03-19-2006, 02:36 PM
பிரகாரன் மீது அதிக பற்றுள்ளவன் நான்'
கறுப்பு ஜீன்ஸ், கறுப்பு பனியன், அதில் சிவப்பு நிறத்தில் சேகுவேரா படம் என ஒரு போராளி போலவே இருக்கிறார் இயக்குநர் சீமான். பேச ஆரம்பித்தால், வார்த்தைகள் அருவியாகக் கொட்டுகின்றன. சுத்தத் தமிழில்... அவ்வப்போது சத்தத் தமிழில்! `தம்பி' பட வெற்றிச் செய்திகளால் சந்தோஷப்படுகிற முகத்தில், திடீர் திடீரெனக் கொப்பளிக்கிறது கோபம்.
"தம்பி கதைக்கான விதையை எங்கே இருந்து எடுத்தீங்க?"
"உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகிற சின்னச்சின்ன கோபங்களைத் தொகுத்துத்தான் தம்பியை உருவாக்கினேன். சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி தனது வாகனத்தை நிறுத்துகிற ஒருவர், குப்பைத் தொட்டியை அலட்சியப்படுத்தி, வீதியில் குப்பையை வீசியெறிகிற பொறுப்பற்ற இளைஞன் இவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகிற வருத்தம் கலந்த கோபம்தான் `தம்பி'. அதுவும், இந்தச் சமூகம் என் வீடு என்று நினைக்கிற என்னைப் போன்ற பொதுவுடைமைவாதிகளுக்கு இந்தக் கோபம் இன்னும் அதிகமாக வரும்"
"படத்தில் மாதவனின் கரக்டர் பேரு தம்பி வேலு தொண்டைமான். இது தம்பி வேலு பிரபாகரன் என்பதைப் போலவே இருக்கிறதே?"
"பிரபாகரன் மீது அதிகப் பற்று உள்ளவன் நான். அதனால் அப்படி வைத்தேன். இங்கு நடக்கும் வன்முறையை மட்டுமல்ல, உலக அளவில் வன்முறை எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கிற படம் இது. இப்போது பிரபாகரன், `என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். செய்யத் தயாராக இருக்கிறேன். எங்களுக்குத் தேவை அமைதி; தமிழீழம்! என்று அறிவித்திருக்கிறார். வன்முறை வாழ்க்கை எப்போதுமே பாதுகாப்பற்றது. அதைத்தான் `தம்பி'யில் சொல்லி இருக்கிறேன்.
<b>பொது இடம் ஒன்றில் கதாநாயகி பூஜாவை செல்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் ரௌடிகளை மாதவன் தட்டிக் கேட்பார். அவர் சுற்றி வளைத்துத் தாக்க, `இப்ப நான் என்ன பண்ண? சொல்லு' என்று கர்ஜிப்பார். அப்படி ஒரு நிலைமையில் தான் பிரபாகரன் இருக்கிறார். அவருடைய மக்கள் போராட்டத்துக்காக அவரைப் பெரிதும் மதிக்கிறேன். `தம்பி' படத்தின் வெற்றியை பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்!"</b>
"மாதவனை ஒரு ஜாலியான ஹீரோவாகவே பார்த்தவர்கள் நாம். அவரை எப்படி இந்த கதைக்குத் தேர்ந்தெடுத்தீர்கள்?"
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எந்தக் ஹீரோவும் என் படத்தில் நடிக்க முன்வரவில்லை. சினிமா மொழியில் சொன்னால், நான் மார்க்கெட் இல்லாத டைரக்டர். ஆனால் மாதவன் கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புக் கொண்டார். தவிர, அவர் திறமையான நடிகர் என்பதை `அன்பே சிவம்' படத்தில் கண்டு கொண்டேன். கமல் என்கிற ஒப்பற்ற கலைஞனோடு போட்டி போட்டு நடித்திருந்தார். அதுவே எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது!"
"அடுத்து என்ன படம் பண்ணப் போகிறீர்கள்?"
"சமரன் என்று எனக்குள் ஒரு படம் உறங்கிக்கிடக்கிறது. என் மண்ணை, மக்களையே யதார்த்தமாகச் சொல்ல நினைத்திருக்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் வரலாற்றுப் படமாகவும், அடுத்து இப்போதைய வாழ்க்கைப் படமாகவும் மாறுகிற கதை அது. சமரன் என்றால் போர் வீரன் என்று பொருள். விக்ரம் அல்லது விஜய்யை வைத்து அந்தப் படத்தைப் பண்ணினால் சிறப்பாக இருக்கும். இனிமேல்தான் அவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக `புரட்சி' என்றொரு படம். சேரனை வைத்துப் பண்ணப் போகிறேன். எது உண்மையான புரட்சி என மக்களுக்கு விளங்க வைக்கிற படமாக அது இருக்கும்."
"நல்ல படங்கள் வந்துகொண்டு இருக்கும் நேரத்தில், ஆபாசமான படங்களும் வருகிறதே?"
"இயக்குநர்களுக்கு நிர்ப்பந்தம் ஒரு காரணம். சினிமா ஒரு வியாபாரம். மணிரத்னமோ, பாலாவோ, சேரனோ அந்த நிர்ப்பந்த எல்லையை தாண்டி விட்டார்கள். மக்கள் மேலும் தப்பிருக்கிறது. குத்துப் பாடல்களைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். நமது சகோதரியை அப்படி அரைகுறை ஆடையில் திரையில் பார்த்து ரசிப்போமா என்று ஒரு கணம் அவர்கள் நினைத்துப் பார்த்தால், கவர்ச்சியையும் ஆபாசத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த மனப்பான்மை மாறும் வரை இது மாதிரியான பாடல்களும், ஆபாசப் படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்."
"ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க, திருமாவளவன் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டாரே... இனி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் நிலைமை?"
"தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்த, மொழி என்கிற ஒரு அற்புதமான கருவிக்காகத் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்தாலும், ஆண்டிப்பட்டியில் இருந்தாலும் நம்மை இணைக்கும் தமிழ் மொழி மாதிரி, யார் யார் எங்கிருந்தாலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் எங்களை இணைத்திருக்கும். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது அந்த இருவர் மட்டும் கிடையாது. ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது. நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட எந்த விடயமும் அவ்வளவு சீக்கிரம் செயலிழக்காது!"
"பல நடிகர்களும் அரசியல் கட்சிகளில் தொடர்ந்து சேர்ந்துகொண்டு இருக்கிறார்களே?"
"எனக்கும் ஒன்று புரியவில்லை. தன்னுடைய படங்கள் வசூலை வாரிக் கொடுக்கும்போது, குப்பனையும், சுப்பனையும் பற்றித் தமிழ்க் கதாநாயகர்களுக்கு வராத அக்கறை, கையில் படம் இல்லாதபோது, வருமானம் இல்லாதபோது எப்படி பொத்துக் கொண்டு வருகிறது?கண் தானமோ, ரத்த தானமோ செய்துவிட்டு அந்தச் சான்றிதழைக் கொண்டு வரும் ரசிகர்கள் தன்னோடு நின்று படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனின் ரசிகர் மன்றத்தினர் இதுவரை 15 ஆயிரம் லீற்றர் ரத்த தானம் செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். சிரஞ்சீவி, கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இல்லையே?
நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால், அதற்குப் பல வழிகள் உள்ளன. தயவுசெய்து அரசியலிலும் நடிக்காதீர்கள் என்கிறேன்.
விகடன் . கொம்
நன்றி: சூரியன் இணையத்தளம்