Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன்.
#3
<span style='font-size:30pt;line-height:100%'><b>அழியாத கவிதை</b></span>
<img src='http://www.eelavarcinearts.com/a_kavithai_trailer.jpg' border='0' alt='user posted image'>
http://www.eelavarcinearts.com
mohamed Wrote:முதலாவது படம் அழியாத கவிதை.
மிக அருமையாக படம்பிடிக்கப்பட்ட ஒரு கவிதையை கமரா நன்கே சொல்கிறது. புலம் பெயர் வாழ்வில் ஒரு வயதானவரின் தனிமையை சொல்ல வந்த இந்தக் கவிதை நம்மவர் திரைக்கலையை புலம் பெயர் மண்ணில் வளர வைப்பார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது. படம் தொடங்கும் போது நமக்கு ஒரு எதிர்பார்பபை தந்த இந்த குறும்படம் சில இடங்களில் எனக்கு ஏனோ ஏமாற்றத்தை தந்து விட்டது. ஒரு வயதானவர் இலங்கையிலிருந்து வருகிறார் அனால் அவர் முகத்தில் ஒரு களை தெரியவில்லை. மாறாக பல நாட்கள் இன்னுமொரு ஐரோப்பிய நாடு ஒன்றல் இருந்து வந்தவர் போலவே தெரிகிறார். மிக நீண்ட தலைமுடியுடன் தாயகத்திலிந்து அகதியாக வந்த ஒருவராக. என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. இருந்தாலும் தனது தனிமையை வெளிப்படுத்திய அந்த நடிப்பு இந்த குறையை பெரிதாக்கவில்லை. அனுபவம் மிக்க ஒரு நடிகர் அந்த முடியை தியாகம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சபாஸ்.. ஆனால் கிழவரின் தனிமையை காட்;ட இறுதிக்காட்சியான பூங்கா காட்சி கொஞ்சம் கூடிப்போனதாகவே எனக்குப் படுகிறது. அதைக் கொஞசம் குறைத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். இந்த படத்தில் அனுபவம் மிக்க நடிகர் இருந்தும் அவரின் பிள்ளைகளாக நடத்தவர்களின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. இயக்குனர் இதை இன்னும் மெருகு படுத்தியிருக்கலாம். இருந்தாலும் புதியவர்கள் என்றவகையில் வாழ்துக்கள். நான் சொன்ன குறைகளை விடுத்து படத்தை பார்க்கையில் ஒரு அற்புதமான படைப்பு இன்னுமும் மெருகூட்டியிருந்தால் இந்தக் கவிதை என்றென்றும் ஒரு அழியாத கவிதையாகவே இருந்திருக்கும் ஆனால் நம்மவர்கள் நிச்சயம் பாரக்க வேண்டிய ஒரு படைப்பு.

விமர்சனம் என்பது துதிபாடுதல் அல்ல அவனை வளர்த்து விடும் ஒரு ஏணி. இந்த திரைக்கலை மன்றம் இனியும் வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையான விமர்சனத்தை உள்வாங்கி மீண்டும் நமக்கு ஒரு திறமான தீனி தர மனமார்ந்த வாழ்த்துக்கள்..

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மொகமட்.

தவறுகளை சுட்டிக் காட்டுவதும்- நல்லதை பாராட்டுவதுமே விமர்சனம்.

நான் கதை வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்த அழியாத கவிதையைத் தவிர அடுத்த படங்களை பார்க்காததால் என்னால் எதுவும் கூற முடியவில்லை.

அழியாத கவிதையில் உங்கள் விமர்சனங்களில் உண்மைகள் இருக்கின்றன.
இதற்கான காரணம் முழுமையான திட்டமிடல் இல்லாததே என்பதை மனம் திறந்து கூறுவேன்.

லண்டனில் என் குறும்படங்களை திரையிட்டு கருத்தரங்குடன் கூடிய விழா ஒன்றை நடத்த ஈழவர் திரைக் கலை மன்றம் எனக்கு அழைப்பு விடுத்த போது அங்கு சென்றேன்.

அந்த மன்றத்தில் வைத்து என்னிடம் கேட்காமலே நான் சுவிசுக்கு போகுமுன் 3 குறும்படங்களை செய்து தந்து விட்டு போவார் என்று கூறினார்கள்.நானே திகைத்தேன்.இது கலியாண வீட்டுக்கு படம் பிடிக்கும் விடயமில்லை என்று கூறி ஒரு குறும்படத்தை செய்ய ஒப்புக் கொண்டேன்.

