03-27-2006, 12:15 AM
Quote:உங்கள் கருத்தை வாசிக்க. எனது தமிழ் ஆசிரியரின் ஞாபகம் தான் வந்தது. அது தான் ஆசிரியரென்று எழுதினேன். அது சரி உண்மைக்கும் நீங்கள் ஆசிரியரா? சும்மா அறிந்துகொள்ளத்தான். உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன். கூடியளவு ஆங்கிலம் பாவிப்பதைக் குறைத்துக்கொள்கிறேன்.முழுநேரமாக இல்லை. வார இறுதி நாட்களில்தான் நான் ஆசிரியராக இருக்கிறேன். இங்குள்ள ஒரு தமிழ்ப்பாடசாலையில் இப்போது தலைமை ஆசிரியர் பணி.
தாயகத்தில் இருந்தபோது ஒரு முழுநேர ஆசிரியராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ வர ஆசைப்பட்டது உண்மை. ஆனால் பாடசாலையில் படிப்பில் மட்டும் கவனெமெடுக்காமல் விட்டதனால் புலம்பெயர்ந்து வந்து கல்வி கற்று எதிர்மாறான துறையில் வேலை பார்க்கிறேன். விதி!
தமிழின்மீது அப்படியொரு பைத்தியம். அதனால்தான் வார இறுதிநாட்களில் ஒரு தமிழ் ஆசிரியராக பணியாற்றி இந்நிலைக்கு வந்தேன் என்று கூறலாம்.
தமிழுக்கென்று யார், எது கேட்டாலும் ஒருநாளும் மறுப்பதில்லை.
உண்மையில் நீங்கள் ஒரு வித்தியாசமானவள்தான் அதனால்தான் இப்படிக்கேட்டீர்கள். கேட்டதற்குப் பதில் போதுமென்று நினைக்கிறேன்.
நன்றி.

