Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன்.
#2
இந்த நான்கு குறும்படங்களையும் 10பவுண் கொடுத்து ஜனவரி 30 லண்டனில் பார்த்தேன். ஈழவர் திரைக்கலை மன்றத்தின் புதிய முயற்சி. மிகவும் வரவேற்க வேண்டியுது. அதை பார்த்து விட்டு வெறுமனே பேவதை விடுத்து அதன் விமர்சனத்தை வைப்பபது அவர்களை இன்னமும் வளர வைக்கும் என்ற ஆதங்கத்தில் எனது விமர்சனங்களை வைக்கிறேன்.
குறித்த நேரத்திற்கு படத்ததை ஆரம்பித்தது மிகவும் முன்னேற்றகரமான விடயம் அனால்
இந்த நிகழ்ச்யை ஒழுங்கு செய்தவர்கள் பணம் கொடுத்து படம் பாரக்க வந்தவர்களை, 30 நிமிட நேரம் ஈழவர் திரைக்கலை மன்றம் பற்றிய விவரணப்படத்தை போட்டு பொறுமையை சேதித்திருக்க கூடாது. ஒரு திரைப்படத்ததை பலரும் பல வித கண்ணோட்டத்துடன் பாரக்க வந்தாலும் பொரும்பாலானவர்கள் ஒரு பொழுதுபோக்கு என்ற நினபை;புடன் தான பார்க வருவார்கள். விளைவு ஆரம்பமே கோணல். எனக்கு பக்கத்தில் இருந்தவர் அசந்து து}ங்கி விட்டார். படம் தொடங்கியதும் தன்னை எழுப்பும் படி கூறிவிட்டு. நானும் பொறுமை காத்தபடி காத்திருந்தேன் படத்திற்காக.

முதலாவது படம் அழியாத கவிதை.
மிக அருமையாக படம்பிடிக்கப்பட்ட ஒரு கவிதையை கமரா நன்கே சொல்கிறது. புலம் பெயர் வாழ்வில் ஒரு வயதானவரின் தனிமையை சொல்ல வந்த இந்தக் கவிதை நம்மவர் திரைக்கலையை புலம் பெயர் மண்ணில் வளர வைப்பார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது. படம் தொடங்கும் போது நமக்கு ஒரு எதிர்பார்பபை தந்த இந்த குறும்படம் சில இடங்களில் எனக்கு ஏனோ ஏமாற்றத்தை தந்து விட்டது. ஒரு வயதானவர் இலங்கையிலிருந்து வருகிறார் அனால் அவர் முகத்தில் ஒரு களை தெரியவில்லை. மாறாக பல நாட்கள் இன்னுமொரு ஐரோப்பிய நாடு ஒன்றல் இருந்து வந்தவர் போலவே தெரிகிறார். மிக நீண்ட தலைமுடியுடன் தாயகத்திலிந்து அகதியாக வந்த ஒருவராக. என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. இருந்தாலும் தனது தனிமையை வெளிப்படுத்திய அந்த நடிப்பு இந்த குறையை பெரிதாக்கவில்லை. அனுபவம் மிக்க ஒரு நடிகர் அந்த முடியை தியாகம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சபாஸ்.. ஆனால் கிழவரின் தனிமையை காட்;ட இறுதிக்காட்சியான பூங்கா காட்சி கொஞ்சம் கூடிப்போனதாகவே எனக்குப் படுகிறது. அதைக் கொஞசம் குறைத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். இந்த படத்தில் அனுபவம் மிக்க நடிகர் இருந்தும் அவரின் பிள்ளைகளாக நடத்தவர்களின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. இயக்குனர் இதை இன்னும் மெருகு படுத்தியிருக்கலாம். இருந்தாலும் புதியவர்கள் என்றவகையில் வாழ்துக்கள். நான் சொன்ன குறைகளை விடுத்து படத்தை பார்க்கையில் ஒரு அற்புதமான படைப்பு இன்னுமும் மெருகூட்டியிருந்தால் இந்தக் கவிதை என்றென்றும் ஒரு அழியாத கவிதையாகவே இருந்திருக்கும் ஆனால் நம்மவர்கள் நிச்சயம் பாரக்க வேண்டிய ஒரு படைப்பு.

