![]() |
|
வாழ்க் ஈழத் தமிழகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாழ்க் ஈழத் தமிழகம் (/showthread.php?tid=359) |
வாழ்க் ஈழத் தமிழகம் - Mathuran - 04-02-2006 வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே மலை நிகர்த்திவ்வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே முடிப்புகள் அமிழ்தை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மெச்சும் மதியினள் மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள் ... வாழ்க வானம் பாடி போல்மீன் கானம் பாடும் வாவிகள் மலர்க் கனி க்ய்லுங்கிடும் எழில் மிகுந்த சோலைகள் தேனும் பாலும் பாய்ந்திடச் செந்நெல் பொலியும் கழனிகள் உய்வ ளிக்கும் மாநிலம் ... வாழ்க பட்டிப் பளை, மகாவலி, பயில் அருவிமுத் தாறுகள் பல வனங்கள் பொலியவே எழில் நடஞ்செய் துலவிடும் மட்ட களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை, மிகிழ்வோடு மலைத் தமிழர்கள் மலரடி தொழும் இனியவள் ... வாழ்க நன்றி: ஈழத்தேவதையின் அகம் - karu - 04-02-2006 போகின்ற ஈழமும் வருகின்ற ஈழமும் போகின்ற ஈழம் எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ படையிலாது துஞ்சினாய் போ போ போ வலி மிகுந்த புலிகளை நம்பாது வடவர் தன்னை நம்பினாய் போ போ போ கிலி மிகுந்த மதியினால் மென் மேலும் கீழ்மையில் உழன்றனை போ போ போ விதி கெடுத்த மதியினாய் போ போ போ வீணிலே உறங்கினாய் போ போ போ சதி நிறைத்த உறவினாய் போ போ போ சாவிழிம்பில் நின்றனை போ போ போ பொதி நிறைத்த தீர்வுகள் மேல் ஆர்வம் போக்கி நின்று தேங்கினாய் போ போ போ எதிரி தன்னை நம்பினாய் போ போ போ இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ பலமிழந்த தோளினாய் போ போ போ பழமை பேசு தொழிலினாய் போ போ போ குலமிழந்த நிலையினாய் போ போ போ குருதி கண்டு அஞ்சினாய் போ போ போ நிலமிழந்து அகதியாயப் பார் மீதில் நிலையிலா துழன்றனை போ போ போ சலமிழிந்து பகைவர்முன் நாய்போலே சமதை வாழ்வைக் கெஞ்சினாய் போ போ போ வருகின்ற ஈழம் புலி பொறித்த கொடியினாய் வா வா வா புதிய பெண்மை நடையினாய் வா வா வா ஒளி படைத்த மொழியினாய் வா வா வா உரிமை கொண்டிலங்குவாய் வா வா வா வலிமை மிக்க படையினை உன்னோடு வைத்துயர்ந்து நின்றனை வா வா வா கலி முடித்துக் கிருதமா யுகம் காணும் கடமையோடு மோதுவாய் வா வா வா நிதி நிறைந்த திருவினாய் வா வா வா நெஞ்சுரத்தில் விஞ்சினாய் வா வா வா மதியுடைத்த படையினாய் வா வா வா மனதிலென்றும் தெளிவினாய் வா வா வா கதியிழந்த தமிழரை ஈடேற்றும் கடமை கொண்டுயிர்த்தனை வா வா வா எதிரி வந்து மோதுமுன் முன்னேறி ஈழ வீரம் காட்டுவாய் வா வா வா அமைதிபெற்ற நடையினாய் வா வா வா அவனி தந்த புகழினாய் வா வா வா சமதை பெற்ற நிலையினாய் வா வா வா சாவை வென்றுயிர்த்தனை வா வா வா மமதை கொண்ட பகைவரின் முன்பேகி மாண்பு காட்டி நின்றனை வா வா வா உமை மாகாளி சூலியின் கண்ணோக்கால் உரிமை கொண்டுயர்ந்தனை வா வா வா - Mathuran - 04-02-2006 ம்ம் மிகவும் நல்லாத்தான் இருக்குது. மனம் திறந்து பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆக்குனரின் எண்ண ஓட்டம் ஆறாய் பாய்ந்தும் ஆப்பப்போ புயாலாய் வீசியும் செல்கிறது. வாழ்த்தும் வயது எனக்கு இருக்கின்றதோ தெரியவில்லை. வாழ்த்துகின்றேன் - தூயவன் - 04-03-2006 வாழ்த்துக்கள் மதுரன்,karu தொடர்ந்து எழுதுங்கள் - RaMa - 04-03-2006 இருவரின் கவிகளும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். - Mathuran - 04-03-2006 தவறாக எண்ணிவிட்டீர்கள் தூயவன் மற்றும் றமா. மேலே உள்ள ஆக்கங்களில் எவையும் எனது அல்ல. ஈழ தேவதையின் அகத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆக்கத்தை பொது தளத்தில் இணைத்தேன் அவ்வளவுதான். இரண்டாவது ஆக்கம் எஸ்.கே ராஜ் என்பரின் ஆக்கத்தினை கரு அவர்கள் இணைத்திருக்கின்றார். ஆகவே வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரியவர்களுக்கு சென்றடயவேண்டும் என்பதற்க்காகவே ஆக்கங்கள் இங்கே இணைத்தோம். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- eezhanation - 04-03-2006 இரண்டு நல்ல கவிதைகளையும் இணைத்த மதுரன், மற்றும் கறு, இருவருக்கும் நன்றிகள்.இரண்டாவது கவிதையில் புதுப்புனலெனப்பொங்கிவரும் அழகிய நடை அருமை. - karu - 04-03-2006 வருகின்ற ஈழமும் போகின்ற ஈழமும் என்கின்ற இரண்டாவது கவிதை யுகசாரதியின் ~ஈழத்தாய் சபதம்| நு}லிலுள்ளது என்பதை பணிவுடன் அறியத்தருகின்றேன் |