Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லு சொல்லு!
#1
<b>மழை வரும்போதுதான்
குடையை தேடுவான்!
மூச்சு முட்டும்போதுதான்
யன்னல் இருப்பதை நினைப்பான்!

நாளை எப்பிடி- சிரிக்க
வழியென்று எண்ணி
இன்றைய பொழுதை
அழுதே- தொலைப்பான்!

உழைக்கும் காலத்தில்
சேமிக்க நினையான்!
உதிரம் செத்து போனதொரு
காலத்தில்- காசை எண்ணி
தேம்பி தேம்பி அழுவான்!

படிக்கும் காலத்தில்
சீ என்ன வாழ்க்கை
என்று சினப்பான்!
காலம் முடிந்தால்
ஐயோ இனி என்னாகுமோ
என் வாழ்க்கை என்று அழுவான்!

அடை மழை பெய்யும் நாளில் -
நீரை சேர்த்து வைக்க நினைக்கான்!
அனல் வீசும் கோடை வந்தால்
குடத்தை தூக்கி கொண்டு
ஊர் ஊராய் திரிவான்!

போர் செய்யும் வீரருக்கு
ஐந்து சதம் கொடுக்கான்!
ஊரெலாம் - குண்டுவீச்சில்
ஒருமூலை சென்றொதுங்கினால்
தமிழர்புனர்வாழ்வு கழகம்
தனக்கு ஒன்றும் செய்யலையென்று
தரைமண்ணை அள்ளி
தூற்றி சபிப்பான்!

இவன் சரியில்லை !
அவன் சரியில்லை !
என்றே பேசி காலம் கழிப்பான்!

நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால்
நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்!
தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்!

யாரிவனோ?
உனக்கு தெரியுமா?
என்னை நானே கேட்கிறேன்
எனக்கு தெரியுமா?

உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு!
கேட்கிறேன் - அதில்
நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8) </b>
-!
!
Reply


Messages In This Thread
சொல்லு சொல்லு! - by வர்ணன் - 03-14-2006, 04:07 AM
[No subject] - by Niththila - 03-14-2006, 09:11 AM
[No subject] - by hari - 03-14-2006, 02:19 PM
[No subject] - by Senthamarai - 03-14-2006, 03:02 PM
[No subject] - by ப்ரியசகி - 03-14-2006, 05:05 PM
[No subject] - by Mathuran - 03-14-2006, 08:49 PM
[No subject] - by வர்ணன் - 03-15-2006, 05:38 AM
[No subject] - by Rasikai - 03-15-2006, 06:50 PM
[No subject] - by RaMa - 03-16-2006, 06:41 AM
[No subject] - by Kalki - 03-16-2006, 11:46 AM
[No subject] - by Kalki - 03-16-2006, 11:49 AM
[No subject] - by தாரணி - 03-16-2006, 03:00 PM
[No subject] - by sagevan - 03-16-2006, 05:33 PM
[No subject] - by kavithan - 03-16-2006, 06:12 PM
[No subject] - by அனிதா - 03-16-2006, 07:28 PM
[No subject] - by வர்ணன் - 03-17-2006, 05:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)