Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீதனம்
#1
<b>

என் முகம் தீய்ந்து போனாலும்
மோசமில்லை - மோட்சமே
உழைக்காமல் வரும் ஊதியமே
சொர்க்கம் என்று ஆனாயேடா
மொக்கா மொக்கா!

என்ன சொல்ல ...........
எரியும் சிதையினிடையே
கைவிட்டு ..தகனம் கொள்
பிணத்திடையிருந்து
தங்கம் உருவ
நினைக்குது மானிடம்!

காலை எழுந்தவுடன்
தேநீர் வேண்டும்
கை கால் அமுக்கவும்..
அவளே வேண்டும்..

அடடா அடடா

கை கால் அலம்பியதும்
துடைக்க துண்டும் தந்து
நீ கலையாத அழகு கொள்ள
சுருங்கா ஆடையும் தந்து...

நீ கல்யாணம் கொள்கையில்
காலில் விழவும் செய்து...

யோசி ... யோசி
மலரை கசக்கி எறிய
மடி நிறைய ..
பொருள் கேட்குது..மானிடம்!!

அடுப்படியில் ஒருத்தியை
குந்த வைக்க...
முற்பணமாய்- ஐம்பது
இலட்சம் கேட்பது
போக்கிரித்தனம்!

கேட்டால்..
என் குடும்பமதை காக்க
இவ்ளோ செலவாச்சு என்கிறான்
அதுதான் - மறு
அறவீடு என்கிறான்...

அப்போது ஆணாய் இருந்தவன்
இப்போ எங்கே போனான்?

கல்யாண மேடையில்
காகம் போட்ட எச்சமென்றானாய் -நீ!!</b>
-!
!
Reply


Messages In This Thread
சீதனம் - by வர்ணன் - 04-01-2006, 01:01 AM
[No subject] - by Sujeenthan - 04-01-2006, 01:05 AM
[No subject] - by tamilini - 04-01-2006, 12:20 PM
[No subject] - by RaMa - 04-03-2006, 06:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)