Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை
#25
நிதர்சன்,
நீங்கள் முதலில் ஒரு தேசிய விடுதலைக்கு எதிரான செயற்பாட்டாளர் ஏன்?எப்படி உருவாக்கப்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்?
இன்று இருக்கும் நிலையில் உண்மையாக உளத்தூய்மையாக,பொது நோக்கோடு சிந்திக்கும் எவருமே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்க மாட்டார்கள்.இப்படி இயங்குபவர்களை இருவகைப் படுத்தலாம், ஒரு வகையினர் இதனை ஒரு பிழைப்பாக, தொழிலாக மேற்கொள்ளுகின்றனர்.இவர்கள் பணத்திற்கு வாங்கப் படுகின்றனர்.மற்றவர்கள் தமக்கு இருக்கும் தனிப்பட்ட கோபங்களால், தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்குகின்றனர்.உதாரணம் நிர்மலா நித்தியானந்தன் பொன்றோர்.இவர்கள் தமிழ்த் தேசியம் என்பதையும்,அதன் பால் நடத்தப் படும் விடுதலைப் போராட்டத்தையும் ஒரு சர்வாதிகார ஜன நாயகம் அற்ற போராட்டம் என்பதாக பிரச்சாரம் செய்ய முனை கின்றனர்.அதற்கு மாற்றீடாக நாம் எதிர்ப் பிரச்சாரம் செய்தாலயே எம்மால் புலத்தில் ,இருக்கும் ஆதரவை குறிப்பாக புலத்தில் வளரும் இழஞ்சர் மத்தியில் வளர்க்க முடியும்.இங்கே நீங்கள் விடும் தவறு நீங்கள் நினைப்பதைப்போல் தான் எல்லா இழஞ்சர்களும் நினைப்பதாகக் கருதுகிறீர்கள்.குறிப்பாக இவர்கள் பாவிக்கும் சொற்பிரயோகங்களைக் கவனிதீர்களானால் ஜனா நாயகம்,மனித உரிமை ,பயங்கரவாதம் போன்றவை ,புலத்தில் வெகுவாக மேற்கத்திய அரசாங்களினால் பாவிக்கப் படும் சொற்பிரயோகங்கள்.
புலத்தில் இருக்கும் அடுத்த தலைமுறையிடம் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கானா ஆதரவை வீழ்த்தும் நோகுடனயே திட்டமிட்டு இவ்வாறான் பிரச்சாரங்கள் போராட்ட எதிர்ச் சக்திகளினால் நடத்தப் படுகின்றன.இவ்வாறனவற்றிற்கு நாங்கள் எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளா விட்டால் இன்றிருக்கும் ஆதரவை நீண்ட கால நோக்கில் தக்க வைத்துக் கொள்ள முடியாது போகலாம்.

இன்று களத்தில் இருக்கும் தேசிய விடுதலைப் போராட்டதிற்கான ஆதரவு என்பது வெறும் ஆயுத பலத்தால் ஏற்பட்டது என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.அது அவ்வாறல்லாமல் நெடு நாட்களாக மேற் கொள்ளப் பட்ட அரசியல் மயமாக்கலால் ஏற்பட்டது, என்பது களத்தில் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அரசியல் நடவடிக்கயில் ஈடுபட்டவர்களுக்கு ,அனுபவ ரீதியாக தெரிந்த ஒன்று.

ஆகவே ஒரு விழிப்புணர்வை ,அரசியல் தெளிவை புலத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் நாங்கள் நிச்சயமாக எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இன்று எதிரி புலத்தில் பல எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளை ஏன் மேற் கொள்கிறான் என்பதை சற்று சிந்தியுங்கள்?அவனுக்கு இதனால் பலன் ஏற்படாது என்றால் ஏன் அவன் இவ்வாறு செயற்பட வேண்டும்.

இவ்வாறு ஆங்காங்கே செயற்படுபவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட ரீதியிலேயே இயங்குகின்றனர்,இவர்களுக்கு பின் புலத்தில் இலங்கை அரசாங்கத்தின் உளவு அமைப்பு செயற்படுகிறது.ஆகவே இவர்கள் ஏற்கனவே இணைக்கப் பட்டு ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலயே இயங்கு கின்றனர்.இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு புலத்திலே மேற்கொள்ளப் படலாம் என்று நீங்கள் கருதிகிறீர்கள்?
புலத்தில் நிலவும் சட்ட திட்டங்களுக்கு அமய ஒருவர் ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுவது என்பது ஒரு குற்றம் ஆகாது.ஆகவே புலத்தில் இருக்கும் சட்ட திட்டங்களுக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது.இப்படியான நிலமையில், இவர்களை எமது சமூகத்திற்கு அடயாளம் காட்டுவதும்,இவர்களுக்கு எதிரான பிரச்சார அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே எமக்கு முன்னால் உள்ள தெரிவாகும்.அதை விடுத்து இவர்களைக் கண்டும் காணாமலும் விட்டால் ,இன்று சிறு விதையாக இருப்பது பின்னர் பெரு விரிச்சமாக வளரக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.இதை நங்கள் நிதர்சனமாக களத்தில் பார்த்திருக்கக் கூடிய விடயம்.

ஆகவே நான் முன்னர் கூறியதைப் போல் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட செய்தியில் பிழை இருப்பதகத் தெரிந்தால் ,அதனைக் கூறவும்.அதை விடுத்து எதிரிகளை இனங்காட்டக் கூடாது என்று சொல்வது, தீக் கோழி தலையை மண்ணில் புதைப்பதைப் போன்றது. நாங்கள் என்றுமே அரசியல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
Reply


Messages In This Thread
[No subject] - by பிறேம் - 03-28-2006, 06:05 AM
[No subject] - by Snegethy - 03-28-2006, 06:45 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 06:51 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:04 AM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:15 AM
[No subject] - by aathipan - 03-28-2006, 09:54 AM
[No subject] - by தூயவன் - 03-28-2006, 12:38 PM
[No subject] - by Kishaan - 03-28-2006, 03:16 PM
[No subject] - by kurukaalapoovan - 03-28-2006, 06:06 PM
[No subject] - by பிறேம் - 03-28-2006, 07:14 PM
[No subject] - by Snegethy - 03-28-2006, 08:23 PM
[No subject] - by narathar - 03-28-2006, 09:18 PM
[No subject] - by aathipan - 03-28-2006, 10:14 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 05:43 AM
[No subject] - by narathar - 03-29-2006, 10:12 AM
[No subject] - by மின்னல் - 03-29-2006, 02:32 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:33 PM
[No subject] - by Nitharsan - 03-29-2006, 09:41 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:03 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:06 PM
[No subject] - by பிறேம் - 03-29-2006, 10:10 PM
[No subject] - by Nitharsan - 03-30-2006, 06:10 AM
[No subject] - by கந்தப்பு - 03-30-2006, 06:30 AM
[No subject] - by narathar - 03-30-2006, 10:18 AM
[No subject] - by கந்தப்பு - 03-31-2006, 12:04 AM
[No subject] - by Vasampu - 03-31-2006, 01:08 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:36 AM
[No subject] - by kuloth - 03-31-2006, 02:53 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 05:35 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:44 AM
[No subject] - by Nitharsan - 03-31-2006, 06:16 AM
[No subject] - by மின்னல் - 03-31-2006, 06:57 AM
[No subject] - by narathar - 03-31-2006, 09:31 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-01-2006, 10:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)