நான் ஒரு வாரமே லண்டனில் இருக்க வேண்டிய நிலையில் திரு.ரகுநாதனை வைத்து படம் செய்ய வேண்டியிருந்ததால் ஒரு கதையை அவருக்காக தேடி அதற்கான திரைக்கதையை எழுதி நடிகர்களை தேர்வு செய்து படத்தை உருவாக்கியது ஒரு பெரிய கதை.

அதற்குள் வந்திருக்கும் உங்கள் பாராட்டுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

ஒன்று மட்டுமே மனம் திறந்து சொல்வேன். அழியாத கவிதைக்காக ஒரு வாரம் என்னோடு உரமான அனைவரது அர்பணிப்பும் என்னால் மறக்க முடியாதது. அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

தற்போது இக்குறும் படங்கள் திரையிடப்படுவதால் அவை பற்றி எழுதுவதை விடுத்து மௌனமாகிறேன். இருப்பினும் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல விழைகிறேன்........................


Quote:அழியாத கவிதை.
தொடங்கும் போது நமக்கு ஒரு எதிர்பார்பபை தந்த இந்த குறும்படம் சில இடங்களில் எனக்கு ஏனோ ஏமாற்றத்தை தந்து விட்டது. ஒரு வயதானவர் இலங்கையிலிருந்து வருகிறார் அனால் அவர் முகத்தில் ஒரு களை தெரியவில்லை. மாறாக பல நாட்கள் இன்னுமொரு ஐரோப்பிய நாடு ஒன்றல் இருந்து வந்தவர் போலவே தெரிகிறார்.


நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். குறும்படம் என்பது ஒரு முழு நீளப் படம் போன்றதோ அல்லது தொலைக்காட்சி தொடர் போன்றதோ அல்ல என்பதை முதலில் தெரிந்து வேண்டும். குறும்படத்தில் ஒரு நொடி வேறுபக்கம் திரும்பினாலும் கதையை புரிந்து கொள்ள முடியாது.

குறும்படங்கள் 1 நிமிடம் தொடங்கி 30 நிமிடம் வரை நீளகிறது.

உதாரணத்துக்கு இதோ சுவிசில் நடக்கவிருக்கும் 1நிமிடக் குறும்படப் போட்டி பற்றிய அறிவித்தல்:-
http://www.oneminute.ch/

இவற்றை புரிந்து கொள்ள பொழுது போக்கு சினிமா ரசிகர்கள் அனைவராலும் முடியாது.

சினிமா பாடல்களை கேட்கும் ரசிகனுக்கு முன் நடத்தப்படும் கர்நாட்டிக் இசை கச்சேரியை புரிந்து கொள்ள கொஞ்சமாவது இசை ஞானம் தேவை. இல்லாவிடில் அதுவே மாபெரும் அவஸ்தையாகிவிடும்.

குறும்படங்கள் தமிழர்களை சென்று அவர்களை வெல்ல வெகு காலமெடுக்கும். அழியாத கவிதையை பார்த்த வேற்று நாட்டவர்களுக்கு புரிகிறது. காரணம் அவர்கள் அதற்கு பரிட்சயப்பட்டவர்கள். இந்தியாவிலேயே இப்போதுதான் குறும்படங்களை பற்றிய அக்கறை வந்திருக்கிறதென்றால் நம்மவர் நிலை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.

எனவே அது போன்ற பிரச்சனைகள் எவருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்களும் அழியாதகவிதை படத்தில் எவ்வளவு தூரம் ஒன்றித்திருந்தீர்களோ தெரியாது.

<span style='font-size:22pt;line-height:100%'>அக்குறும்படத்தில் நடிக்கும் ரகுநாதன் வரும் வழியில் அவரது கதையை காரில் இருக்கும் இருவருக்கும் சொல்லிக் கொண்டு வருகிறார். அப்போது அவர் வந்த பாதை தொட்டு கடந்து வந்த நாடுகளை குறிப்பிடுகிறார். அவர் லண்டனுக்கு வருமுன் கடந்து வந்த நாடுகளையும், காலங்களையும் குறிப்பிடுகிறாரே? கவனிக்கவில்லையா?</span>

Quote:மிக நீண்ட தலைமுடியுடன் தாயகத்திலிந்து அகதியாக வந்த ஒருவராக. என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. இருந்தாலும் தனது தனிமையை வெளிப்படுத்திய அந்த நடிப்பு இந்த குறையை பெரிதாக்கவில்லை. அனுபவம் மிக்க ஒரு நடிகர் அந்த முடியை தியாகம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சபாஸ்..

