![]() |
|
தொடர் கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தொடர் கவிதை (/showthread.php?tid=627) |
தொடர் கவிதை - RaMa - 03-05-2006 உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு
- வர்ணன் - 03-05-2006 <b>புத்தகப்பையை அனைத்தபடி சென்றுவிடுவோம் ரீயுசனுக்கு. </b> பாடம் தொடங்கிவிடும் விரல்களிடை இருந்த பேனா விழுந்து விழுந்து தாளம் போடும்! களமாடும் வீரர் மண்ணில் கல்வி கொண்டும் போர் செய்தோம் - ம்ம்ம்... காலம் ஓடியது காலில் சில்லு பூட்டி ! சிதறிப்போனோம் கண்டங்கள் பலவாய்! காட்சியும் மாறியது! -இன்று புகை படிந்த யன்னலூடே பார்வை வீசுகிறோம்! கால நிலை பற்றி கவலை கொள்ளும் - விடிய எழுந்தவுடன் முதல் செய்யும் வேலையாய் போச்சு! என்றாலும் என்ன அந்த வீரமண்ணது வாசம் விலகாது இன்னும் நாசின் சுவர்களில் ஒரு ஓரமாய்!
- Snegethy - 03-05-2006 ஓரமாய் ஒதுக்கி வைக்க தாயகத் தாகம் ஒன்றும் நேற்றிரவு வந்த கனவல்ல விடிஞ்சா மறந்து போக இரு தசாப்தங்களாக தேசம் காண எழுகின்ற ஆவல் விடியலின் பூபாளம் கேட்கத் துடிக்கின்ற காதுகள் சொந்த மண்ணைத் திரும்ப தழுவ நினைக்கும் கரங்கள் விழுந்து புரண்டு வாழ்ந்த வீட்டை அடைய துடிக்கும் கால்கள் சுற்றத்தாருடன் உறவாட ஏங்கும் வார்த்தைகள் சொந்தத்தையே பலவருடமாய் பார்க்க ஏங்கும் கண்கள் - சுடர் - 03-05-2006 ஆவலைப் பூர்த்திசெய்ய புலிவீரர் களத்திடையே புலிவீரன் போராடி குண்டுதனை தன் நெஞ்சினிலே ஏந்துகையில் இனம் காத்த மகிழ்வுடனே துயில் கொள்வான் களத்தினிலே அம்மா அப்பா அக்கா அண்ணா தம்பி தங்கை ஊரெல்லாம் உறவுகள் அவனிற்காய் கண்கசியும் வகுப்பிற்குப் போன மகன் திடமுடனே முடிவெடுத்து ஆயுதம் தரிப்பான் தோளில் - வர்ணன் - 03-05-2006 Snegethy Wrote:ஓரமாய் ஒதுக்கி வைக்க ஆவலின் மிகையால் அனைத்தும் இழந்தாலும் நீளிரவில் ............ குப்பி விளக்கும் இன்றி சுதந்திர யாத்திரை போகிறோம்! சுதந்திரதேவி எமை அணைப்பாயென நம்புகிறோம்- நம்பிகிடக்கிறோம்!
- சுடர் - 03-05-2006 சுதந்திர தேவியை இரத்தமின்றி தரிசிக்க தோளிருந்த ஆயுதத்தை கீழே சாய்ச்சபடி கோணிப்பையுடனே கோப்புகள் தனைக்கொண்டு எதிரியுடன் பேச்சுவார்த்தை - Snegethy - 03-05-2006 வார்த்தையின் வடிவம் மாற்றி எம் தலைவிதி திருத்தி எழுதப்படாதா? - சுடர் - 03-05-2006 Snegethy Wrote:வார்த்தையின் வடிவம் தலைவிதி தனை திருத்த மாற்றார் முயல்கையிலே எம் அடையாளம் தனை நாம் துடைக்க முயலலாமோ கவிதனிலே கற்றுக் குட்டி தெரியாது விடும் தவறை திருத்த முயல்கையிலே அதை தடுக்க முயலலாமோ மாறியது வடிவம் தான் அதன் கருத்து அல்லவே தலைவனே அன்று சொன்னான் 'போராட்ட வடிவம் மாறும் இலக்கு மட்டும் மாறாது' அது போல வார்த்தை வடிவம் மாறியது கருத்து மாறலயே - வர்ணன் - 03-05-2006 சுடர் Wrote:Snegethy Wrote:வார்த்தையின் வடிவம் முயன்று பல பார்த்துவிட்டோம் இந்த முரட்டு சிங்களவனுக்கு புரிவதாய் இல்லை விதியே சொல்லு இனி வீணென்று நாம் சாவதா? இல்லை வெற்றி கொடியேந்தி வாழ்வதா?
