04-09-2006, 04:38 PM
Quote:தகுதியானவர்களையும், நன்கு படித்தவர்களையும் பொறுப்பான பதவிகளில் நியமிக்க வேண்டும். அதனை விடுத்து பெயருக்கு பொறுப்பாளர்கள் என்று நியமிப்பதில் அர்த்தமில்லை.
அந்த அந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் பிற தமிழ் அமைப்புக்கள் (எமக்கு ஆதரவான அமைப்புக்கள்) ஏற்படுகின்ற பிரச்சனைகள் அதேவேளை அந்த அந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை அரசமட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய பணியினையும் அரசால் அல்லது அந்த நாட்டில் ஊடகங்களால் வெளியிடப்படும் அறிக்கைகளுக்கு உடனடியாக கருத்துக் கூறக் கூடியவர்களாகவும் உடன் மறுப்பறிக்கை விடுப்பவர்களாக தகுந்த நபர்களை நியமிக்க வேண்டும். ஆனால் எம்மவர்கள் அவ்வாறு செய்வதில்லை. நிதி சேகரிப்பதுதான் தலையாய கடமை என்று கருதுகின்றார்கள்.
[size=14]இந்த விடயத்தில் நிர்மலனின் கருத்து தான் என்னுடையதும், கனடா போன்ற வெளிநாடுகளில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் அமைப்புக்களின் தலைவர்கள் உறவினர்களாகவும், அவர்களின் பிள்ளைகளாகவும் இருந்தால் மட்டும் போதாது, படித்தவர்களாக, திறமையான முறையில் வாதாடக் கூடியவர்களாக, மனிதவுரிமைகளின் விடயத்தில், வெளிநாட்டு நிருபர்களின், மேலை நாட்டு மக்களின் கருத்துக்களை அறிந்தவர்களாக, அது மட்டுமல்ல, மேலை நாட்டு அரசியல், சமூக நிலைகளில் ஈடுபாடும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்களின் நாட்டில் நடைபெறுவதையும் மேற்கோள் காட்டி விளக்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
எந்த விடுதலைப் போராட்டத்திலும், போரை விடப் பிரச்சாரம் தான் முக்கியம், இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா, படித்த. விவாதிக்கும் தன்மையுள்ள இளம் சிங்களவர்களைப் பாவிக்கிறது, நீங்கள் சிங்களத் தளங்களையும், ஐரோப்பாவிலும், கனடாவிலுமுள்ள படித்த சிங்களவர்களையும் அவதானித்தால் தெரியும். இலங்கைத் தமிழர்களின் சார்பில் கதைப்பவர்கள் ஒன்றில் தமிழ் மட்டும் தெரிந்தவர்கள், அல்லது அவர்களின் பிள்ளைகள், இலங்கைக்கே போயிராத பல்கலைக்கழக மாணவர்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஸ்காபுரோவில் பிரச்சாரம் செய்வதில் தான் வல்லவர்கள்.ஆனால் படித்த சிங்களவர்கள் தம்முடைய தமிழெதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பெரும்பான்மை மக்களிடம் எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.
கனடாவின் உள்நாட்டுப்பாதுகாப்பமைச்சர் ஸ்ரொக்வெல் டே யின் Okanagan-Coquihalla தொகுதியிலுள்ள சிங்களவர்களின் வற்புறுத்தலால் தான், அவர் அமைச்சராக முன்பே அவர்களுக்கு உறுதியளித்தபடி அவர் விடுதலைப் புலிகளையும் பயங்கரவாத வரிசையில் சேர்த்து விட்டார். அப்பொழுதே கனடாவிலுள்ள பலம்வாய்ந்த தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள். CONSERVATIVES ஐயும் LOBBY பண்ணாமல், Liberal களுக்கு மட்டும் வால் பிடித்ததால் வந்தது தான் இந்த விளைவு. கடைசித் தேர்தல் மட்டும் 12 வருடங்களாக liberal களுக்கு ஆதரவளித்து விட்டு, சிலர் தேர்தல் வேளையில் மட்டும், Conservativesக்கு ஆதரவளித்ததால், முற்றுமுழுதாக இலங்கைத் தமிழர் ஆதரவுப் பத்திரிகையும், கனடாவில் அதிகளவில் வாசிக்கப்டுவதுமான, Toronto Star கூட ஈழத்தமிழர் எதிர்ப்பை ஆசிரியர் கருத்தில் காட்டத் தொடங்கி விட்டது. இது யார் விட்ட பிழை? இஸ்ரேல், அமெரிக்க அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்துவதே இஸ்ரேலியர்களின் LOBBYING இனால் தான். ஆனால் எத்தனை முறை எங்களின் எந்த இலங்கைத் தமிழ்ப் பேச்சாளரும், கெட்டித்தனமாக, கனடாவில் வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ வாதாடியுள்ளார்கள்.
கனடாவின் தொலைக்காட்சியில் நடந்த ஒரு சில ஈழத்தமிழர்கள் சம்பந்தமான எந்தக் கருத்தரங்கிலும் ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எவரும் ஆணித்தரமாக, சிங்களவர்களுக்கிணையாகக் கருத்துத் தெரிவித்ததில்லை. எங்கட ஆட்களுக்குத் தெரிந்தெல்லாம் பேச விடாமல் கூச்சலிடுவது தான். Lobbying விடயத்தில் தமிழர்கள், எங்களின் பக்கம் தான் நியாயம் இருந்தும் அவர்களிடம் தோற்று விட்டோம் ஏனென்றால் அவர்கள் சொந்தக்காரர்களையும், பிள்ளை குட்டிகளையும் நியமிப்பதில்லை, தமிழராக இருந்தாலும், தகைமையுள்ள, தங்களுக்குச் சார்பான தமிழர்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. கூட்டணிக்காலப் பெரிசுகளைப், புலம் பெயர்ந்த தமிழர்களின் பேச்சாளர்களாக நியமிப்பதால், அவர்களால் தமிழர்களுக்கு உபதேசம் செய்ய மட்டும் தான் முடியும்.
இந்த நிலைமை மீண்டும் ஏற்படாமலிருக்க, வன்னி, படித்த, திறமையான, (மும்மொழி மிகவும் நல்லது), அல்லது ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமையுள்ள, தமிழுணர்வுள்ள, விவாதிக்கும் திறனுள்ள, இளந்தமிழர்களை, பெரும்பான்மை இன ஊடகங்களின் வழியாக தமிழர்களின் பக்க நியாயங்களை எடுத்துச் சொல்லத் தக்கவர்களை நியமிக்க வேண்டும், அதை விட்டிட்டு, தமிழர்களுக்கு மட்டும் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் பேச்சாளர்களாக்கினால் இப்படி எத்தனையோ இடைஞ்சல்கள் வரலாம்

