04-03-2006, 10:29 PM
காலம் கடத்துவதை தவிர்ப்போம்
கடந்துவந்த பாதைகளை மறவோம்.
களிப்பு என்ற படகுகள் விடுவோம்
கடந்தகால நினைவுகளைத் தொடுவோம்.
காலைக் கதிரவன் வரவும்
கலைந்திடும் இரவுப் பனியும்
புள்ளினம் எழுப்பும் ஒலியும்
புூக்களின் நிசப்த விரிவும்
வண்டினம் எழுப்பும் இசையும்
வீசிடும் வாடைக் காற்றும்
கண்டுநாம் களித்த காலை
என்றுதான் மீண்டும் வருமோ?
கடந்துவந்த பாதைகளை மறவோம்.
களிப்பு என்ற படகுகள் விடுவோம்
கடந்தகால நினைவுகளைத் தொடுவோம்.
காலைக் கதிரவன் வரவும்
கலைந்திடும் இரவுப் பனியும்
புள்ளினம் எழுப்பும் ஒலியும்
புூக்களின் நிசப்த விரிவும்
வண்டினம் எழுப்பும் இசையும்
வீசிடும் வாடைக் காற்றும்
கண்டுநாம் களித்த காலை
என்றுதான் மீண்டும் வருமோ?

