04-06-2006, 01:53 PM
எவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று எதிர்பாhக்கிறீர்கள். ஒரு முழுச் சமூகத்தையுமா அல்லது நீங்கள் குறிப்பிடப் போகும் யாரையுமா? நான் இங்கே குறிப்பிட்டது ஒரு முழுச்சமூகமும் முகம் சுழிக்கும் விதத்தில் கருத்துக்களை முன்வைக்கக் கூடாது என்பதையே. நல்லது. நீங்கள் மன்னிப்புக்கேட்ட பெருந்தன்மைக்குத் தலைவணங்குகிறேன். ஆனால் நான் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவனல்ல. ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். இந்தக்களத்தில் நானாவது இந்த விடயத்தைக் கண்டிக்காது இருந்திருந்தால் நம்மைப் பற்றி நமது அந்தச் சகோதரர்கள் என்ன நினைப்பார்கள்? நாம் எந்த முகத்தோடு ஐக்கியம் தேசியம் என்பனபற்றிப் பேசுவது? இதை இத்தோடு நாம் நிறுத்திக் கொள்ளுவோம். தங்கள் மனம் புண்பட நானும் எதையாவது எழுதியிருந்தால் மன்னிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
S. K. RAJAH