தயகத்தில் வாழும் பல
கலைஞர்கள்,
வயதானவர்கள்,
பிராமணர்கள்................. இப்படிப்பட்ட எத்தனையோ வயதானவர்களை நாம் நீண்ட தலை முடியுடன் சந்திக்கிறோம்.
இவரும் அப்படிப்பட்டவரில் ஒருவரே தவிர வேறு ஒருவரல்ல.[/color]

( உழும் விவசாயியையும் - ரிக்சா ஓட்டுனரையும் -பிச்சை எடுப்போரையும் கால் சட்டையோடு ஏற்று கொண்டதை விட இங்கு மேலதிகமாக எதுவுமேயில்லை.)

Quote:ஆனால் கிழவரின் தனிமையை காட்சி இறுதிக்காட்சியான பூங்கா காட்சி கொஞ்சம் கூடிப்போனதாகவே எனக்குப் படுகிறது. அதைக் கொஞசம் குறைத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்.

எமது ரசிகர்கள் இன்னும் கதைப்படங்களுக்குள்ளேயே சிக்கியிருப்பதுதான் இதைப் புரிந்து கொள்ளாததற்கான காரணம். எனது படங்கள் தமிழர்களுக்காக மட்டும் உருவாக்கப்படும் படங்களல்ல. இவை சர்வதேச மக்களை அடைவதற்கான எண்ணத்தோடு (இங்கே நாமும் அடக்கம்) உருவாக்கப்படும் இலங்கை மக்கள் சார்ந்து புலம் பெயர் நாடுகளில் உருவாகும் குறும்படங்கள்.

பேசிக் கொண்டேயிருப்பது (சினிமா)படங்களல்ல. அவை நாடகங்கள். நாடக நடிகர்களை சினிமாவுக்குள் கொண்டு வர வேறோர் பயிற்சி தேவை. அழியாதகவிதையில் நாடக நடிப்பு செய்யும் பலரை பாத்திரமாக அமைதியாக வாழ வைத்திருக்கிறேன். அவர்களை சுற்றி தெரியும் காட்சிகள் எத்தனையோ கதைகளை சொல்லும். ஓரு படத்தில் 30 சதவிகிதத்துக்கு மேல் பேச்சு இருந்தால் அது சினிமாவல்ல. அது நாடகம்.

தந்தையாக நடிக்கும் நடிகர் வந்த நாட்டில் தனது குழந்தைகளாலும் - வாழ்ந்த மண்ணைப் பிரிந்த சோகத்தாலும் வாடி நிற்கும் போது புூங்காவில் காணும் காட்சிகளைக் கண்டு ஏன் இப்படியான ஒரு எதிர்பார்ப்போடு வந்தேன் என்று ஏங்கி நிற்கும் போது சிரிக்காத - அதுவும் பேசியும் கண்டு கொள்ளாத ஒரு சில லண்டன் தமிழர்கள் மத்தியில், முகம் தெரியாத அதுவும்,பாதையில் செல்லும் கறுப்பர்கள் அவரிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கும் போது இல்லை என்று மெனமாக நிற்பதைவிட, அப்படியான ஒரு பெரியவரால் என்ன செய்ய முடியும்? தனது மகனது இயலாமையையும் தனது மருமகளது சொல் அம்புகளையும் எமது பெரியவர்கள் வாய் திறந்து சொல்பவர்கள் அல்ல. அவர் மௌனமாகி தனிமையில் உறைந்து ஞானிபோல் ஆனவர்கள்தான். அவர் ஊரில் கண்டேயிராத எத்தனையோ காட்சிகளை காண்கிறார். அவரது கண்கள் அவை கண்டு விறைத்து போயிருக்கிறதே................... வேதனையான ஒருவன் [u]தேவனே என்னைப் பாருங்கள் என்றா ரோட்டில் பாட முடியும்?


அது போலவே இறுதிக் காட்சியிலும் அத்தனை மக்களது சிரிப்பு,பொழுது போக்குகள் ,அத்தனைக்குள்ளும் ஒரு பிணம் போல் பெரியவர் போவதை சரியா என்று அதே வயதை ஒத்த பல பெரியவர்களிடம் கேளுங்கள் அல்லது மனோ தத்துவ வைத்தியரிடம் கேளுங்கள் நிச்சயம் சரியான விடை கிடைக்கும்................................................


Quote:இந்த படத்தில் அனுபவம் மிக்க நடிகர் இருந்தும் அவரின் பிள்ளைகளாக நடத்தவர்களின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. இயக்குனர் இதை இன்னும் மெருகு படுத்தியிருக்கலாம்.

நடித்த நடிகர் அனுபவமிக்கவராக இருக்கலாம். ஆனால் எனது இயக்கத்தில் அவர் ஒரு கதாபாத்திரமே தவிர வேறெதிலும் அவர் தலையிடவில்லை என்பது மட்டுமல்ல ஒரு வித்தியாசமான ரகுநாதனை பார்த்து வியந்திருக்கிறார்கள். அவரது பணிவான ஒத்துழைப்புக்கு என்றும் நன்றி கூறுகிறேன்.

