03-31-2006, 09:31 AM
Vasampu Wrote:<b>நாரதர் எழுதியது</b>:
வணக்கம் நிதர்சன்,
எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?
அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால்இ படிப்பவர்கள் எது மெய்இஎது பொய் என்று முடிவெடுப்பார்கள்.
இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.
<b>நாரதர்</b>
நிதர்சனிடம் ஆதாரத்தை கேட்கும் நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேற் குறிப்பிட்ட செய்தியை நம்பி மேலும் மேலும் கருத்தெழுதுகின்றீர்கள். இங்கே சில இணையத்தளங்கள் தமது சொந்த வக்கிரங்களுக்காகவும் தனிப்பட்ட பகையுணர்ச்சி காரணமாகவும் பல பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றன.
அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயாமல் நாமும் மனம் போனபடி அது சார்ந்து கருத்தெழுதுவது தான் நியாமானதா?? இவ்விடயம் இதன் உண்மைத் தன்மை அறியும் நோக்குடன் தான் இங்கு போட்டிருக்கலாம் என எழுதும் நீங்கள் அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்காமல் மனம் போனபடி கருத்தெழுதுவது ஏனோ??
வணக்கம் வசம்பு,
கை சுகமாகி விட்டதா? நலமா?
நான் இதை உண்மை என்று எங்காவது எழுதி உள்ளேனா?
நிதர்சன் சொன்னது இப்படியான செய்திகளைப் போட வேண்டாம் என்று, நான் சொன்னது அதை இங்கே போட்டால் தான் அது உண்மயா ,இல்லயா என்று தெரியும் என்று,எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்கும் நீங்கள் ,இந்த செய்தி பொய்யானது என்றும்,அது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் எழுதப் பட்டது என்றும் நிதர்சன் கூறியதற்கு ஆதாரம் கேட்டேன்.ஏனெனில் அந்த செய்தியில் பெயர்,முகவரி என விபரமான தகவல்கள் இருந்தன.ஆகவே நிதர்சன் கூறியது எந்த விதமானா ஆதாரம் இன்று ஒரு யூகமாகவே இருந்தது.இரண்டையும் ஒப்பு நோக்கியதில் எனக்கு எட்டப்பர் செய்தித் தளத்தில் இருந்ததே ஒபீட்டளவில் உண்மயாக இருந்தது.
உங்களுக்கு அப்படி இல்லாதவிடத்து,வெறும் யூகங்களில் நம்பிக்கை என்றால் நம்பிக்கை கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம்.அதற்காக இங்கே செய்தித் தணிக்கயை வெறும் தனிப்பட்டவர்களின் யூகங்களின் அடிப்படையில் நிகழ்த்த முடியாது,அவ்வளவே.காரணம் கருத்துச் சுதந்திரம் என்பது உங்களுக்கு விருப்பமானவற்றை மட்டும் கேட்பது,போடுவது கிடயாது.

