03-31-2006, 10:59 AM
[b]பிரதேச வாதத்திற்கும், துரோகிகளிற்கும் தென்தமிழீழத்தில் - பத்மநாதன்
- எல்லாளன் - Friday, 31 March 2006 14:18
கொலை அச்சுறுத்தல், அரச, ஒட்டுப்படைகளின் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசத்தில் உள்ள காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அகிய மூன்று தமிழர் பிரதேசங்களுக்கான உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழரசுக்கட்சி போட்டியிட்டு பெரு வெற்றி வாகை சூடியுள்ளது. இது தமிழர்களுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியே ஆகும்.
இதற்கு தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எமது தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கினைப் பிரிப்பதற்கு பிரதேச வாதங்களை முன்வைத்து, எமது தாயகப் போராட்டத்தினை பலவீனப்படுத்த கடந்த 58 வருடங்களாக திட்டமிட்ட முறையில் தமிழின அழிப்பில் ஈடுபடும் சிங்கள தேசத்திற்கும், அரசியல் நாற்காலிக்களுக்காக தாவி அலைபவர்களுக்கும், சலுகைகளுக்காக தமது இனத்திற்கே துரோகம் இளைத்து வருபவர்களுக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக வழங்கிய சாட்டை அடி இதுவாகும்.
எனவே எமது தன்னாட்சி உரிமை, தாயகம், தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் மூலம் நாம் தோற்றம் பெற்றுள்ளோம். எனவே எங்கள் இனத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிவரும் எமது தமிழ்த் தேசியப்படையான தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு என்றும் நாம் உறுதுணையாகவே நிற்கின்றோம். மக்களே விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகளே மக்கள் என்பதை தென் தமிழீழ மக்கள் இந்த தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளனர். எனவும் தெரிவித்துள்ளார்.
நன்றி: சங்கதி செய்தி

[b]