04-10-2006, 03:36 AM
கனேடிய தடை முடிவானது விடுதலைப் போராட்டத்தை பாதிக்காது: மாவை சேனாதிராசா
[திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2006, 04:35 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழீழ விடுதலைப் புலிகளை கனேடிய அரசாங்கம் தடை செய்ய முடிவு செய்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து அமைதி முயற்சிகளை விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் செல்லுகிற நிலையில் கனேடிய அரசாங்கத்தின் இம்முடிவானது எதிர்பாராதது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏன் கவலை கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிப்பதாகவும் மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்தகைய முடிவினால் நாம் அதிருப்தியடைந்துள்ளோம். இருப்பினும் இத்தகைய முடிவு எமது விடுதலைப் போராட்டத்தை பாதிக்காது என்றார் மாவை சேனாதிராசா.
இதனிடையே சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா கருத்து தெரிவிக்கையில், பேச்சுக்கள் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், பேச்சுக்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண ஏதுவான சூழ்நிலையை அரசாங்கத்துக்கு இம்முடிவு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். இருப்பினும் இந்த விடயமானது கனேடிய அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடைப்பட்டதானது. இதில் தமது கட்சி தலையிட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு பாரிய பின்னடைவு என்றும் கனடாவில் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பை எந்தப் பெயரிலும் மேற்கொள்வதைத் தடை செய்தால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளின் பெயரில் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவர் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கனேடிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>