Yarl Forum
காதல் திருமணமே சிறந்தது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதல் திருமணமே சிறந்தது (/showthread.php?tid=7506)

Pages: 1 2

காதல் திருமணமே சிறந்த - Mathan - 02-06-2004

காதல் திருமணமே சிறந்தது

லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறது தான் நல்லது. பேசி பண்ணுற கல்யாணம் ஒரு பொம்மை கல்யாணம், இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க பொஸ்?

- vasisutha - 02-06-2004

என்னைப் பொறுத்தவரை கல்யாணம்
என்பதே ஒரு மடத்தனம்.
சாமியாராக போவதே புத்திசாலித்தனம்.

- Mathan - 02-06-2004

அப்பிடி போடு அருவாளை

- Paranee - 02-06-2004

காதலித்துவிட்டு பெற்றோரின் சம்மதத்துடன் செய்யும் திருமணம் சிறந்தது.

- shanmuhi - 02-06-2004

காதலித்துவிட்டு பெற்றோரின் சம்பதத்துடன் சீதனமும் வாங்கி திருமணம் செய்யும் பலபேரை கண்டிருக்கிறேன்.

- Paranee - 02-06-2004

அது சுயநலத்துடன் கூடிய திருமணம். நானும் கண்டிருக்கின்றேன்.

யாரோ ஒரு முகம் தெரியாதவரை திருமணம் செய்துகொள்வதிலும் பல நாட்கள் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து எல்லாவிடயங்களும் அறிந்தபின் திருணம் செய்வது சிறந்தது. வாழ்க்கை என்பது இன்றுடன் முடியப்போவது இல்லை. நீண்ட நாட்கள் நாம் இறக்கும்வரை எம்முடன் வரப்போவது வாழ்க்கைத்துணை. ஆகவே காதலித்துவிட்டு பெற்றோரின் முழுச்சம்மதத்துடன் திருமணம் செய்வதை நான் ஆதரிக்கின்றேன்.

சீதனம் என்பது இயலாமையின் வெளிப்பாடுதான்.

உழைத்து சொந்தமாக எல்லாவற்றையும் சேர்த்துவிட்டு கைபிடிக்கவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறக்கும்.

- kuruvikal - 02-06-2004

திருமணம் என்பது உயர் நிலை மன ஒருங்கு நிலையைக் குறிப்பது....அது அன்பால் பிறப்பது பாசத்தால் நேசத்தால் கருணையால் சகிப்பால் வளர்க்கப்படுவது....அன்பு எந்த நிலையிலும் பிறக்கலாம் அது மனங்களின் தன்மையைப் பொறுத்தது....! காதல் என்று பருவக் கலியாட்டமும் சுற்றுலா வருதலும் இன்னும் என்னென்னவும் திருமணத்தின் நோக்கமல்ல...உண்மையான திருமணத்தின் அர்த்தம் புரிந்த இருமனம் திருமணத்தால் வாழலாம் அதுவும் இல்லறத்தால் ஆன்மீக வழி பற்றி வாழலாம் வள்ளுவன் சொன்னது போல்...! அன்றில் வசி போல் நாமும் ஒண்டிக்கட்டை வாழ்வையே ஆதரிக்கின்றோம்....சுதந்திரப்பறவையாய்....! ஒன்றுபடா உள்ளத்துடன் எப்படி மற்றொரு உள்ளம் ஒன்றுபட முடியும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-06-2004

Karavai Paranee Wrote:அது சுயநலத்துடன் கூடிய திருமணம். நானும் கண்டிருக்கின்றேன்.

யாரோ ஒரு முகம் தெரியாதவரை திருமணம் செய்துகொள்வதிலும் பல நாட்கள் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து எல்லாவிடயங்களும் அறிந்தபின் திருணம் செய்வது சிறந்தது. வாழ்க்கை என்பது இன்றுடன் முடியப்போவது இல்லை. நீண்ட நாட்கள் நாம் இறக்கும்வரை எம்முடன் வரப்போவது வாழ்க்கைத்துணை. ஆகவே காதலித்துவிட்டு பெற்றோரின் முழுச்சம்மதத்துடன் திருமணம் செய்வதை நான் ஆதரிக்கின்றேன்.
சீதனம் என்பது இயலாமையின் வெளிப்பாடுதான்.

உழைத்து சொந்தமாக எல்லாவற்றையும் சேர்த்துவிட்டு கைபிடிக்கவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறக்கும்.

ரொம்ப சரி.

