![]() |
|
சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும் (/showthread.php?tid=526) |
சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும் - kanapraba - 03-15-2006 நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso). முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html Re: சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும் - AJeevan - 03-16-2006 நல்லதொரு விமர்சனம். தகவலுக்கு நன்றி கானபிரபா. - Aravinthan - 03-16-2006 நல்ல பதிவு பிரபா. எனக்குத்தெரிந்து நான் பார்த்தமுதல் படம் தெய்வம். பிறகு எங்கள் சித்தியின் கல்யாணம் முடிந்தவுடன் உறவினர்களுடன் பார்த்தபடம் ராஜபாட் ரங்கத்துறை. அதன்பிறகு எனது அப்பம்மாவுடன் இணுவில் காலிங்கனில் பார்த்த ராமன் தேடிய சீதை. அப்பம்மா இது ஒரு பக்திப்படம் என்று நினைத்துவர அங்கே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் ஒடிப்புடித்து விளையாட, நல்ல திட்டு விழுந்தது. பிறகு ராஜா தியேட்டரில் பார்த்த நல்லனேரம். அந்தச்சமயத்தில் மீன் வாங்க கே.கே.எஸ் வீதியில் நின்ற சனத்தையும்,மீன் வியாபாரியும் வேகமாகச்சென்ற பேரூந்து இடித்து சிலர் இறந்தசெய்தி வீரகேசரியில் படங்களுடன் வர, நல்லனேரம் படத்தில் வரும் 'தொட்டால் என்றும்....' என்று தொடங்கும் படலினை இலங்கை வானொலியில் கேட்கும் போது, இந்த சோகச்செய்தி யாபகத்துக்கு வரும். பிறகு வெள்ளிக்கிழமை விரதம்(மனேகரா), ஊட்டிவரை உறவு(வெலிங்டன்), ஆதிபராசக்தி(வின்சர்), அன்னை வேளங்கன்னி(லிடோ), எங்கபாட்டன் சொத்து(ஜெயசங்கர் மிருகங்களுடன் நடித்தது). உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பெயர்கள் யாபகமாக இருக்கிறது என்று. நான் பார்த்தபடங்கள் எல்லாவற்றையும் எனக்கு 5ம் வகுப்பு படிக்கும் வரை ஒரு கொப்பியில் எழுதிவைக்கும் பழக்கம் உண்டு. அப்பாவிடம் கேட்கும்போது தான் எனக்கு தெரிந்தது நான் கைக்குழந்தையாக இருக்கும்போது தியேட்டருக்கு சென்றபடங்கள் ரிக்சாக்காரன்,ராஜா. என்னை பெரும்பாலும் பக்திப்படங்களுக்கும், தேவர் பிலிம்ஸ் படங்களுக்கும் எம்.ஜி.ஆர் படங்களுக்கும் தான் கூட்டிக்கொண்டுபோவர்கள். அப்பொழுது எனக்கு எம்.ஜி.ஆர் தான் கூடப்பிடிக்கும். நல்லாச் சண்டைபோடுவார் என்று. பிறகு அவர் முதல் அமைச்சரான பின்பு படங்கள் நடிப்பதினைக் நிறுத்துக்கொண்டதால் எனக்குச்சரியான கவலை. நான் பெற்றோர்களுடன் யாழ்ப்பாணத்தில் புதிதாகவரும் பக்திப்படங்களினை உடனே பார்த்து விடுவதால், பிறகு எனது பாடசாலையான தந்தை செல்வா தொடக்கனிலைப்பள்ளியினர்(தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 6ம் வகுப்புக்கு கீழ்ப்பட்ட பாடசாலை) மாணவர்களினைக்கூட்டிக்கொண்டு தெல்லிப்பளை துர்க்கா தியேட்டர், காங்கேசன் துறையில் உள்ள தியேட்டர்களுக்குப்போகும் போது நான் முன்பே பார்த்த பெருமை தாங்காது படத்தின் கதைகளினை நண்பர்களுக்குச்சொல்வேன். அப்படிபார்த்தபடங்கள் தசாவதாரம்,அகத்தியர்,திருவருள்,சுப்ரபாதம்,ஞானக்குழந்தை,ஒளவையார். ஒளவையார் படத்திற்கு படம் தொடங்கமுன்பு 9மணிக்கே