![]() |
|
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி (/showthread.php?tid=283) |
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - மின்னல் - 04-10-2006 யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - பாண்டியன் - Monday, 10 April 2006 16:51 யாழ். தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கிளைமோர் கண்ணிவெ டித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ-9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ ஊர்தி ஒன்றை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்தியில் பயணித்த படையினரில் நால்வர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்கு வானு}ர்திகளில் படுகாயமடைந்த படையினர் பாலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி: சங்கதி http://www.sankathi.com/index.php?option=c...=2528&Itemid=26 யாழ்ப்பாணம், மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த - SANKILIYAN - 04-10-2006 யாழ்ப்பாணம், மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில யாழ்ப்பாணம், மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்@ மேலும் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். இனந்தெரியாத நபர்களினால் மின் கம்பம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. வெடிக்க வைக்கப்பட்ட சமயம் இராணுவத்தினர் பயணம் செய்த வாகனத்தை கடந்துசெல்ல முற்பட்ட கியூடெக் தொண்டு நிறுவனத்தின் வாகனத்தில் பயணித்த மேற்படி நிறுவனப் பணியாளர் இருவரும் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பத்மநாதன், பிரதீப் ஆகிய இரு பணியாளர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பற்குணநாதன், அஜந்தன் ஆகிய இருவர் படுகாயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். - மின்னல் - 04-10-2006 பிந்திய தகவல்படி ஐந்து படையினர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது. - mayooran - 04-10-2006 http://www.nitharsanam.com/public/hello/DSC04956.jpg http://www.nitharsanam.com/public/hello/DSC04944.jpg http://www.nitharsanam.com/public/hello/DSC04950.jpg http://www.nitharsanam.com/public/geniva/D.../DSC049410..jpg
|