02-06-2004, 01:00 PM
Karavai Paranee Wrote:அது சுயநலத்துடன் கூடிய திருமணம். நானும் கண்டிருக்கின்றேன்.
யாரோ ஒரு முகம் தெரியாதவரை திருமணம் செய்துகொள்வதிலும் பல நாட்கள் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து எல்லாவிடயங்களும் அறிந்தபின் திருணம் செய்வது சிறந்தது. வாழ்க்கை என்பது இன்றுடன் முடியப்போவது இல்லை. நீண்ட நாட்கள் நாம் இறக்கும்வரை எம்முடன் வரப்போவது வாழ்க்கைத்துணை. ஆகவே காதலித்துவிட்டு பெற்றோரின் முழுச்சம்மதத்துடன் திருமணம் செய்வதை நான் ஆதரிக்கின்றேன்.
சீதனம் என்பது இயலாமையின் வெளிப்பாடுதான்.
உழைத்து சொந்தமாக எல்லாவற்றையும் சேர்த்துவிட்டு கைபிடிக்கவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறக்கும்.
ரொம்ப சரி.
பேசி கல்யாணம் பண்ணுற பக்கம் யார்சரி இல்லையா? எல்லாருமே காதல் பக்கம் தானா?

