04-03-2006, 01:50 PM
ஜேர்மனியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஈழத்தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
வேலணையைச் சொந்த இடமாகக் கொண்ட விநாயகமூர்த்தி கிருபா மூர்த்தி (வயது52), மகனான கிருபாமூர்த்தி வசந்தரூபன் (வயது 18) இருவருமே விபத்தில் உயிரிழந்தனர்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜேர்மனியில் குடும்பமாக வசிக்கும் இவர்கள் அங்கு சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை தந்தையும் மகனும் தமது வர்த்தக நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் அவர்கள் பயணம் செய்த கார் ஹன்டர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகிறது.
மகனான வசந்தரூபன் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை கிருபாமூர்த்தி படுகாயங்களுடன் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு அங்கு மரணமானார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஜேர்மனி பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-உதயன்-
இந்த விபத்து ஜேர்மனியில் எந்த நகரத்தில் நடைபெற்றது. கள உறுப்பினர் யாருக்காவது தெரியுமா?

" "