பேசி கல்யாணம் பண்ணுற பக்கம் யார்சரி இல்லையா? எல்லாருமே காதல் பக்கம் தானா?

- kuruvikal - 02-06-2004

இல்ல உந்த காதல் சமாச்சாரம் பாருங்கோ பொதுவா ஒரு தவறுக்கான தேடல் எண்டுதான் எமக்குத் தெரியுது....அதுவும் இன்றைய உலகில்....கலியாணத்துக்கு முன்னால தெரியாத ஒரு பெண்ணை அல்லது ஆணை காதலிச்சு தெரிஞ்சு கொண்டு அது பிடிக்கல்ல எண்டா கழட்டிவிடலாம் அல்லது ஆற்றையன் தலையில கட்டிவிடலாம் என்றால் அங்கு காதல் என்று நீங்கள் ஆரம்பத்தில் கொண்டது என்ன.....???????!

அல்லது காதல் என்று சுத்தோசுத்தென்டு சுத்திப் போட்டு அது அலுத்ததும் பிறகு இன்னொன்டோட தொத்துவியள்...கேட்டா அது பிடிக்கல்ல இப்ப இதை முயற்சிக்கிறன்...இதுவும் சரிவராட்டி இன்னொன்டு....அப்படியே போகும்.....இப்படி உங்கட காதலுக்கு புதுப் புது எல்லையும் கொள்கைகளும் வகுப்பியள்.....
செய்யிற தவறுகளுக்கு உங்கள் அளவில் விளக்கம் கொடுப்பியள்...அது தேவையில்லை...அப்படி என்றால் கள்ளனும் களவெடுக்கிறத்திற்கு நியாயம் சொல்லுவான்....அதை மனிதன் மனிதனாக வாழ அவசியமான நீதி ஒழுக்கம் என்ற மனித இன உயர்நிலைப் பண்புகள் கடந்து ஏற்க முடியாது...!

ஆனால் அப்பா அம்மா பாத்துக் கட்டிற ஆணோ பெண்ணோ அறிமுகம் இல்லாவிட்டாலும் திருமணத்தின் பின் அன்பு கொண்டு வாழ்ந்தால்... அது எல்லை போட்டு வரவழைக்கப்பட்டு இருப்பினும்....மனமும் மனிதனும் தறிகெட்டதாகப் போவது தவிர்க்கப்பட சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என்பதும் அடிப்படை மனித ஒழுக்கமும் பாதுகாக்கப்பட வாய்ப்பும் அதிகம்... எனினும் தனிமனித பண்புகளும் இவை இரண்டிலும் அதிகம் செல்வாக்குச் செய்கின்றன என்பதும் உண்மை.....தனி மனித பண்புகளை எப்படி சீரானதாக ஒழுக்கத்துடன் விருத்தி செய்வது...அதற்கு மனவடக்கம் எனும் ஆன்மீகம் சார் நெறி சிறிதளவேனும் அவசியம்....அது உள்ள எவரும் கலியாணத்தின் பின்னும் காதலிக்கலாம்.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- shanthy - 02-06-2004

vasisutha Wrote:என்னைப் பொறுத்தவரை கல்யாணம்
என்பதே ஒரு மடத்தனம்.
சாமியாராக போவதே புத்திசாலித்தனம்.

எப்பவசி பயணம் ?
:?: காவி அனுப்பி வைக்க விலாசத்தைத் தந்துதவும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- shanthy - 02-06-2004

BBC Wrote:அப்பிடி போடு அருவாளை
கவனம் கொலைவாழ் விழப்போகுது. Idea

- Mathan - 02-06-2004

shanthy Wrote:
BBC Wrote:அப்பிடி போடு அருவாளை
கவனம் கொலைவாழ் விழப்போகுது. Idea

அரிவாளை அதுக்கு தானே போடுறம் மிஸ்

- kuruvikal - 02-07-2004

சாமியார்.....ஒரு பிரேமானந்தாவும் ஆகலாம்...விவேகானந்தராகவும் ஆகலாம்.....வசி நீங்கள் விரும்புவது.....????! நீங்கள் புத்திசாலிதான் போங்கள்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 02-08-2004

shanthy Wrote:எப்பவசி பயணம் ?
:?: காவி அனுப்பி வைக்க விலாசத்தைத் தந்துதவும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் சாமியாராகி 1 வருசம் ஆச்சுது.
Cry குருவி நினைக்கிறமாதிரி சாமியார் இல்லை. :evil:
-----------------------------------------------

காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது!
------------------------------------

அவசரப்பட்டு திருமணம் செய்து
அழுவதேனடா?
ஆத்தில பாதி சேத்தில பாதி
அலைவதேனடா!
---------------------------------------

என்ற பாடல்கள் எல்லாம் உங்களுக்காகத் தான் பாடி வைத்தார்கள்.
:wink:

- kuruvikal - 02-08-2004

அட இப்பதானா ஒரு வருசம்...நாங்க பிறந்ததில இருந்து.....! அது சரி.... நாங்க நினைக்காத சாமி எண்டா அதென்ன சாமி.....சொல்லுங்க சாமி...வசியானந்தா.....!

