Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவிலை
#1
<b>நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவில்லை </b>

<img src='http://img480.imageshack.us/img480/7292/bamjangetty6da.gif' border='0' alt='user posted image'>
கௌதம புத்தரின் மறுபிறவி என்று அவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படும் ஒரு பையனை தேடும் பணியை நேபாள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

காட்டில் மரத்தின் விழுதுகளுக்கு இடையே கடந்த மே மாதம் முதல் தியானத்தில் அமர்ந்திருந்த ராம் பகதூர் பன்ஜன் என்னும் அந்த பையன், அங்கிருந்து காணாமல் போயுள்ளான்.

தியானம் செய்துகொண்டிருந்தபோது அவன் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தவில்லை என்று அவனது உதவியாளர்கள் கூறியுள்ளனர்.

அவனை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கனக்கானவர்கள் அங்கு வருகிறார்கள்.

அந்த பையன் கடத்தப்பட்டானா அல்லது தானாகவே எங்காவது சென்றுவிட்டானா என்பது குறித்து புலன்விசாரணை செய்து வருவதாக பாரா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள்.
Reply


Messages In This Thread
நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவிலை - by தாரணி - 03-17-2006, 07:52 PM
[No subject] - by Jeeva - 03-18-2006, 03:28 AM
[No subject] - by putthan - 03-19-2006, 07:44 AM
[No subject] - by கந்தப்பு - 03-20-2006, 02:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)