02-08-2004, 10:57 AM
manimaran Wrote:அது சரி தாத்தா.. நீங்க அந்த 'ழ' பற்றி எனது கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையேமறைநூல்களில் காணப்படும் மொழியிலிருந்து அந்தணமொழியான சமசுகிருதம் தோன்றியது.அதை ஆதரமாக கொண்டு பிராகிருத மொழி தோன்றியது.இந்த பிராகிருத மொழியிலிருந்தே இந்தியமொழிகல் அனைத்தும் உருப்பெற்றன என மொழி ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர்.இதற்கு சான்றாக தமிழின் ஆதி எழுத்துவடிவங்களான் வட்டெழுத்துக்கள் பிராகிருத எழுத்துவடிவங்களை ஒத்துள்ளதை நிறுத்துகின்றனர்.இதில் 'ழ'கரம்(நுனிநா அணரி அண்ணம் வருடுவதால் பிறக்கும் எழுத்து) தமிழ் மற்றும் தமிழின் குழவி(அ)தங்கை என்றழைக்கப்படும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலேயே இடம் பெற்றுள்ளது.பல சமசுகிருத ஆர்வலர்கள் தமிழர்கள் சிறப்பென பீடுறும் 'ழ'கரத்திற்கு இணையான ஓசையுடைய எழுத்து மறைநூல்களில் உண்டென்றும் அதனை 'da 'என தற்சமயம் ஆங்கிலத்தில் குறிக்கின்றனர் என்றும் நவில்கின்றனர்.காலம் என்னும் பெருவெள்ளத்தால் 'ழ'விற்கு இணையான உச்சரிப்பையுடைய 'da ' தவறாக 'ட'என உச்சரிக்கபடுகின்றது என்பது அவர் வாதம்.தமிழர்கள் தமிழை சீராட்டும் காலத்திலேயே 'ழ'கரம் 'ல'கரமாயும், 'ச'கரம் 'ஸ' கரமாயும் சிதைவுக்குள்ளாயிருப்பதை தெளிந்தால் அழிந்துவிட்ட மறைமொழியில் புழங்கிய 'da ', 'ழ' என்றே உச்சரிக்கபெற்றது என்பது புலப்படும் என்று ஆணித்தரமாயும் அறைகின்றனர்.இதில் விசித்திரம் என்னவென்றால் 'da 'விற்கு இரண்டு வகையான உச்சரிப்புகள் உண்டாம். ஒன்று 'ட' மற்றது 'ழ'வாம். நான்கு மறைகளில் ஒன்றில் 'ட' ஒலியிலும் மற்றொன்றில் 'ழ' ஒலியிலும் இவ்வெழுத்து வாசிக்கப்பெறவேண்டும் என்றும் கூத்தாடுகின்றனர்.
தமிழர்களே! கேரளகரையோரம் சற்றே ஒதுங்கி செவி கொடுத்து கேளுங்கள்.அங்கே நான் கேட்பது 'ழ'கரம் மலையாளத்திற்கே உரிய சிறப்பெழுத்து என்று களிப்புறும் பேச்சே. அதற்கு சான்றாக அவர் பகர்வது- நுனிநா மடித்து அண்ணம் வருடி ஒலிக்க அறிந்தவன் மலையாளி மற்றவன் மாற்றான். சத்தியமாக சொல்கின்றேன் தொல்காப்பிய எழுத்திலக்கணத்திற்கேற்ப "ந,ண,ன,ற,ர,ல,ள,ழ"-கரங்களை மிகச்சரியாக ஒலிக்க அறிந்தவன் மலையாளி. 95 விழுக்காடு தமிழர்கள் இலக்கணப்படி இவ்வெழுத்துக்களை அப்பழுக்கில்லாது உச்சரிக்க அறியார் என்ற அவலத்தை என்னும் எத்தனை நாள் தான் காலம் நடத்துமோ?.
ஐயகோ! காலப்பெரும்புணரியில் தமிழும் தமிழனும் என்னும் எத்தனை எத்தனை ??????????????.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

