Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி
#1
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி
- பாண்டியன் - Monday, 10 April 2006 16:51

யாழ். தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கிளைமோர் கண்ணிவெ டித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ-9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ ஊர்தி ஒன்றை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அந்த ஊர்தியில் பயணித்த படையினரில் நால்வர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்கு வானு}ர்திகளில் படுகாயமடைந்த படையினர் பாலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: சங்கதி
http://www.sankathi.com/index.php?option=c...=2528&Itemid=26
- Cloud - Lighting - Thander - Rain -
Reply


Messages In This Thread
யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - by மின்னல் - 04-10-2006, 10:10 AM
[No subject] - by மின்னல் - 04-10-2006, 11:57 AM
[No subject] - by mayooran - 04-10-2006, 01:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)