Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரின் தமிழக சிம்மக் குரல் விடுதலையாகிறது...
#3
வைகோ உடல் நலம் பாதிப்பு: நீதிமன்றம் வர முடியவில்லை இன்றே விடுதலை ஆவார்?

பூந்தமல்லி:

வேலூர் சிறையிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நீதிமன்றத்துக்கு வர முடியாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சிறையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்றே விடுதலையாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நேற்று நீதிமன்றம் வந்தபோதே வைகோ, வாந்தி எடுத்தவாறே மயங்கி சரிந்தார். கடந்த சில நாட்களாகவே சிறையில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார் வைகோ. இந் நிலையிலும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

நேற்று நீதிமன்றத்துக்கு வந்த அவர் ஜாமீன் தொடர்பான உறுதிமொழிகளை அளித்தார். அப்போது மிகவும் களைத்துப் போய் காணப்பட்டார். இந் நிலையில் பகல் உணவுக்காக நீதிமன்றத்தில் ஒரு அறைக்குச் சென்றார் வைகோ. அங்கு கட்சியினர் கொடுத்த உணவை வேண்டாம் வாங்க மறுத்துவிட்டார் வைகோ.

வேலூர் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட எலுமிச்சை சாதத்தையே உண்டார். அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வைகோவுக்கு வாந்தி ஏற்பட்டது.

வாந்தி எடுத்த களைப்பில் மயங்கிய வைகோ அங்கிருந்த ஒரு பெஞ்சில் சரிந்தார். படுத்திருந்த அவருக்கு வியர்த்துக் கொட்டியதால் மின் விசிறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. வெந்நீரைக் குடித்துவிட்டு படுத்துவிட்டார்.

பின்னர் மீண்டும் நீதிமன்ற விசாரணை நடக்க ஆரம்பித்தவுடன் வைகோ அழைத்து வரப்பட்டார். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவரை நீதிபதி தொடர்ந்து ஓய்வெடுக்கச் சொன்னார்.

வேலூர் செல்லும் நிலையில் வைகோவின் உடல் நிலை சரி இல்லாவிட்டால் சென்னையிலேயே அவருக்கு சிகிச்சை தரலாம் எனவும் நீதிபதி கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட வைகோ வேலூர் சிறைக்குச் செல்லத் தயார் என்று கூறிவிட்டு சோர்வாகவே வேனில் ஏறிவிட்டார்.

இந் நிலையில் இன்று அவர் ஜாமீன் தொகையைக் கட்ட நீதிமன்றம் வர வேண்டி இருந்தது. ஆனால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வரவில்லை. அவருக்கு சிறையிலேயே சிகிச்சை தரப்படுகிறது.

முன்னதாக நேற்று வைகோவின் ஜாமீன் மனு மீது குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது நாளை (இன்று) வைகோவுக்காக ஜாமீன் கையெழுத்துப் போடுபவர்களையும் வைகோவின் பாஸ்போர்ட்டையும் கொண்டு வாருங்கள் என நீதிபதி வைகோவின் வழக்கறிஞர்களிடம் கூறினார்.

ஆனால், பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது என்பதை வைகோவே மறந்துவிட்டதால் பெரும் சிக்கல் எழுந்தது. கைதானபோது பாஸ்போர்ட்டையும் வாங்கினார்களா என்று நினைவில்லை. இதனால் நேற்றே ஜாமீன் கிடைப்பது தள்ளிப் போய்விட்டது.

இன்றே ஜாமீன் கிடைத்தாலும் நாளை தான் சிறையில் இருந்து வெளியே வருவார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றே அவரை சிறையிலிருந்து விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வைகோவை வரவேற்க மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளை மதிமுகவினர் செய்து வருகின்றனர். வேலூரில் அவருக்கு பெரும் வரவேற்பு தரவும் சென்னையில் திமுகவுடன் சேர்ந்து வரவேற்பு தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மாபெரும் பொதுக் கூட்டத்துக்கும், வரவேற்புக்கும் அந்த ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

--------------
thatstamil.com
--------------

<img src='http://thatstamil.com/images18/vaiko-100.jpg' border='0' alt='user posted image'>

வை.கோ - நீ
எம் நெஞ்சில் வாழும் கோ
சிங்காரியின் கொடுங்கோல்
கோவே உன்னை வாட்டலாம்
வதைக்கலாம்
எம் ஆத்மா தந்தும்
உன் ஆயுள் காப்போம்
எழுந்திரு நிமிர்ந்து நில்
இறையும் உன் துணை நிற்கும்...!

-----அன்பின் ஈழத்தமிழன்...!


கருணாநிதியின் அன்பில் நனைந்த வைகோ!!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 02-06-2004, 12:30 AM
[No subject] - by kuruvikal - 02-06-2004, 12:07 PM
[No subject] - by kuruvikal - 02-07-2004, 12:26 PM
[No subject] - by Mathivathanan - 02-07-2004, 01:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)