வாழ்க வசியானந்தா <img src='http://www.yarl.com/forum/images/avatars/6787782994012a5c507ddc.jpg' border='0' alt='user posted image'>... பெருகுக அவர் புகழ்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-08-2004

vasisutha Wrote:
shanthy Wrote:எப்பவசி பயணம் ?
காவி அனுப்பி வைக்க விலாசத்தைத் தந்துதவும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நான் சாமியாராகி 1 வருசம் ஆச்சுது.
குருவி நினைக்கிறமாதிரி சாமியார் இல்லை.
-----------------------------------------------

காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது!
------------------------------------

அவசரப்பட்டு திருமணம் செய்து
அழுவதேனடா?
ஆத்தில பாதி சேத்தில பாதி
அலைவதேனடா!
---------------------------------------

என்ற பாடல்கள் எல்லாம் உங்களுக்காகத் தான் பாடி வைத்தார்கள்.
வசி.. பாட்டு எங்கயோ உதைக்குது..
:?: :?: :?:

- shanthy - 02-08-2004

kuruvikal Wrote:அட இப்பதானா ஒரு வருசம்...நாங்க பிறந்ததில இருந்து.....! அது சரி.... நாங்க நினைக்காத சாமி எண்டா அதென்ன சாமி.....சொல்லுங்க சாமி...வசியானந்தா.....!

வாழ்க வசியானந்தா h[img]ttp://www.yarl.com/forum/images/avatars/6787782994012a5c507ddc.jpg[/img]... பெருகுக அவர் புகழ்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<span style='font-size:30pt;line-height:100%'>அரோகரா வசியானந்தா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>

- kuruvikal - 02-09-2004

சாமி வசியானந்தா...பொதுப்பணி மன்றம்....அடியார் மன்றம்...பக்தைகள் மன்றம்...இன்னும் பல மன்றங்கள் சார்பில் சாமியின் முதலாவது காதல் லீலா சிந்தனை....இதோ...

சிந்தனை...No. 1

காதல் பொய்யானது
வாழ்க்கை மெய்யானது!

சாமி வசியானந்தாவுக்கு அரோகரா ....சாமி வசியானந்தாவுக்கு அரோகரா ....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vasisutha - 02-09-2004

Mathivathanan Wrote:வசி.. பாட்டு எங்கயோ உதைக்குது..
:?: :?: :?:
Cry Cry
------------------
பெற்றோர் பார்த்து செய்து வைக்கும்
திருமணமே சிறந்தது. ஏன் தெரியுமா?
கணவன் மனைவிக்குள் சண்டை வரும்போது,
நீங்கள் தானே கட்டிவைத்தீங்கள் என்று
பெற்றவர்களுடன் துணிந்து சண்டை போடலாம். :evil: காதல் திருமணத்தில் இது முடியாது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- nalayiny - 02-09-2004

காதல் திருமணம் தான் சிறந்தது சண்டை பிடித்தால் அடுத்த நிமிடமே சமாதனமாகிறது காதல் திருமண தம்பதிகள் தான்.சண்டை எண்டாலும் அடுத்த வீட்டக்கும் தெரியாது.(சண்டை கூட நகைச்சுவையாகிப்போம். (தாராளமாக பிறகு சொல்லி சிரிக்கலாம் எதையா? சண்டை பிடிச்ச கதையைத்தான்.) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink:

அம்மா அப்பா பாவம் வயது போன நேரத்திலை அவர்களை யோசிக்க வைக்க கூடாது.

(பேசித்திருமணம் எண்டால் வசிசொன்ன மாதிரி பாவம் அவர்களிற்கு வயது போன காலத்தில் ஏன் கரைச்சலைக்கொடுப்பான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கட்டாயம் காதலிக்கும் போது பரிமாறிக்கொண்ட கடிதங்களை சேற்து வையுங்கள்.( அவற்றை திருமணத்தின் பின் வாசிக்கிறபோது சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்.)