Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்
#3
நல்ல பதிவு பிரபா. எனக்குத்தெரிந்து நான் பார்த்தமுதல் படம் தெய்வம். பிறகு எங்கள் சித்தியின் கல்யாணம் முடிந்தவுடன் உறவினர்களுடன் பார்த்தபடம் ராஜபாட் ரங்கத்துறை.
அதன்பிறகு எனது அப்பம்மாவுடன் இணுவில் காலிங்கனில் பார்த்த ராமன் தேடிய சீதை. அப்பம்மா இது ஒரு பக்திப்படம் என்று நினைத்துவர அங்கே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் ஒடிப்புடித்து விளையாட, நல்ல திட்டு விழுந்தது.
பிறகு ராஜா தியேட்டரில் பார்த்த நல்லனேரம். அந்தச்சமயத்தில் மீன் வாங்க கே.கே.எஸ் வீதியில் நின்ற சனத்தையும்,மீன் வியாபாரியும் வேகமாகச்சென்ற பேரூந்து இடித்து சிலர் இறந்தசெய்தி வீரகேசரியில் படங்களுடன் வர, நல்லனேரம் படத்தில் வரும் 'தொட்டால் என்றும்....' என்று தொடங்கும் படலினை இலங்கை வானொலியில் கேட்கும் போது, இந்த சோகச்செய்தி யாபகத்துக்கு வரும்.
பிறகு வெள்ளிக்கிழமை விரதம்(மனேகரா), ஊட்டிவரை உறவு(வெலிங்டன்), ஆதிபராசக்தி(வின்சர்), அன்னை வேளங்கன்னி(லிடோ), எங்கபாட்டன் சொத்து(ஜெயசங்கர் மிருகங்களுடன் நடித்தது).
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பெயர்கள் யாபகமாக இருக்கிறது என்று. நான் பார்த்தபடங்கள் எல்லாவற்றையும் எனக்கு 5ம் வகுப்பு படிக்கும் வரை ஒரு கொப்பியில் எழுதிவைக்கும் பழக்கம் உண்டு. அப்பாவிடம் கேட்கும்போது தான் எனக்கு தெரிந்தது நான் கைக்குழந்தையாக இருக்கும்போது தியேட்டருக்கு சென்றபடங்கள் ரிக்சாக்காரன்,ராஜா.
என்னை பெரும்பாலும் பக்திப்படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ் படங்களுக்கும் எம்.ஜி.ஆர் படங்களுக்கும் தான் கூட்டிக்கொண்டுபோவர்கள். அப்பொழுது எனக்கு எம்.ஜி.ஆர் தான் கூடப்பிடிக்கும். நல்லாச் சண்டைபோடுவார் என்று. பிறகு அவர் முதல் அமைச்சரான பின்பு படங்கள் நடிப்பதினைக் நிறுத்துக்கொண்டதால் எனக்குச்சரியான கவலை.
நான் பெற்றோர்களுடன் யாழ்ப்பாணத்தில் புதிதாகவரும் பக்திப்படங்களினை உடனே பார்த்து விடுவதால், பிறகு எனது பாடசாலையான தந்தை செல்வா தொடக்கனிலைப்பள்ளியினர்(தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 6ம் வகுப்புக்கு கீழ்ப்பட்ட பாடசாலை) மாணவர்களினைக்கூட்டிக்கொண்டு தெல்லிப்பளை துர்க்கா தியேட்டர், காங்கேசன் துறையில் உள்ள தியேட்டர்களுக்குப்போகும் போது நான் முன்பே பார்த்த பெருமை தாங்காது படத்தின் கதைகளினை நண்பர்களுக்குச்சொல்வேன். அப்படிபார்த்தபடங்கள் தசாவதாரம்,அகத்தியர்,திருவருள்,சுப்ரபாதம்,ஞானக்குழந்தை,ஒளவையார்.
ஒளவையார் படத்திற்கு படம் தொடங்கமுன்பு 9மணிக்கே துர்க்கா தியேட்டரில் இருத்திவிட, வகுப்பு மொனிட்டர்(பெண் மொனிட்டர்) 2மணித்தியலமாக சத்தமாகக்கதைக்கும் பிள்ளைகளின் பெயர்களினை எழுதி ஆசிரியரிடம் கொடுத்து சில மாணவர்கள் அடுத்தனால் வகுப்பில் அடிவாங்கினார்கள்.
எனக்கு விசிலடிக்கத்தெரியாது. முயற்சி செய்து பார்ப்பேன், சத்தம் வராது. படம் தொடங்கும்போது முயற்சி செய்யும்போது எனக்குப்பக்க்த்திலிருந்த ஒருமாணவர் விசிலடிக்க அந்தப்பெண் பிள்ளை ஆசிரியருக்கு நான் தான் விசிலடித்தது என்று சொல்லுவேன் என்று வெருட்ட, நான் அதற்கு அவ தியேட்டரில் பீடா வாங்கியதினைச் சொல்லுவேன் என்று பயமுறுத்த நல்ல காலம் அவ சொல்லவில்லை. இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by Aravinthan - 03-16-2006, 12:59 AM
[No subject] - by kanapraba - 03-16-2006, 11:25 PM
[No subject] - by sinnakuddy - 03-17-2006, 12:30 AM
[No subject] - by ThamilMahan - 03-17-2006, 01:07 AM
[No subject] - by sinnakuddy - 03-17-2006, 01:19 AM
[No subject] - by Aravinthan - 03-17-2006, 01:21 AM
[No subject] - by கந்தப்பு - 03-20-2006, 02:33 AM
[No subject] - by கந்தப்பு - 03-27-2006, 12:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)