![]() |
|
நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவிலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவிலை (/showthread.php?tid=514) |
நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவிலை - தாரணி - 03-17-2006 <b>நேபாளத்தில் புத்தரின் மறுபிறவியாக கருதப்பட்ட பையனைக் காணவில்லை </b> <img src='http://img480.imageshack.us/img480/7292/bamjangetty6da.gif' border='0' alt='user posted image'> கௌதம புத்தரின் மறுபிறவி என்று அவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படும் ஒரு பையனை தேடும் பணியை நேபாள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். காட்டில் மரத்தின் விழுதுகளுக்கு இடையே கடந்த மே மாதம் முதல் தியானத்தில் அமர்ந்திருந்த ராம் பகதூர் பன்ஜன் என்னும் அந்த பையன், அங்கிருந்து காணாமல் போயுள்ளான். தியானம் செய்துகொண்டிருந்தபோது அவன் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தவில்லை என்று அவனது உதவியாளர்கள் கூறியுள்ளனர். அவனை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கனக்கானவர்கள் அங்கு வருகிறார்கள். அந்த பையன் கடத்தப்பட்டானா அல்லது தானாகவே எங்காவது சென்றுவிட்டானா என்பது குறித்து புலன்விசாரணை செய்து வருவதாக பாரா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள். - Jeeva - 03-18-2006 புத்தரிடமே சென்றுவிட்டான் போல - putthan - 03-19-2006 புலம் பெயர்ந்த டமிழ்ஸ் கடத்திட்டு வந்திருப்பார்கள் உண்டியல் வைப்பதற்கு. உங்க கனடா பக்கம் வந்தா நீங்க அறிய தாங்கோ என்ட நாட்டிற்கு வந்தால் (அவுஸ்ரேலியா) வந்தால் நான் அறிய தருகிறேன். உண்மையா புத்தன் மறுபிறவி எடுத்திருந்தா ஈழ தமிழனின் பிரச்சினைக்கு சமாதான தூதுவராக போவாரா....இல்லாட்டி அங்கே தான் போயிட்டாரோ தெரியவில்லை......!!!!!!!! - கந்தப்பு - 03-20-2006 ஏற்கனவே தோன்றிய புத்தபெருமானினால், அவரைப்பின் பற்றும் சமயத்தினைச்சேர்ந்தவர்களினால்,மொழியினைச் சேர்ந்தவர்களினால், இன்னொரு சமயத்தினரை,மொழியினரைக் ஒடுக்கி அடக்கி கொலை செய்து, உரிமைகளினைப் பரித்து அட்டகாசம் செய்கிறார்கள். புத்தன் மறுபடியும் பிறந்துவிட்டாரா?. அப்படியாயின் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் உலகில் தோன்றப்போகிறதோ? |