04-10-2006, 07:01 AM
ஆவுூரானின் கருத்துக்களுக்கும், சுண்டலின் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி. இங்கே நான் குறிப்பிடுவது எமது சர்வதேச பரப்புரை வலுவடைய வேண்டும் என்பதற்காகவே தவிர எவர்மீதும் உள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக அல்ல.
பல நாடுகளில் பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு அந்த அந்த நாட்டின் மொழி சரளமாகத் தெரியாதது என்பது பெரிய சோகம்.
கனடாவில் உள்ள பலருடன் உரையாடியபோது அவர்கள் கூறிய விடயங்களில் முக்கியமானது படித்தவர்களை அரவணைக்கின்ற தன்மை அமைப்பிடம் இல்லை என்பதே பரவலாக பலர் கூறிய குற்றச்சாட்டு.
கிட்டண்ணா காலம் ஒரு பொற்காலம் தான். அந்தக்காலத்தை மீண்டும் தலைவரால் கொண்டுவர முடியும்.
கிட்டண்ணாவின் கீழ் முன்னர் பொறுப்பாக இருந்த சுரேஸ் அண்ணா அவர்கள் மிகத்திறம்பட நிர்வாகத்தை நடத்தியதாக கனடாவில் உள்ளவர்கள் கூறுகின்றாார்கள். அந்தக்காலம் ஒரு பொற்காலம் என்றும் கூடக் கூறி வருகின்றனர்.
கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு எம்மவர்கள் பின்னர் ஆதரவளித்ததாக இங்கே இன்னொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. ஆம், இது உண்மைதான். கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவளிக்கின்றோம் என்று லிபரல் கட்சியை இவர்கள் பின்னர் கைவிட்டது மிகப்பெரிய தவறு.
முன்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் வாதாடி வந்த லிபரல் கட்சி எம்மவர்களின் இரட்டை நிலைத்தன்மை காரணமாக இன்று கொன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு வருகின்ற தடையைக்கூட எதுவும் விமர்சிக்காது கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதாவது இன்று எமக்கு குரல் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்த லிபரல் கட்சியை எம்மவர்களின் இரட்டை நிலைப் போக்கினால் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். இது எமக்கு பெரும் இழப்பே.
சிறிலங்கா, இந்தியா போன்று நாளை ஒரு கட்சி, இன்று ஒரு கட்சி என்ற தாவல் நிலையை எம்மவர்கள் தவிர்த்து ஏதாவது ஒரு கட்சியுடன் பலமாக நிற்க வேண்டும். அல்லது இரண்டு கட்சிகளிலும் சமமாக தொடர்புகளைப் பேணல் வேண்டும்.
எதுவாக இருந்தாலும் விட்ட தவறுகளை சரிசெய்து எமது பரபரப்புரையை மீண்டும் புதுத் தெம்புடன் செய்ய வேண்டும் வேண்டும். அப்போதுதான் சிறிலங்காவின் பரப்புரைக்கு ஈடாக வெற்றிபெற முடியும்.
இங்கே ஒரு விடயத்தை நாம் நோக்க வேண்டும். சிங்களவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் குறைந்தளவில் வாழ்ந்தாலும் அவர்கள் தம்மில் படித்தவர்களை தேர்ந்தெடுத்து தமது பரப்புரைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இதுதான் அவர்களின் வெற்றியின் பலம்.

S.Nirmalan