Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாழ்க் ஈழத் தமிழகம்
#2
போகின்ற ஈழமும் வருகின்ற ஈழமும்


போகின்ற ஈழம்

எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ
ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ
பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ
படையிலாது துஞ்சினாய் போ போ போ
வலி மிகுந்த புலிகளை நம்பாது
வடவர் தன்னை நம்பினாய் போ போ போ
கிலி மிகுந்த மதியினால் மென் மேலும்
கீழ்மையில் உழன்றனை போ போ போ

விதி கெடுத்த மதியினாய் போ போ போ
வீணிலே உறங்கினாய் போ போ போ
சதி நிறைத்த உறவினாய் போ போ போ
சாவிழிம்பில் நின்றனை போ போ போ
பொதி நிறைத்த தீர்வுகள் மேல் ஆர்வம்
போக்கி நின்று தேங்கினாய் போ போ போ
எதிரி தன்னை நம்பினாய் போ போ போ
இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ

பலமிழந்த தோளினாய் போ போ போ
பழமை பேசு தொழிலினாய் போ போ போ
குலமிழந்த நிலையினாய் போ போ போ
குருதி கண்டு அஞ்சினாய் போ போ போ
நிலமிழந்து அகதியாயப் பார் மீதில்
நிலையிலா துழன்றனை போ போ போ
சலமிழிந்து பகைவர்முன் நாய்போலே
சமதை வாழ்வைக் கெஞ்சினாய் போ போ போ

வருகின்ற ஈழம்

புலி பொறித்த கொடியினாய் வா வா வா
புதிய பெண்மை நடையினாய் வா வா வா
ஒளி படைத்த மொழியினாய் வா வா வா
உரிமை கொண்டிலங்குவாய் வா வா வா
வலிமை மிக்க படையினை உன்னோடு
வைத்துயர்ந்து நின்றனை வா வா வா
கலி முடித்துக் கிருதமா யுகம் காணும்
கடமையோடு மோதுவாய் வா வா வா

நிதி நிறைந்த திருவினாய் வா வா வா
நெஞ்சுரத்தில் விஞ்சினாய் வா வா வா
மதியுடைத்த படையினாய் வா வா வா
மனதிலென்றும் தெளிவினாய் வா வா வா
கதியிழந்த தமிழரை ஈடேற்றும்
கடமை கொண்டுயிர்த்தனை வா வா வா
எதிரி வந்து மோதுமுன் முன்னேறி
ஈழ வீரம் காட்டுவாய் வா வா வா

அமைதிபெற்ற நடையினாய் வா வா வா
அவனி தந்த புகழினாய் வா வா வா
சமதை பெற்ற நிலையினாய் வா வா வா
சாவை வென்றுயிர்த்தனை வா வா வா
மமதை கொண்ட பகைவரின் முன்பேகி
மாண்பு காட்டி நின்றனை வா வா வா
உமை மாகாளி சூலியின் கண்ணோக்கால்
உரிமை கொண்டுயர்ந்தனை வா வா வா
S. K. RAJAH
Reply


Messages In This Thread
[No subject] - by karu - 04-02-2006, 07:07 PM
[No subject] - by Mathuran - 04-02-2006, 11:26 PM
[No subject] - by தூயவன் - 04-03-2006, 04:56 AM
[No subject] - by RaMa - 04-03-2006, 06:20 AM
[No subject] - by Mathuran - 04-03-2006, 07:36 AM
[No subject] - by eezhanation - 04-03-2006, 10:32 AM
[No subject] - by karu - 04-03-2006, 10:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)