் புலிகளின் வெளிநாட்டு பரப்புரை மற்றும் உறவு உருவாக்கல் நடவடிக்கைகளை சீர் செய்ய உதவியது. இன்று வெளிநாடுகளில் உள்ள எந்தப் பொறுப்பாளரும் கிட்டண்ணா போன்று தாயகத்தில் இருந்த காலத்தில் மக்களின் மதிப்பை பெற்றுக் கொண்டவர்கள் அல்ல.
இன்று வெளிநாட்டுப் பொறுப்பாளர் பலர் பற்றி ஊழல் கிசு கிசுகள் மூலம் தான் பல சாதாரணமானவர்களிற்கு அறிமுகமே ஆகிறார்கள். கிசு கிசுக்கள் எதிரியின் துரோகிகளின் விசமப்பிரச்சாரமாக இருந்தாலும் பலருக்கு அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது ஏனென்றால் இவர்கள் அறிமுகம் அற்ற பொறுப்பாளர்கள். அறிமுகமானவர்களை நம்புவது அறிமுகமற்றவர்களை இலகுவில் சந்தேகப்படுவதும் மனித இயல்பு. உண்மையான சில ஊழல்களும் நடந்திருக்கு அவை இந்த எதிர்பிரச்சாரத்தை சாதாரண மக்கள் நம்ப வைப்பதில் மேலும் துணை போகிறது.
உறுதியான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஆதரவாளர்கள் ஊழல்களால் சோர்ந்துவிடப் போவதில்லை. ஆனால் கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், பொரும்பான்மையானவர்கள் ஊழல்களை கேட்டு சோர்ந்துவிடாத ஆதரவாளார்கள் அல்ல. கஷ்டப்பட்டு உழைத்த காசில்தான் தமது சொந்த வாழ்கைiயும் நடத்திக் கொண்டுதான் எம்மவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். தாயகப்போராட்டத்திற்கான பங்களிப்பு அவசியமானது ஆனால் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமது அன்றாட வழ்வு அந்த சூழலுக்கு ஏற்ற எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவும் வேண்டிய தேவையும் உண்டு. பொருளாதார வசதிபடைத்தவர்கள் நல்ல நிலையில் இருப்பவர்களும் தமது துறைகளில் பல சவால்களை சந்தித்து கடின உழைப்பில்தான் அந்த வசதிபடைத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள், அதை தக்க வைக்கவும் அவர்கள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். அதிஸ்டலாபச்சீட்டில் கிடைத்த பணம் அல்ல. இதை உணராதவர்களாகத்தான் பெரும்பாலான தொண்டர்கள் உதவி கேட்டு இவர்களை அணுகிறார்கள் இதனால் அனாவசியமற்ற விரிசல்கள் உருவாகிறது. இந்தக் கலாச்சார இடைவெளி சீர் செய்யப்பட வேண்டும்.
கனடா வந்து அமெரிக்காவின் துருப்பாக பல இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்தப்படுவது வழமை. கனடாவின் இந்த நகர்விற்கும் இது தான் மூல காரணம் என நினைக்கிறேன். யுத்த நிறுத்தம் மற்றும் அதனை அமுல்படுத்துவது பற்றிய இரண்டாம் கட்ட பேச்சு மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. சர்வதேச சமூகம் தம்மால் முடிந்தவரையில் இரு தரப்பிற்கும் அழுத்தத்தை கொடுத்து யுத்த நிறுத்தத்தை தக்கவைக்க முயற்சிக்கிறது. புலிகள் இலங்கை அரசாங்கம் போன்று ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரச தரப்பு இல்லை என்றரீதியில் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ஒரு இலகுவான தரப்பாக இருக்கிறது. "சர்வதேசம்" தமது சுய தேவைகளிற்கு சில மேல்நிலை முடிவுகளை எடுக்கும் போது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடுக்கு எதிராகவும் நீதி நியாயங்களிற்கு அப்பால் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதும் வரலாறு. இவற்றை எல்லாம் உணர்ந்தவர்களாகத்தான் புலிகள் கடந்த 2 வருடத்திற்கு மேலாக உச்சப் பொறுமைகாக்கிறார்கள். ஆனால் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் புலிகள் தமது பெறுமையை இழந்தவர்களாக நெகிழ்வுப் போக்கை இறுக்கி உறுதியாக தமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த வருடத்தில் சர்வதேச சமூகம் இலங்கை அரசு சார்பாக வெளிப்படையாக காட்டிவரும் நிலைப்பாடு இதற்கு உதாரணம். சர்வதேசமும் பதிலுக்கு புலிகள் மீது வெளிப்படையாக சில அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஒரு balancing act செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இன்று நாம் எதிர்கொள்ளுவது சர்வதேசதரத்திலான மிகவும் சாதுரியமான இராஜதந்திர ஊடல்.
எதிரிகளின் துரோகிகளின் எதிர்ப்பிரச்சாரங்கள், தடைகள் ஒருவகையில் எமது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி அதிலுள்ள பலவீனங்களை சீர்செய்து வினைத்திறன் மிக்கதாக்க நல்ல சந்தர்ப்பத்தை தருகிறது என்று தான் நினைக்கிறேன். அதற்கு முதலில் கண்மூடித்தனமாக எம்மத்தியிலுள்ள குறைபாடுகளை மூடிமறைக்காது அதை ஆக்கபூர்வமான முறையில் விமர்சித்து நல்வழிப்படுத்த முயலுபவர்களை துரோகிகளாக்காது இருக்க பழகவேண்டும். புலத்தில் பிறந்து வழர்ந்தவர்கள் சிறுவயதில் இங்கு வந்தவர்கள் எமது போராட்டத்திற்கான நியாப்பாட்டை அனுபவரீதியில் உணரமுடியாதவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட நேரடி அனுபவம் அற்ற ஒரு பிறநாட்டவர் மனோபாவத்தோடுதான் விடையத்தை அணுகுவார்கள். இவர்களை தமிழ்த்தேசிய போராட்டத்தின் நியாயத்தன்மையை எதிர்விசமப்பிரச்சாரத்திற்கு மத்தியில் வென்றெடுப்பது ஒரு புதிய சவால். தமிழ் இளையோர் அமைப்பு இதை சிறந்த முறையில் செய்கிறது. இந்த இளைய சந்ததிதான் உலகளாவியரீதியில் தமிழ்தேசியத்தின் எதிரகால பேச்சாளர்கள் பிரதிநிதிகள். எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கலாச்சார யுக்திகள் தெரிந்த வல்லுனர்கள். இவர்கள் சிறந்த முறையில் எமது போராட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும், திறமையின் அடிப்படையில் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும். எமது போராட்டம் நிதானமாக இந்த எதிர்காலச்சந்ததியின் புதிய சிந்தனைகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.