Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"சில வினாடிகள் ஜெயதேவனுடன்"...
#8
ஜெயதேவன் சுத்துமாத்துக்கார மாமா பாகம் 3 - மே 10 பிரித்தானிய சைவர்களின் கரிநாள்
வெள்ளிக்கிழமை 24 மார்ச் 2006 விமலேஸ்வரன்

மே மாதம் 10ம் திகதி பிரித்தானிய சைவ மக்களின் கரிநாளாக அமைந்து உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 10ம் திகதி ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூக விரோதிகளின் கைக்கு மாறியதுடன் அந்தக் களவாடல் முயற்சியில் அர்ச்சகர் குகன் சமூக விரோதிகளின் தூண்டுதலினால் சிவலிங்கத்தைத் துடைப்பத்தால் அடித்தார். அதிர்ச்சி அடைந்த சைவ அடியார்கள் ஆத்திரமடைந்து அர்ச்சகரைத் தாக்க முயன்றனர். அதனையும் பொருட்படுத்தாமல் ஒரு தெருச் சண்டியன் போல் குகன் தன் ப+நூலை அறுத்தெறிய முற்பட்டார். இந்தக் கலம்பகத்தை ஏற்கனவே திட்டமிட்டு இருந்த சமூக விரோதக் கும்பல் அமைதியாக நடக்க வேண்டிய கூட்டத்தைக் குழப்பி 50க்கும் மேற்பட்ட பொலிஸாரை ப+ட்சுடன் ஆலயத்திற்குள் வரவழைத்தனர். இந்த விசமத்தனத்தால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட சைவ அடியார்கள் ஆலயத்தை கொள்ளையிட்ட ஜெயதேவனைச் சுற்றி வளைத்து தம் ஆத்திரத்தைத் திட்டித்தீர்த்தனர். அந்நிலையில் நடப்பவை எதனையும் அறிந்திராத காவல்துறையினர் சைவ அடியார்களிடம் மாட்டிய ஜெயதேவனையும் மைத்துனர் சௌந்தர்ராஜனையும் காரில் ஏற்றி தப்பியோடச் செய்தனர். (முழுச் செய்தியும் படங்களுடன் உதயன் இதழ் 22ல்) ஆரம்பம்.

ஆலயம் ஆரம்பம்:- 2000ம் ஆண்டு (விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்னர்) ஈழபதீஸ்வரர் ஆலயம் தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் மு.சிவராஜா,கெ.விவேகானந்தன்,இ.ஜெயதேவன் அவரது மைத்துனர் பி.சௌந்தர்ராஜன் இன்னும் நால்வரும் சேர்ந்து ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் தாயக மக்களுக்கு பணம் அனுப்பப்பட்டது. ஆனால் ஜெயதேவனும் மைத்துனரும் ஆலயத்தை தம் குடும்பச் சொத்தாக மாற்ற திட்டமிட்டு இருந்தனர். அதில் மு.சிவராஜாவைத் தவிர மற்றையவர்கள் பெரிதாக ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தனர். அதனால் சிவராஜாவை நிர்வாகத்தில் இருந்து தூக்க ஜெயதேவன் திட்டமிட்டார். ஆனால் ஜெயதேவனும் மைத்துனரும் 2000ம் ஆண்டுக்குப் பின் ஊருக்கு பணமும் அனுப்பாமல் கணக்கும் காட்டாமல் காய் வெட்டி வந்ததை சிவராஜாவும் அங்கிருந்த பக்தர்களும் கேட்டனர். பலனளிக்காததால் மக்கள் முன் ஜெயதேவனை வரும்படி கோரி மே பத்தாம் திகதி பொதுக் கூட்டத்தைக் கூட்டினர். அர்ச்சகர் குகனைக் கொண்டு சிவலிங்கத்துக்கு துடைப்பத்தால் அடித்து அக்கூட்டத்தை கலம்பகமாக்கி குழப்புவதில் ஜெயதேவன் வெற்றி கண்டார்.

