04-10-2006, 10:25 AM
இப்படியான நிகழ்சிகள் நடைபெறும் போது அவசரப்பட்டி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.இப்படி ஏன் நடக்கிறது?அதற்கான காரணங்கள் என்ன? நாம் இவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று யோசித்தோமா?
முதலில் ஏன் இப்படி நடந்தது,இதற்கான விடை யாருக்காவது தெரியுமா?பல்வேறு வளங்களைக்கொண்ட கனேடிய அரசிற்கு ஈழத்திலென்ன நடக்கிறது என்று தெரியாமலா இப்படிச் செய்தார்கள்?அவர்கள் இப்படிச் செய்வது ஏன்?ஒரு சில ஆயிரம் கனேடிய சிங்களவருக்காக இப்படிச் செய்தனரா?
எனது அபிப்பிராயம் இதை செய்யப் பரிந்துரைத்தது கனடேய புலானிய்வுத் துறை.கனேடிய புலனாய்வுத் துறை யாரால் வழி நடத்தப்படுகிறது.அதற்கும் அமெரிக்க புல நாய்வுத் துறையினருக்கும் ஊடான தொடர்பு என்ன?இது விடுதலைப் புலிகளை ஒரு அழுத்ததிற்கு உட்படுதுவதற்காக அமெரிக்க வழி நடதலால் ஏற்படுத்தப்படதா?அல்லது இங்கே பலரும் கூறுவதைப் போல், ஈழத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இப்படி நடந்ததா?
அடுத்தது இதனை நாம் எவ்வாறு எதிர் கொள்ளலாம்.அமெரிக்க வெளிஉறவுக் கொள்கையால் வழி நடதப்படும் கனேடிய கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின்,உள்ளூர் அரசியல் வாதிகளின் செல்வாக்கில் இந்த முடிபானது தாக்கம் செலுத்தும் வகையில் நாம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.உள்ளூர் பராளுமன்ற உறுபினர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.சமாதானப் பேச்சுவார்த்தயில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புலிகள் மேல் ஏன் இவ்வாறு கனேடிய அரசு தடயை கொண்டு வருகிறது?சிங்கள அரசும் இராணுவமும் மக்களைக் கொலை செய்யும் இந்தத் தருணத்தில் ஏன் இவ்வாறு கனேடிய அரசு நடந்து கொள்கிறது.இது பிழையான அணுகுமுறை.இதனால் புலிகள் போரை நோக்கியே செல்வார்கள்.போன்ற கருதுக்களை அங்கிருக்கும் ஊடகங்கள் பரப்ப வேண்டும்.அத்தோடு கனேடிய கொள்கை வகுப்பாளர்கள் அரச பேச்சாளர்கள் போன்றவர்களிடம் கனேடிய தமிழ் ஊடகங்கள் கேள்வி கேட்டு பேட்டி எடுக்க வேண்டும்.மற்றும் கண்டன ஊர்வலங்கள்,கூட்டங்கள் என்பவை நடாத்தப் பட வேண்டும்.மற்றய கனடிய ஊடகங்கள்,மக்களிடமும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.
அமைப்பு ரீதியாகவே இதனைச் செய்ய முடியும்,குறிப்பாக மனித உரிமை அமைப்புக்கள் ,சுயாதீன மக்கள் அமைப்புக்கள் இதனைச் செய்ய வேண்டும்.உதாரணமாக பிரான்சில் இயங்கும் தமிழ் மக்கள் மனித உரிமை அமைப்பு செய்யும் விடயங்கள் போல் இவை அமைய வேண்டும்.இந்த அமைப்புக்களை ஏன் இந்தப் படித்தவர்கள் உருவாக்க முடியாது?ஏன் யாரோ வந்து வரவேற்க வேண்டும்.உங்களுக்கு செயற்பட வேண்டும் என்ற உணர்விருந்தால் நீங்களே நண்பர்களைச் சேர்த்து, நிதி திரட்டி இதனை மேற்கொள்ளலாமே.
இப்போது தேவை அமைப்பு ரீதியாக ஒன்று படலும்,திட்டமிட்டு செயற்படுதலுமே. விமர்சனங்கள் தேவை தான் ஆனால் நாம் எவ்வாறு செயற்படுகிறோம், என்ன செய்கிறோம் என்ற சுய விமர்சனம் முதலில் அவசியம்.எமக்கு உணர்விருந்தால் நாம் முயற்சி செய்வோம் அல்லவா? ஏன் மற்றவர் அழைக்கட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்க வேணும்?