அடுத்த படம் கனவுகள்.
முதலாவது படத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட அந்த கனவு, அதாவது ஈழவர் திரைக்கலை இனி வீறுகொண்டு வளரும் என்ற அந்த கனவை, அடித்து சிதறவைத்த குறும் படம் தான் கனவு. இதை பற்றி நான் விமர்சனம் செய்ய முன், இந்த திரைப்பட கதையை சுருக்கமாக சொல்கிறேன். புலம் பெயரந்து வந்த ஒரு ஆண் மிக காலம் போய் திருமணம் செய்ய முனைகிறார். பொய்சொல்லி தாயகத்திலிருந்து ஒருபெண்ணை வரவளைக்கிறார்கள். பெண் வந்ததும் மாப்பிள்ளையின் குட்டு உடைகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே படம். மிக அருமையான கரு. நாம் இங்கு காணும் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் ஏன் இந்த படத்தை இந்த விழாவில் போட்டார்கள் என்று கேள்வி கேட்கும் வண்ணம் படத்தை எடுத்தவர்கள் மாற்றி விட்டார்கள். ஒளிப்பதிவு, நடிப்பு இதில் ஒரு சதவீத கவனம் செலுத்தியதாகவும் தெரிவில்லை. ஆக மொத்த்தில் இந்த படத்த்pல் பார்க்க கூடியதாக இருந்தது மாப்பிள்ளையின் நடிப்பு, மற்றும் அவரின் சகோதரியின் மகள், ஐசாக், அவரது நண்பர். இந்த நால்வரும் மிக எளிமையக நடித்ததுடன் கொஞ்சம் சிரிக்க வைத்தார்கள். அனால் இதை விட்டால் கனவு? ஒரு விரயமான கனவுதான்.

அடுத்தது, தாகம். ஒரு அமையான கரு. பழம் பெரும் நடிகரின் தனி நடிப்பு என்று கூட சொல்லலாம். ஆனால் தாகம் கூட ஒரு விதத்தில் என்னை ஏமாற்றி விட்டது. காரணம் இயக்குனர் சொல்ல வந்த விடயத்தை இழுத்தடித்து சொன்னதே. ஒரு 8 அல்லது 10 நிமிடத்தில் எடுக்க வேண்டிய கருவை 20 நிமிடநேரம் இழுத்ததுதான் இதற்கு காரணம். அத்துட்ன இந்த படத்தில் ஒளிப்பதிவு மிக மிக மோசம். காரணம் காட்சியில் நடிகரை தவிர பின்னணி முழுவதும் கண்ணை கூசவைக்கும் வெளிச்சம். மிக அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் ஏன் இந்த தவறை விட்டார். இந்த படங்கள் பற்றிய விமர்சனத்தை அண்மையில் ஒரு பத்திரிகையில் படித்தேன். அதில் இந்த நான்கு குறும்படங்களையும் பற்றி எழுதி விட்டு இனி வரும் காலங்களில் படம் எடுப்பவர்கள் இந்த படங்களை எடுத்தவரிடம் படித்து விட்டே எடுக்கவேண்டும். சும்மா ஒரு 400 பவுணுக்கு டிக்சனிலை கமரா வங்கிவிட்டு திருமணம், சாமத்திய சடங்குகளுக்கு படம் பிடிப்பவர்கள் திரைப்படம் எடுப்பதை நிறுத்தவேணும். முதலிலை இவை இந்த நான்கு படங்களை எடுத்தவர்களிடம் படிக்க வேணும் என்று எழுதியது கொஞ்சம் அதிக பிரசங்கி தனம். முதலாவது படமான அழியதா கவிதை எடுத்தவரிடம் படிக்க வேண்டும் என்டால் நான் நிச்சயம் ஒப்புக்கொண்டிருப்பன். ஆனால் அடுத்த இரண்டு படங்கள் எடுத்தவர்கள், திருமணம், சமாத்திய சடங்கை கூட ஒழுங்காக எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. காரணம் மிக மோசமாக ஒளிப்பதிவு. ஆனால் தாகத்தை சோரம் போகவிடாதது தனது தனி நடிப்பால் உயர்த்திய அந்த பழம் பெரும் நடிகருக்கும் சபாஸ்! இருந்தாலும் தாகம் மனதில் நிற்கும் படியாக நிலை நிறுத்த முடியாமல் போனது இயக்குனரின் தவறே. அழியாத கவிதை ஒரு சலனத்தை நம் மனதில் ஏற்படுத்திய போதும் இந்த தாகம் ஏனோ ஏமாற்றி விட்டது.

அடுத்து ஏகலைவன் நாட்டுக் கூத்து. சிறுவயதில் நான் பார்த்து ரசித்த கலை.. ஆனால் கூத்து என்பது நேரடிக் கலைகளில் இன்னுமெரு வடிவம். அதை சினிமா ஆக்க முடியுமா? மேடை நாடகம் மேடையில் செய்யப்பட வேண்டியுது. தெருக் கூத்து தெருக்களில் செய்யப்பட வேண்டியது. நாட்டுக் கூத்தின் முக்கிய கவர்ச்சி எலும்பும் தசையும் எம் கண்முன்னே தோன்றி எந்த ஒரு சாதனமும் இல்லாது தம் குரல் வளத்தால், உடல் வளத்தால் ஆடிப் பாடி நடித்து நம்மை மயக்கும் அந்த கலையை குறுந்திரையில்?? என்னால் முடியது. வேண்டுமென்றால் அதை ஆவணப்படுத்த இதை செய்ய வேண்டும், ஆனால் திரையிடக் கூடாது என்பதை நான் பார்த்து அனுபவித்த ஒன்று. எனவே அதைப்பற்றி நான் மேலும் விமர்சிக்க முனையவில்லை.

மொத்தத்தில் 10 பவுணுக்கு நாலு படங்கள்?? இருந்தாலும் இது நம்மவர் கலை வளர ஒரு விட்டமின் செலவு. என்னை பொறுத்த மட்டில் எனது எதிர்பார்புக்கு கிடைத்த ஒரு சின்ன ஏமாற்றம். ஆனால் இதையும் நான் கூறாவிட்டால், ஈழவர் திரைக்கலைக்கு நான் செய்த துரோகம்.. இன்னுமொரு துரோகம்??
விமர்சனம் என்பது துதிபாடுதல் அல்ல அவனை வளர்த்து விடும் ஒரு ஏணி. இந்த திரைக்கலை மன்றம் இனியும் வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையான விமர்சனத்தை உள்வாங்கி மீண்டும் நமக்கு ஒரு திறமான தீனி தர மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Messages In This Thread
[No subject] - by mohamed - 02-10-2004, 04:53 PM
[No subject] - by AJeevan - 02-10-2004, 08:54 PM
[No subject] - by AJeevan - 02-10-2004, 09:00 PM
[No subject] - by vasisutha - 02-26-2004, 08:38 PM
[No subject] - by AJeevan - 02-28-2004, 05:02 PM
[No subject] - by Manithaasan - 03-11-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 03-19-2004, 08:44 AM
[No subject] - by AJeevan - 03-19-2004, 11:02 AM
[No subject] - by Shan - 03-19-2004, 04:16 PM
[No subject] - by Manithaasan - 03-19-2004, 05:23 PM
[No subject] - by Manithaasan - 03-19-2004, 05:31 PM
[No subject] - by AJeevan - 03-20-2004, 12:07 AM
[No subject] - by AJeevan - 03-21-2004, 03:17 PM
[No subject] - by Manithaasan - 03-21-2004, 04:59 PM
[No subject] - by AJeevan - 03-23-2004, 05:21 PM
[No subject] - by AJeevan - 03-24-2004, 09:53 PM
[No subject] - by கண்ணன் - 03-25-2004, 01:24 AM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:25 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:25 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:28 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 06:45 PM
[No subject] - by Eelavan - 03-25-2004, 06:50 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 07:29 PM
[No subject] - by AJeevan - 03-25-2004, 08:18 PM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 09:24 PM
[No subject] - by Aalavanthan - 03-25-2004, 09:56 PM
[No subject] - by sOliyAn - 03-26-2004, 12:42 AM
[No subject] - by AJeevan - 03-26-2004, 09:32 AM
[No subject] - by கண்ணன் - 03-26-2004, 11:31 AM
[No subject] - by Eelavan - 03-26-2004, 12:30 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:00 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:09 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 01:14 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 02:39 AM
[No subject] - by AJeevan - 03-27-2004, 06:22 PM
[No subject] - by AJeevan - 03-28-2004, 12:16 AM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:50 AM
[No subject] - by Eelavan - 03-28-2004, 02:55 AM
[No subject] - by AJeevan - 03-28-2004, 07:05 AM
[No subject] - by AJeevan - 04-18-2004, 09:35 PM
[No subject] - by AJeevan - 04-18-2004, 09:47 PM
[No subject] - by Shan - 04-22-2004, 01:38 PM
[No subject] - by Ilango - 04-22-2004, 04:56 PM
[No subject] - by Shan - 04-23-2004, 08:47 AM
[No subject] - by Shan - 04-23-2004, 08:50 AM
[No subject] - by kuruvikal - 04-23-2004, 10:06 AM
[No subject] - by Shan - 04-23-2004, 10:52 AM
[No subject] - by Ilango - 04-23-2004, 10:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)