இயக்குனர் என்பவன் அங்கு தளபதியே தவிர வந்தவர் போனவர் எல்லாம் தலையிட அனுமதித்தால் அது சாம்பார்தான்.


Quote:இருந்தாலும் புதியவர்கள் என்றவகையில் வாழ்துக்கள். நான் சொன்ன குறைகளை விடுத்து படத்தை பார்க்கையில் ஒரு அற்புதமான படைப்பு இன்னுமும் மெருகூட்டியிருந்தால் இந்தக் கவிதை என்றென்றும் ஒரு அழியாத கவிதையாகவே இருந்திருக்கும் ஆனால் நம்மவர்கள் நிச்சயம் பாரக்க வேண்டிய ஒரு படைப்பு.

இறுதி பாராட்டுகள் பாரிஸ்டர் ஜோசப் அவர்களையே சாரும். எந்தவொரு ஊடகமும் தனது சொந்த பணத்தை இது காலமும் விரயம் செய்யாத போது துணிந்து ஒரு செயலை செய்ததற்காகவும், எனது வேலைகளின் போது தலையீடு செய்யாததற்காகவும் இறுதி பாராட்டுகள் பாரிஸ்டர் ஜோசப் அவர்களையே சென்றடைய வேண்டும்.

<span style='font-size:23pt;line-height:100%'>அவர் முறையாக திட்டமிட்டும் சிலரது தவறான புகழுரைகளுக்கும் தவறான வார்த்தைகளுக்கும் மயங்காது ஒரு படைப்பை உருவாக்குவதற்காக தயாரிப்பாளரானால் <b>நிச்சயம்
பாரிஸ்டர் ஜோசப் அவர்களது பெயர் புலம் பெயர் சினிமா வரலாற்றில் பதிவாவதை எவராலும் தடுக்க முடியாது.</b></span>

நட்புடன்
________________________________________அஜீவன்

http://www.eelavarcinearts.com


Messages In This Thread
[No subject] - by mohamed - 02-10-2004, 04:53 PM
[No subject] - by AJeevan - 02-10-2004, 08:54 PM
[No subject] - by AJeevan - 02-10-2004, 09:00 PM
[No subject] - by vasisutha - 02-26-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 02-28-2004, 05:02 PM
[No subject] - by Manithaasan - 03-11-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 03-19-2004, 08:44 AM
[No subject] - by AJeevan - 03-19-2004, 11:02 AM
[No subject] - by Shan - 03-19-2004, 04:16 PM
[No subject] - by Manithaasan - 03-19-2004, 05:23 PM
[No subject] - by Manithaasan - 03-19-2004, 05:31 PM
[No subject] - by AJeevan - 03-20-2004, 12:07 AM
[No subject] - by AJeevan - 03-21-2004, 03:17 PM
[No subject] - by Manithaasan - 03-21-2004, 04:59 PM
[No subject] - by AJeevan - 03-23-2004, 05:21 PM
[No subject] - by AJeevan - 03-24-2004, 09:53 PM
[No subject] - by கண்ணன் - 03-25-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:25 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:25 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:28 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:45 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 06:50 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 07:29 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 08:18 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 09:24 PM
[No subject] - by Aalavanthan - 03-25-2004, 09:56 PM
[No subject] - by sOliyAn - 03-26-2004, 12:42 AM
[No subject] - by AJeevan - 03-26-2004, 09:32 AM
[No subject] - by கண்ணன் - 03-26-2004, 11:31 AM
[No subject] - by Eelavan - 03-26-2004, 12:30 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:00 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:09 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:14 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 02:39 AM
[No subject] - by AJeevan - 03-27-2004, 06:22 PM
[No subject] - by AJeevan - 03-28-2004, 12:16 AM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:50 AM
[No subject] - by Eelavan - 03-28-2004, 02:55 AM
[No subject] - by AJeevan - 03-28-2004, 07:05 AM
[No subject] - by AJeevan - 04-18-2004, 09:35 PM
[No subject] - by AJeevan - 04-18-2004, 09:47 PM
[No subject] - by Shan - 04-22-2004, 01:38 PM
[No subject] - by Ilango - 04-22-2004, 04:56 PM
[No subject] - by Shan - 04-23-2004, 08:47 AM
[No subject] - by Shan - 04-23-2004, 08:50 AM
[No subject] - by kuruvikal - 04-23-2004, 10:06 AM
[No subject] - by Shan - 04-23-2004, 10:52 AM
[No subject] - by Ilango - 04-23-2004, 10:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)