Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை
#13
[size=18]சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன்தான் விக்னேஸ்வரன் படுகொலை: விடுதலைப் புலிகள் கண்டனம்

சிறிலங்கா இராணுவத்தினரது உதவியுடன்தான் திருமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இது தொடர்பாகக் கூறியதாவது:

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் இன்று காலை 9 மணியளவில் அவர் பணியாற்றுகிற வங்கிக்குள்ளேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் மிகவும் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிறிலங்கா கடற்படைத் தளத்துக்கு அருகாமையில் இந்த வங்கி அமைந்துள்ளது. வங்கிக்குச் செல்வாதானாலும்கூட வங்கிக்கு முன்னர் 10 மீற்றர் தூரத்தில் இராணுவ காவலரண் உள்ளது. அதனூடேதான் வங்கிக்குள் செல்ல வேண்டும்.

வங்கிக்குள் நுழைந்தாலும் வங்கியின் பின்புறம் திருகோணமலையின் காவல்துறை அதிகாரியின் அலுவலகம் இருக்கிறது. அதற்கு அருகாமைப் பகுதியானது கடற்படையின் தளங்கள் அமைந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகும்.

இருநபர்கள் வங்கிக்குள் நுழைந்து இப்படுகொலையைச் செய்திருப்பதாக தெரிகிறது. சிறிலங்கா இராணுவத்தினரது ஒழுங்கமைப்புக்கூடாகத்தான் இந்தப் படுகொலையை அவர்கள் செய்துள்ளனர். ஏனெனில் தாக்குதல் நடத்திவிட்டு எளிதில் திரும்பிச் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் அங்கு இல்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் பின்பக்கமாக தப்பியிருந்தால் காவல்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள்ளேயோ அல்லது இரகசியப் பிரிவு காவல்துறையினர் அலுவலகத்திற்குள்ளேதான் சென்றிருக்க வேண்டும். முன்பகுதியிலேயே கொலை செய்தவர்கள் வெளியே வந்திருந்தால் முன்னரங்கக் காவலரணில் உள்ளவர்களால் கைது செய்யக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆகையால்தான் இது இராணுவத்தினரது ஒழுங்குபடுத்தப்பட்ட படுகொலையாக நாங்கள் பார்க்கிறோம். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் விக்னேஸ்வரன். பலமுறை அச்சுறுத்தல்களுக்குள்ளாகி இருந்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்த தனது பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

அவரது படுகொலைச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இப்படியான நடவடிக்கைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் சி.எழிலன்.
http://www.eelampage.com/?cn=25325
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by Aravinthan - 04-07-2006, 05:33 AM
[No subject] - by வர்ணன் - 04-07-2006, 05:37 AM
[No subject] - by அருவி - 04-07-2006, 05:45 AM
[No subject] - by தூயவன் - 04-07-2006, 05:47 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 05:56 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:02 AM
[No subject] - by வன்னியன் - 04-07-2006, 06:03 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:04 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 06:08 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:40 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:41 AM
[No subject] - by SANKILIYAN - 04-07-2006, 07:28 AM
[No subject] - by SANKILIYAN - 04-07-2006, 07:31 AM
[No subject] - by Puyal - 04-07-2006, 08:47 AM
[No subject] - by Naasamaruppan - 04-07-2006, 12:53 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 01:12 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 01:48 PM
[No subject] - by நேசன் - 04-07-2006, 10:10 PM
[No subject] - by நேசன் - 04-07-2006, 10:22 PM
[No subject] - by Selvamuthu - 04-07-2006, 10:30 PM
[No subject] - by eelapirean - 04-08-2006, 01:09 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)