Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செம்மீன்
#8
செம்மீன் படத்தினை நானும் 17,18 வருடங்களுக்கு முன்பு பார்த்தனான். 'கடலினைக்கரை போனோரே' என்ற பாடலினை அப்படம் பார்த்துவிட்டு முணு,முணுத்த காலங்கள் யாபகத்துக்கு வருகிறது.

தமிழிழப்பாடல்களில் எல்லாப்படல்களும் கவர்ந்தாலும் எனக்கு கவர்ந்தவற்றில் முதல் 2 இடங்கள் 'ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்' பாடலும் 'பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே' என்றபாடலும்.
தமிழ்னாட்டில் இருந்த காலத்தில் ஈழப்பாடல் கேக்கமுடியாததினால், பிறகு லண்டனில் படிக்கும் போது மீண்டும் கேக்கத் தொடங்கினேன். படிக்கும்போது பெற்றோல் நிலையத்தில் பகுதி நேரம் வேலை செய்து கொண்டு நான் படித்தேன். அக்காலத்தில் ஸ்கொட்லண்ட் அரசாங்கத்துக்கு பாரளுமன்ற உரிமை கிடைத்ததற்காக ஆதரவு தெரிவிப்பதற்காக பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் லண்டன் கிங்ஸ்குரஸ் புகையிரதனிலையத்திலிருந்து ஸ்கொட்லண்டுக்கு தனியாக புகையிரத்தினை வாடகைக்கு அமர்த்தி ஈழத்தமிழர்கள் மட்டும் பிரயாணம் செய்தார்கள். ஈழத்து பாடல்கள் அப்புகையிரதவண்டியில் ஒலிக்க, சிற்றுண்டிகள் உண்டு பல தமிழர்கள் சென்றார்கள். எல்லோரும் செல்வதினால் பெற்றோல் நிலையத்தில் துரதிஸ்டவசமாக எனக்கு வேலை நாள் என்பதினால், லீவு கிடைக்கவில்லை. பிறகு திங்கள் கிழமை சண்ரைஸ் வானொலியில் இருந்து ஒலிபரப்பின் தொகுப்பினை வேலைத்தளத்தில் இருந்து கேட்டேன். அப்பொழுது அடிக்கடி 'ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்' என்ற பாடலினை ஒலிபரப்புச் செய்தார்கள். புகையிரத வண்டியிலும் இப்பாடல் அதிகமாக ஒலிபரப்பானதாகவும் சொன்னார்கள். அன்று முதல் கேட்கத் தொடங்கிய இப்பாடலினை இன்றும் நான் ரசிக்கிறேன்.
,
,
Reply


Messages In This Thread
செம்மீன் - by kanapraba - 03-31-2006, 01:16 PM
[No subject] - by விது - 03-31-2006, 01:38 PM
[No subject] - by sinnakuddy - 03-31-2006, 01:57 PM
[No subject] - by AJeevan - 03-31-2006, 09:01 PM
[No subject] - by Selvamuthu - 03-31-2006, 09:02 PM
[No subject] - by kanapraba - 04-01-2006, 07:28 PM
[No subject] - by AJeevan - 04-01-2006, 07:50 PM
[No subject] - by Aravinthan - 04-04-2006, 02:38 AM
[No subject] - by kanapraba - 04-04-2006, 05:06 AM
[No subject] - by Luckyluke - 04-04-2006, 07:11 AM
[No subject] - by கந்தப்பு - 04-05-2006, 12:13 AM
[No subject] - by kanapraba - 04-05-2006, 04:33 AM
[No subject] - by KULAKADDAN - 04-06-2006, 11:01 PM
[No subject] - by வர்ணன் - 04-07-2006, 05:08 AM
[No subject] - by kanapraba - 04-08-2006, 06:45 AM
[No subject] - by கந்தப்பு - 04-11-2006, 02:39 AM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 03:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)