03-30-2006, 09:53 AM
¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:Birundan Wrote:எனக்கு சீட்டுதா என்று சொல்லி அடிபடுபவர்கள் மத்தியில் வைகோ ஒரு வித்தியாசமான மனிதந்தான், மற்றவர்களுக்காக தனது சீற்றை விட்டுக்கொடுக்கும் வைகோ.
¿øÄÐ ! ¾í¸û ÅÕ¨¸¨Âò¾¡ý ±¾¢÷À¡÷ò¾¢Õó§¾ý.À¢Õó¾ý. ¸¼ó¾ ¿¡ýÌ ¿¡ð¸Ç¡ö ¨Å§¸¡ ¨ÅôÀüÈ¢ ¸Õò¦¾ØÅ¾¢ø¨Ä ±ý¸¢È ÓÊÅ¢ø þÕó§¾ý þôÀ×õ ´Õ §¸ûÅ¢ ÁðΧÁ ¯í¸Ç¢¼õ¾¡ý «Ð×õ. ±ýɧš ¾Á¢ú¿¡ðÎ ºð¼ÁýÈò¾¢ø º¢í¸õ ¸÷ƒ¢ì¸ §À¡¸¢ÈÐ,¡¨É À¢Ç¢Èô§À¡¸¢ÈÐ ±ýÚ ¦º¡øÄ¢Åó¾£÷¸û, þô§À¡Ð «Åâý þó¾ ÓÊ× ¿¢Â¡ÂÁ¡É¾¡? «È¢×¼¨ÁìÌýÈ¡ÌÁ¡?
Žì¸õ
¾õÀ¢Ô¨¼Â¡ý
வணக்கம் தம்பியுடையான், வைகோவின் எண்ணவோட்டத்தை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது, நாம் நினைத்தோம் திமுகாவை விட்டு விலமாட்டார் என்று, நடந்தது என்ன? அதிமுகவில் சேரமாட்டார் என்று நடந்தது என்ன? தனக்குரிய மரியாதை திமுகவில் வழங்கப்படவில்லை என்று, விலகினார். ஜெயலலிதாவை விட நல்லவராக் கருணாநிதி இருந்தபோதும், அவரை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து கொண்டார், தன்னையே வெஞ்சிறையில் வாட்டி எடுத்தவருடன், இதுகவனிக்கப்படவேண்டிய விடயம், தனது வேண்டாவெறுப்புக்காக அரசியல் நடத்துபவர் அல்ல, தனது சொந்த பணத்தில் கட்சி தொடங்கியவர், 13 வருடங்கள் எந்தவித வருமானமும் வரக்கூடிய பதவிகளில், பதவி வகிக்காதவர், மற்றவர்கள் கூறியது போன்று அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை கிடைத்திருந்தால், கையில் கறை பட்டிருக்கும் என்றனர், இதில் போட்டியிட்டிருந்தால் நிட்சயம் எம் எல் லே ஆகியிருப்பார், நிறைய உழைத்திருக்கலாம், சிலவேளை அதிமுக கூட்டனி வென்றால் மந்திரியே ஆகியிருப்பார் இன்னமும் நல்லாய் உழைத்திருக்கலாம், ஏன் அந்த வாய்புகளை தானாகவே இழந்தார், அவர் பணம் உழைப்பதற்காக அரசியல் நடத்தவில்லை தனது சொந்த பணத்தை இழந்து அரசியல் நடத்துகிறார், அவர் கொள்கைக்காக அரசியல் நடத்துகிறார், இப்போது மதிமுகாவிற்கு வேண்டியது அதன் வளர்சி, பலம் உடையவனின் பேச்சுதான் சபைஏறும், தனித்து போட்டியிடுவதை விட அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதால் கணிசமான இடங்களை வெல்லமுடியும், வென்றபின்னர் அதிமுகவே இவர்களை வெளியேற்றினாலும் நட்டமில்லையே, அவர்கள் வெண்ற எம் எல் லே பதவிகள் அவர்களது கட்சிய பலப்படுத்த மேலும் உதவும், திடீரென யாரும் முதலமைச்சர் ஆகிவிடமுடியாது, படிப்படியான வளர்ச்சிதான் அவர்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும். ஸ்டாலினை முதல்வராக்க முடிவெடுத பின்னர் திமுகவில் அருக்கென்ன வேலை, தனித்து நின்றும் போட்டியிட்டு பார்த்தார், நாடந்தது தெரிந்ததுதானே, வரலாறுதான் ஒருமனிதனுக்கு நல்ல ஆசான், வைகோ வரலாற்றில் இருந்து பாடம் கற்பவர். தேர்தலில் நின்று எம் எல் லே ஆகி வைகோ என்ன செய்யபோகிறார், கட்சியின் தலவர் அவர், வேண்டும் என்றால் பணம் உழைக்க வேண்டும் எனநினைப்பர்களுக்கு எம் எல் லே, பதவி தேவையாக இருக்கலாம், கொள்கைவீரனுக்கு எதற்கு பதவி. பதவி அவனைதேடி வரும், எழுதி வைத்து கொள்ளுங்கள் சிம்மக்குரலோனை சிம்மாசனம் ஏற்றாது மானமுள்ள தமிழர் ஓயமாட்டார்.
.
.
.

