04-09-2006, 01:18 PM
எப்படித்தான் நாம் இதனை கூறினாலும் இது எங்களுக்கு ஒரு பாதிப்பே.
எம்மவர்களில் சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த இயக்கத்தினை பாதிக்கின்றது.
விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்றதாக தோற்றம் காட்டினாலும், நாம் பல இடங்களில் நாம் சறுக்கியே வருகின்றோம்.
உதாரணத்துக்கு ஐரோப்பிய யூனியனின் பயணத்தடை, ஹியூமன் றைட் வோட்ச்சின் அறிக்கை, இப்போது கனடாவில் தடை விதிக்கப்படவுள்ளமை இவை எல்லாம் எமது சர்வதேச பரப்புரையின் பலவீனத்தையே காட்டுகின்றது.
மீண்டும், மீண்டும் நாம் முன்னர் விட்ட தவறுகளை தொடர்ந்து விடாது திருத்தி எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தலைவருக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்.
இதற்கு உரியவர்கள் உரியமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். இணையத்தளம் எமது மன உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கின்ற தளம். இதனூடாக நாம் எமது பக்க தவறுகளையும் சரியான முறையில் சுட்டிக்காட்டினால் உரிய இடத்திற்கு செல்லும்.
அதனை விட்டுவிட்டு நாம் மற்றவர்கள் நடவடிக்கைகளை நையாண்டி செய்யக்கூடாது. எமது போராட்டம் தார்மீகமானது தான். அதில் எமக்கு சந்தேகமில்லை.
சர்வதேசம் எமக்கு ஆதரவு தராது விட்டாலும் எதிர்நிலை எடுக்கின்ற நடவடிக்கைகளையாவது நாம் தவிர்க்க வேண்டும்.
சிலவேளைகளில் எம்மவர்களில் சிலர் கதிர்காமர் போய்விட்டார் சிறிலங்காவின் வெளியுறவுத்துறை பலவீனமானது என்று கருதுகின்றார்கள். அது தவறு. ஏனெனில் கதிர்காமரால் நியமிக்கப்பட்ட தூதுவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், திட்டமிடுகின்ற அதிகாரிகளும் தூதரகங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனை நாம் மறந்துவிடக் கூடாது.
இதில் கனடாவில் நியமிக்கப்பட்ட தூதரக அதிகாரிகளில் பெருமளவிலானோர் கதிர்காமரால் நியமிக்கப்பட்டவர்கள்.
அடுத்து பல இடங்களில் எமக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை ஒரு சில காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பது. இது எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பணிபுரிபவர்களை ஒருசிலர் தமது விருப்பு, வெறுப்புக்களுக்காக தகடு வைப்பது என்று ஐரோப்பாவில் கூறுவார்கள். இதனால் பல நல்லவர்களை கெட்டவர்களாக்கி போராட்டப்பணிகளிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுகின்றனர்.
இதுவும் ஒருவகையில் எமக்கு பாதிப்பினைத்தான் ஏற்படுத்துகின்றது. இதனை உரியவர்கள் சரியான முறையில் கையாண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எத்தனை நாடுகள் தடைவிதித்தாலும் எமது போராட்டத்தின் தர்மம் விடுதலைக்கு எம்மை அழைத்துச் செல்லும். என்றும் எமது தேசியத் தலைவரை நம்பி இருப்போம். அவர் காலத்தில் எமக்கு விடுதலை சர்வ நிச்சயம்.

S.Nirmalan