Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காவியனே எங்களின்
#1
வீரக்காய் ஆயயிலே
வீழாத வீரம் பேசி
என்னையும் ஆய்ந்தவனே

நாவல் காய் ஆயயிலே
நல்ல நண்பி நீ எனக்கு
என நா பிறழாது உரைத்தவனே!

காரை முள் குத்தி கடுப்பில்
நான் அழுது துடிக்கையிலே
உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல்
உருகி அழுதவனே!

கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே
காதோரம் வந்து சொன்னேன்,
பேதை என் மனதில் காதல்
பூத்ததென்று.


பூ போன்ற மென்மையான உன் மனதோ
பூகம்பம் நிகழ்ததை போல
ஈச்சம் பழம் ஆயயிலே
இரும்பைப்போல் உரத்துச் சொன்னது.
ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில்
ஒருத்திக்கும் இடமில்லை என்று.
இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப
களமாடி நின்றாய்.

ஆனால் இன்று
வீரம்பழம் பழுத்திருக்கு
நாவல் பழம் நிறைந்திருக்கு
கார்திகையும் படர்ந்திருக்கு.

நீ மட்டும் கார்த்திகைப்பூ
அலங்கரிக்க கல்லறையில்
உறங்குகின்றாய்.



காவியனே எங்களின்
சந்ததிக்காய், களமாடும்
மங்கை என நானுமிங்கே...
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
காவியனே எங்களின் - by Mathuran - 03-12-2006, 11:21 PM
[No subject] - by Mathuran - 03-13-2006, 09:54 AM
[No subject] - by வெண்ணிலா - 03-13-2006, 03:20 PM
[No subject] - by kuruvikal - 03-13-2006, 04:15 PM
[No subject] - by Mathuran - 03-13-2006, 08:01 PM
[No subject] - by Niththila - 03-13-2006, 10:56 PM
[No subject] - by iniyaval - 03-14-2006, 02:06 AM
[No subject] - by அருவி - 03-14-2006, 08:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)