![]() |
|
காவியனே எங்களின் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காவியனே எங்களின் (/showthread.php?tid=552) |
காவியனே எங்களின் - Mathuran - 03-12-2006 வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டும் கார்த்திகைப்பூ அலங்கரிக்க கல்லறையில் உறங்குகின்றாய். காவியனே எங்களின் சந்ததிக்காய், களமாடும் மங்கை என நானுமிங்கே... - Mathuran - 03-13-2006 நன்றி வணக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 03-13-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டும் கார்த்திகைப்பூ அலங்கரிக்க கல்லறையில் உறங்குகின்றாய். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நல்லா இருக்கு கவி. வாழ்த்துக்கள் - kuruvikal - 03-13-2006 ஒரு போராளியின் மனதிருந்து எழும் தாயகத்தின் மீதான கொண்ட கொள்கையின் மீதான பற்றுதலை...காதலாக்கி காட்டிய கவிக்கு நன்றி மதுரன்..! இயற்கையில் இயல்பாய் சாதாரணமாவே எழும் ஆண் - பெண் காதலை கவிதையாக்கி ரசிச்சு ருசிச்சு மகிழ ஆயிரம் பேர் இருக்கார்...ஆனால்..இளமையில் தங்கள் இளமைக் கனவுகளை துடிப்புக்களை துறந்து வாழும் இளசுகளின் மனசு சொல்ல அவர்களுக்குள் அடங்கி இருக்கும் பற்றுதலை அடையாளம் காட்ட யார் இருக்கார்...???! எங்கள் மதுரன் இருக்கிறார் என்ற உணர்வை இக்கவி மூலம் தந்த மதுரனை பாராட்டாமல் இருக்க முடியாது..!
- Mathuran - 03-13-2006 அடுத்தவரின் உள்ளங்களை அன்போடு அணைக்கும் உள்ளங்கள் இப்பூமியிலே இருக்கையிலே நமக்கென்ன குறை. அன்றிலிருந்து இன்றுவரை பண்புதனை கண்டு மனம் பொங்கி மகிழுதய்யா... மனசே சரியில்ல, ஆனால் குரிவிகளின் வரிகளால் வலிகள் எங்கோ தொலைந்து போகின்றன. - Niththila - 03-13-2006 மதுரன் அண்ணா கவிதை நன்றாக உள்ளது வாசித்து முடிக்கையில மனது பாரமாக இருந்தது - iniyaval - 03-14-2006 ஒரு போராளியின் மனதிலிருந்து எழும் தாயகத்தின் மீதான பற்றுதலை தெளிவாக கவிதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி மதுரன் - அருவி - 03-14-2006 தம் இளமைக் கால உணர்வுகளைப் பூட்டி தம்மை தாயகத்திற்காய் தாரைவார்த்து நிற்கும் எம்மிளைஞர் உணர்வுத் துளியொன்றை கவிகளில் வடித்திருக்கும் மதுரனிற்கு பாராட்டுக்கள். |