துர்க்கா தியேட்டரில் இருத்திவிட, வகுப்பு மொனிட்டர்(பெண் மொனிட்டர்) 2மணித்தியலமாக சத்தமாகக்கதைக்கும் பிள்ளைகளின் பெயர்களினை எழுதி ஆசிரியரிடம் கொடுத்து சில மாணவர்கள் அடுத்தனால் வகுப்பில் அடிவாங்கினார்கள். எனக்கு விசிலடிக்கத்தெரியாது. முயற்சி செய்து பார்ப்பேன், சத்தம் வராது. படம் தொடங்கும்போது முயற்சி செய்யும்போது எனக்குப்பக்க்த்திலிருந்த ஒருமாணவர் விசிலடிக்க அந்தப்பெண் பிள்ளை ஆசிரியருக்கு நான் தான் விசிலடித்தது என்று சொல்லுவேன் என்று வெருட்ட, நான் அதற்கு அவ தியேட்டரில் பீடா வாங்கியதினைச் சொல்லுவேன் என்று பயமுறுத்த நல்ல காலம் அவ சொல்லவில்லை. இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம் - kanapraba - 03-16-2006 தங்களின் மேலான பின்னூட்டத்தை வழங்கிய அஜீவனுக்கும் அரவிந்தனுக்கும் என் நன்றிகள். அரவிந்தன் பழைய விஷயங்கள் பலவற்றை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். - sinnakuddy - 03-17-2006 சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்... - ThamilMahan - 03-17-2006 sinnakuddy Wrote:சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்... ¯ñ½¡É? ´ÕÀ¢Ä¢¨Á ¨ÅîÍ 2 À¼õ ¸¡ðÊɨŧÂ? - sinnakuddy - 03-17-2006 ThamilMahan Wrote:ஒமனை. 1 பிலிமை வைச்சு 2 படம்காட்டலை ..2 தீயட்டரிலை 1 பிலிமை வைச்சு ஒரே படத்தை காட்டினவை <!--emo&sinnakuddy Wrote:சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்... --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Aravinthan - 03-17-2006 ThamilMahan Wrote:sinnakuddy Wrote:சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்... உலகம்சுற்றும் வாலிபன் படத்தினை யாழ்ப்பாணத்தில் இரண்டு தியேட்டரில் ஒரே நேரத்தில் வெளியிட்டார்கள். ரீலை அங்கேயும் இங்கேயும் காட்டினார்கள்( நான் நினைக்கிறேன் சிறிதரிலும், ராணி தியேட்டரிலும். நிச்சயமாகச்சொல்லமுடியவில்லை. ஒரு தியேட்டரிலை சில வாரங்களும், மற்றைய தியேட்டரில் பல மாதங்களும் படம் ஒடியது) - கந்தப்பு - 03-20-2006 80,81ல் கமலகாசன் இறந்துவிட்டார் என்று யாரோ புரளியினைக்கிளப்ப யாழ்ப்பாணம் ராணி தியேட்டரில் கறுப்புக்கொடியினைப் பறக்கவிட்டார்கள். அப்பொழுது நிழல் நாயகர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மதிப்பு அதிகம். - கந்தப்பு - 03-27-2006 sinnakuddy Wrote:சினிமாஸ் லிமிட்ட் குணரத்தினத்தின்ரை வெலிங்டனும் லிடோவும் ஒருபடத்தை ஒரு படப்பெட்டியை வைத்துக்கொண்டு. ரீலை அங்கையயும் இங்கையுமா கொண்டுபோய் படம் காண்டினது...உப்படி சிலோன் தியேட்டர்ஸ் வின்சரும் ரீகலும் படம் காட்டினவை...என்ன ஒன்று அரை மணித்தியாலம் முந்தி தொடஙகும் மற்றது பிந்தி தொடங்கும்....ஆர்ட்டிஸ் மணியண்ணை இறந்து போனார்...எம்சியாரையும் சிவாஜியையும் உயிரோடை நிக்கிறமாதிரி வரைவார்...கட்டவுட் வைப்பாங்காள்..யாழ் தியேட்டரிலையெல்லாம்... ஆர்ட்டிஸ் மணியம் சென்ற 15ம்திகதி தனது 82 வயதில் காலமானர் என்று ஈழமுரசு அவுஸ்திரேலியாப்பதிவில் நான் வாசித்தனான் |