Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை
#9
[size=18]புலிகளை பேச்சு மேசையிலிருந்து விலகச் செய்யும் முயற்சியே விக்கினேஸ்வரன் படுகொலை: செ.கஜேந்திரன்

ஜெனீவா பேச்சுக்களிலிருந்து விடுதலைப் புலிகளை விலகச் செய்யும் முயற்சியாக திருமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்கினேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இப்படுகொலை தொடர்பாக அவர் கூறியதாவது:

திருகோணமலையில் தான் பணியாற்றும் மக்கள் வங்கிக்குள் நுழைந்த போது விக்கினேஸ்வரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக விக்கினேஸ்வரவன் தெரிவு செயய்ப்பட்டுள்ள நிலையில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

திருமலையில் சிங்களப் பேரினவாதிகளின் இனவெறி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சிங்கள இனவெறிக் காடையர்களின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர்.

திருமலையில் நடைபெறுகிற நிலப்பறிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து துணிச்சலோடு குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்தவர். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பினர் திருமலையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்தவர்.

இத்தகைய நபர் நாடாளுமன்றத்துக்குள் உள்நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் படுகொலை செய்துள்ளனர். இக்கொடூரக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசாங்கத்தின் திட்டமிட்ட இப்படுகொலை இது.

இக்கொலைகள் மூலம் எமது தமிழ்த் தேசிய எழுச்சியை, தமிழ்த் தேசியத்திற்கான குரலை நசுக்கி விட முடியும் என்று மகிந்த அரசு பகல் கனவு காண்கிறது. இதனது விளைவுகள் விபரீதமாக அமையும்.

இத்தகைய கொலைகள் மூலம் பேச்சுவார்த்தைகளிலிருந்து விடுதலைப் புலிகள் விலகிக் தாங்களாகவே கொள்ள வேண்டும்-பேச்சுவார்த்தையை புலிகள் முறித்துவிட வேண்டும் அதன் மூலம் புலிகளுக்கு ஒரு அபகீர்த்தியை சர்வதேச சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற கபட நோக்கத்துடன் இக்கொலை நடைபெற்றிருக்கிறது.

இக்கொலை வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டுகிற சூழ்நிலை உருவாகும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கள்ளத்தனமாக கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தையும் விக்கினேஸ்வரன் படுகொலையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் கண்டனம் செய்துள்ளோம் என்றார் அவர்.
-புதினம்
http://www.eelampage.com/?cn=25324
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by Aravinthan - 04-07-2006, 05:33 AM
[No subject] - by வர்ணன் - 04-07-2006, 05:37 AM
[No subject] - by அருவி - 04-07-2006, 05:45 AM
[No subject] - by தூயவன் - 04-07-2006, 05:47 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 05:56 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:02 AM
[No subject] - by வன்னியன் - 04-07-2006, 06:03 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:04 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 06:08 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:40 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 06:41 AM
[No subject] - by SANKILIYAN - 04-07-2006, 07:28 AM
[No subject] - by SANKILIYAN - 04-07-2006, 07:31 AM
[No subject] - by Puyal - 04-07-2006, 08:47 AM
[No subject] - by Naasamaruppan - 04-07-2006, 12:53 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 01:12 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 01:48 PM
[No subject] - by நேசன் - 04-07-2006, 10:10 PM
[No subject] - by நேசன் - 04-07-2006, 10:22 PM
[No subject] - by Selvamuthu - 04-07-2006, 10:30 PM
[No subject] - by eelapirean - 04-08-2006, 01:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)