03-28-2006, 07:04 AM
சிநேகிதி அச்செய்தி என்னால் திரட்டப்பட்டதல்ல. ஓர் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. செய்தியுடன் இணைய முகவரியினை இணைக்க மறந்த காரணத்தினால் பின்னர் அதன் கீழே அவ்விணைய இணைப்பினையும் வழங்கியிருந்தேன். கனடாத் தமிழ் சமூகத்துடன் தொடர்பிருந்ததனால் அம்மக்களைச் சென்றடைவதற்காகவே இச் செய்தியையும் இணைத்திருந்தேன். மற்றும் தொடர்மாடி வீடுகள் தொடர் வீடுகள் போன்றவற்றிற்கு அவ் வீதியின் எண் மட்டுமே தேடல் பொறிகளில் இடப்படுவது வழமை. அவற்றின் அறை எண் வழங்கப்படுதில்லை. அவ்வாறான ஓர் குடியிருப்பாகவும் இருக்கச் சந்தர்ப்பங்கள் உண்டு. ஏதாவது மேலதிக தகவல் கனேடிய நண்பர்கள் மூலம் அறியக்கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் உண்மை இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது. இதன் ஒரு தொடர் நிகழ்வாகவே HRW என்னும் அமைப்பின் அறிக்கையும் இருக்கலாம்.

