03-29-2006, 10:10 PM
Nitharsan Wrote:விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களை நாம் பெரியவர்களா மாற்றுகின்றோம் என்பதையும், கனடாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் துரெரிகளை இணைக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதையுமே சொன்னேன். அதே வேளை எட்டப்பர் இணையத்து செய்தி எவ்வளவு உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அந்த செய்தி முற்று முழுதான உண்மையில்லை என்பதில் எனக்கு வேறு கருத்தேதும் இல்லை.
விளம்பரப்படுத்தாதே அவர்கள் இணைந்து கொள்வார்கள். அவர்களை இணைப்பதற்கு விளம்பரம் தேவையில்லை. காரணம் அவர்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுவது பொதுவானவர்கள் மூலம். ஆகவே அவர்களை இணைக்க வேண்டிய தேவை யாரிற்கும் இல்லை. ஆயினும் அவர்களை சமூகத்தின் மத்தியில் காட்டவேண்டிய காலத்தின் தேவை உள்ளது. இன்று தமிழீழ போராட்டத்தின் முக்கியதொரு காலகட்டத்தில் நிற்கும் போது இவர்கள் மக்களிடையே ஊடுருவி தமிழரின் ஒற்றுமையை சிதைக்க முயல்வதை வெளிக்காட்டுவது தவறு என்று நீங்கள் கூறுகிறீர்களா :roll:

