Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி
#2
யாழ்ப்பாணம், மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில
யாழ்ப்பாணம், மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்@ மேலும் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். இனந்தெரியாத நபர்களினால் மின் கம்பம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

வெடிக்க வைக்கப்பட்ட சமயம் இராணுவத்தினர் பயணம் செய்த வாகனத்தை கடந்துசெல்ல முற்பட்ட கியூடெக் தொண்டு நிறுவனத்தின் வாகனத்தில் பயணித்த மேற்படி நிறுவனப் பணியாளர் இருவரும் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பத்மநாதன், பிரதீப் ஆகிய இரு பணியாளர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


பற்குணநாதன், அஜந்தன் ஆகிய இருவர் படுகாயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
Reply


Messages In This Thread
யாழ்ப்பாணம், மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த - by SANKILIYAN - 04-10-2006, 10:49 AM
[No subject] - by மின்னல் - 04-10-2006, 11:57 AM
[No subject] - by mayooran - 04-10-2006, 01:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)