- Snegethy - 03-05-2006 மஞ்சத் துணிக்காய் தாயைக் கொன்ற முட்டாளுக்கு புரியாது எம்மக்கள் நிலை வாழ்வோம் நாமும் நிச்சயமாக நிம்மதியாக விடியலே விரைந்து வா - RaMa - 03-05-2006 விடியலே விரைந்து வா விண்ணில் பிரகாசிக்கும் எம் மாவீரார்களையும் அழைத்து வா புதியதொரு பிறவியாய் பிறந்து எம் சுதந்திர காற்றை சுவாசித்து விடுவோம். - சுடர் - 03-05-2006 varnan Wrote:சுடர் Wrote:Snegethy Wrote:வார்த்தையின் வடிவம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் நாம் ஒன்றிணைந்து எம் தலைவன் கரம்தனையே பலப்படுத்த வெற்றிக் கொடியது எம்மனைவர் கரங்களிலே - Snegethy - 03-05-2006 சுதந்திரக் காற்றின் ஒவ்வொரு துகளிலும் மாவீரர் சுவாசம் கலந்திருக்கும் கந்தகத்தை சுவாசித்தவர்கள் கல்லறையில் கவலையின்றி தூங்க விடியலே விரைந்து வா - RaMa - 03-05-2006 விடியலே விரைந்து வா தலைவர் பின் அணி வகுத்து நிற்கும் எம் மக்கள் அணியை பார் மக்கள் அணி அது தான் புலிகள் படையணி எதிரியை கொன்றுவிடும் காரிகாலனின் குடும்ப அணி - அருவி - 03-05-2006 கரிகாலன் காலமதில் ஈழமதை நாம் அடைந்திடவே விடியலே விரைந்து வா எம்தமிழர் அல்லல் தனை உன் கரங்களினால் துடைத்துவிடு - Snegethy - 03-05-2006 இதுவரை.............. அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு பாடம் தொடங்கிவிடும் விரல்களிடை இருந்த பேனா விழுந்து விழுந்து தாளம் போடும்! களமாடும் வீரர் மண்ணில் கல்வி கொண்டும் போர் செய்தோம் - ம்ம்ம்... காலம் ஓடியது காலில் சில்லு பூட்டி ! சிதறிப்போனோம் கண்டங்கள் பலவாய்! காட்சியும் மாறியது! -இன்று புகை படிந்த யன்னலூடே பார்வை வீசுகிறோம்! கால நிலை பற்றி கவலை கொள்ளும் - விடிய எழுந்தவுடன் முதல் செய்யும் வேலையாய் போச்சு! என்றாலும் என்ன அந்த வீரமண்ணது வாசம் விலகாது இன்னும் நாசின் சுவர்களில் ஒரு ஓரமாய்! ஓரமாய் ஒதுக்கி வைக்க தாயகத் தாகம் ஒன்றும் நேற்றிரவு வந்த கனவல்ல விடிஞ்சா மறந்து போக இரு தசாப்தங்களாக தேசம் காண எழுகின்ற ஆவல் ஆவலைப் பூர்த்திசெய்ய புலிவீரர் களத்திடையே புலிவீரன் போராடி குண்டுதனை தன் நெஞ்சினிலே ஏந்துகையில் இனம் காத்த மகிழ்வுடனே துயில் கொள்வான் களத்தினிலே அம்மா அப்பா அக்கா அண்ணா தம்பி தங்கை ஊரெல்லாம் உறவுகள் அவனிற்காய் கண்கசியும் வகுப்பிற்குப் போன மகன் திடமுடனே முடிவெடுத்து ஆயுதம் தரிப்பான் தோளில் ஆவலின் மிகையால் அனைத்தும் இழந்தாலும் நீளிரவில் ............ குப்பி விளக்கும் இன்றி சுதந்திர யாத்திரை போகிறோம்! சுதந்திரதேவி எமை அணைப்பாயென நம்புகிறோம்- நம்பிகிடக்கிறோம்! சுதந்திர தேவியை இரத்தமின்றி தரிசிக்க தோளிருந்த ஆயுதத்தை கீழே சாய்ச்சபடி கோணிப்பையுடனே கோப்புகள் தனைக்கொண்டு எதிரியுடன் பேச்சுவார்த்தை வார்த்தையின் வடிவம் மாற்றி எம் தலைவிதி திருத்தி எழுதப்படாதா தலைவிதி தனை திருத்த மாற்றார் முயல்கையிலே எம் அடையாளம் தனை நாம் துடைக்க முயலலாமோ முயன்று பல பார்த்துவிட்டோம் இந்த முரட்டு சிங்களவனுக்கு புரிவதாய் இல்லை விதியே சொல்லு இனி வீணென்று நாம் சாவதா? இல்லை வெற்றி கொடியேந்தி வாழ்வதா? மஞ்சத் துணிக்காய் தாயைக் கொன்ற முட்டாளுக்கு புரியாது எம்மக்கள் நிலை வாழ்வோம் நாமும் நிச்சயமாக நிம்மதியாக விடியலே விரைந்து வா விடியலே விரைந்து வா விண்ணில் பிரகாசிக்கும் எம் மாவீரார்களையும் அழைத்து வா புதியதொரு பிறவியாய் பிறந்து எம் சுதந்திர காற்றை சுவாசித்து விடுவோம் சுதந்திரக் காற்றின் ஒவ்வொரு துகளிலும் மாவீரர் சுவாசம் கலந்திருக்கும் கந்தகத்தை சுவாசித்தவர்கள் கல்லறையில் கவலையின்றி தூங்க விடியலே விரைந்து வா விடியலே விரைந்து வா தலைவர் பின் அணி வகுத்து நிற்கும் எம் மக்கள் அணியை பார் மக்கள் அணி அது தான் புலிகள் படையணி எதிரியை கொன்றுவிடும் காரிகாலனின் குடும்ப அணி - வர்ணன் - 03-05-2006 அருவி Wrote:கரிகாலன் காலமதில் துடைத்து விடுவாயா? தூரத்தே எம்மை எறிவாயா? நெருஞ்சிமுள் கொண்டு படுக்கை செய்து அதில் கிடத்தியெமை மீளா துயிலாக்கி போவாயா? வேதனை தாலாட்டொன்று வேண்டாமே இனியும்
- அருவி - 03-05-2006 <b>வேதனை தாலாட்டொன்று வேண்டாமே இனியும்</b> விடியல் வருமென்று பூத்திருந்த கண்கள் செத்துச் சுடுகாடு போகிறது அந்நியப் படைகள் எதிரிக்கு அடைக்கலம் கொடுக்கிறது எருக்கம் பூவைத்து எமை இடுகாடு அனுப்பும் முன்னே விடியலே நீ விரைந்தெம்மை நாடாயோ - சுடர் - 03-05-2006 <b> எருக்கம் பூவைத்து எமை இடுகாடு அனுப்பும் முன்னே விடியலே நீ விரைந்தெம்மை நாடாயோ</b> எப்படை வந்திடினும் எம் விடிவுபெற்றுத் தந்திடவே எம் பெருந்தலைவனுடன் தளபதிகள் பலருண்டு அவர்கள் வழி காட்டலிலே மறவர்கள் அணிவகுப்பர் அணிவகுக்கும் மறவர்க்குத் துணையாக துணைப்படையும் எல்லையினை காப்பதற்கு எல்லையிலே எல்லைப்படை கடற்களம் தனை வென்றிடவே அணிவகுப்பர் கடற்புலிகள் வான் மட்டும் தன்வசம் என இறுமாந்த நம் பகைவன் அடிவயிற்றில் பேரிடியாய் வான்படையும் எம்வசமாய் இவையனைத்தும் எதற்காக தமிழீழம் காண்பதற்காய் மாண்டஎம் வீரர்களின் கனவுகள் பலிப்பதற்காய் - வர்ணன் - 03-05-2006 அருவி Wrote:<b>வேதனை தாலாட்டொன்று நாடாயோ நாடாயோ நம் திசை இனியும் ? நாடில்லாதவன் நீயென்று ஆவாயோ ஆவாயோ? ஏர் உழுத தாய் நிலம் அங்கே - எறிகணைகளால் நிரம்பி வழியுதடா! குருதி ஆற்றில் ஒரு குவளை மொண்டு தாகம் தீர்க்க நினைப்பா? தரித்திரம்
|