புலிகளின் தடையும் ஆலயக் கொள்ளையும்:- பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டதும் ஜெயதேவன் குழு ஆலயத்தினை குடும்பச் சொத்தாக்குவதில் தீவிரமாக இயங்கியது. கோயில் உண்டியல் ஜெயதேவன் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊருக்கு அனுப்பப்படும் பணம் நிறுத்தப்பட்டது. புலிகள் தடை செய்யப்பட்டதும் ஜெயதேவன் ஆலயத்தை முழுமையாக குடும்பச் சொத்தாக்கினார். புலிகளின் முக்கிய அரசியல் பிரமுகருக்கு எதிராக ஆங்கிலத்திலும் தமிழிலும் மொட்டைக் கடிதம் எழுதி வெளியிட்டார். ஜெயதேவனின் அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்ட புலி ஆதரவாளர்களை புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்திக் காட்டிக் கொடுத்தார். இதனால் சில முக்கிய பிரமுகர்களின் வீடு முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டது. தனது வஞ்சம் தீர்க்க பொது மக்களின் பணத்தை விரயமாக்கி புலனாய்வுப் பிரிவுகளை நடவடிக்கைகள் எடுக்கத் தூண்டியது. சிலரின் வீட்டுத் தொலைபேசிகள் தற்போதும் ஒட்டுக் கேட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த தலைவர்:- இத்தனை மோசடியும் செய்து விட்டு பிரித்தானியாவில் புலிகளின் தடை நீக்கப்பட்டால் தான் அடுத்த தலைவர் என ஜெயதேவனால் நாசுக்காகப் பிரச்சாரம் வேறு செய்யப்படுகி;றது போல் பாஸ்கரன் போன்ற நம்பிக்கெட்ட சிலரைப் பயன்படுத்தி தான் பிரித்தானியாவின் அடுத்த தலைவர் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்ற வகையில் புலிகள் தடைசெய்யப்பட்டதும் ஈழபதீஸ்வரர் ஆலயத்திலும் வுஊர்யு இலும் சுருட்டும் அளவுக்குச் சுருட்டிக் கொண்டு இப்போது பதவிக்கு வலைவிரித்து உள்ளனர். ஜெயதேவனும் அவரது சகபாடி இந்திரகுமாரும் இணைந்து மொட்டைக் கடிதம் மற்றும் மொட்டைப் பிரசுரம் விட்டுவிட்டு தற்போது புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் முன்பக்கத்தில் போட்டு தன் கபடக் கூத்துக்களை மறைக்க விடுதலை என்ற பெயரில் மொட்டைப் பத்திரிகை ஒன்றை வெளியிடுகின்றனர். (ஆசிரியரும்,கட்டுரையாளரும் இல்லாத பத்திரிகை) அதில் யாரும் விளம்பரம் செய்வதில்லை. சுருட்டிய பணத்தில் வெளியிடப்படும் இந்த இலவசப் பத்திரிகையில் ஜொனி வோக்கர் இந்திரகுமார் சுருட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம் என்று எழுதுகிறார். தற்போது நிர்வாக மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தால் கணிக்கப்பட்ட TR-TECk ஜெயதேவனுடன் இணைந்து தங்கள் மோசடிகளை மறைக்க 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தியாகங்களை கேவலப்படுத்துகின்றனர்.

நன்றி உதயன் ஜெயபாலன்.
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 03-20-2006, 12:53 AM
[No subject] - by Bond007 - 03-21-2006, 03:47 PM
[No subject] - by Bond007 - 03-21-2006, 06:38 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-22-2006, 04:08 PM
[No subject] - by Bond007 - 03-22-2006, 04:30 PM
[No subject] - by கந்தப்பு - 03-22-2006, 11:22 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-24-2006, 06:43 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-24-2006, 06:46 PM
[No subject] - by Anandasangaree - 03-24-2006, 07:16 PM
[No subject] - by Anandasangaree - 04-01-2006, 12:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)